ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன?' - இந்த வரலாறு முக்கியம் :

மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன. வழக்கம் போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி...

இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். 1/N
அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஏற்றுமதி செய்யச்சொல்லி மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

அது இருக்கட்டும். 2/N
அலோபதி மருந்துகளை இந்திய மருந்துக் கம்பெனிகளோ, விஞ்ஞானிகளோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இந்தியா மருந்து உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக, உலகின் மருந்தகமாக திகழ்வது எப்படி? இதை சாத்தியமாக்கியவர் யார்?

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகள் பெரும்பாலானவற்றை கண்டறிந்தது 3/N
மேற்கத்திய நாடுகள். அவற்றின் காப்புரிமையும் அவர்களிடமே இருந்தது. அந்த கம்பெனிகள், இந்தியாவில் மருந்துகளை விற்பனை செய்து வந்தன. அவை விலை அதிகமானவை. எனவே, மருந்துகள் வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த நேரத்தில் இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். 4/N
இந்திய மக்களின் நலம் காக்க, உலகின் வல்லரசுகள் அனைத்தையும் பகைத்துக்கொண்டு ஒரு முடிவெடுத்தார்.

இந்தியாவில், உணவு மற்றும் சுகாதாரம் தொடர்புடைய PRODUCT காப்புரிமைகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், இந்திய பயன்பாட்டிற்கு மருந்துகளைத் தயாரிக்கும் சட்டரீதியான உரிமை
5/N
இந்திய கம்பெனிகளுக்குக் கிடைத்தது. அதாவது, பல்லாண்டு காலமாகப் பெரும் பொருள் மற்றும் உழைப்பின் மூலம் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கிய மேற்கத்திய கம்பெனிகளின் மருந்துகளை `காப்பி' அடித்து இந்திய கம்பெனிகள் தயாரிக்கலாம். நெறிமுறைகளின்படி தவறான நடவடிக்கை என்றாலும், காப்பியடிப்பது
6/N
7/N
இந்திராகாந்தி கொண்டு வந்த சட்டப்படி சரி. இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல். எனவே, மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன.

வழக்கம்போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி. எனவேதான் அவர் இரும்புப் பெண்மணி. சட்ட உரிமையை இந்திரா

8/N
காந்தி கொடுத்தாலும், மருந்துகளைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு வேறு சிக்கல் இருந்தது. மருந்துகளைக் காப்பியடித்து தயாரிக்கும் திறமைகூட இந்திய கம்பெனிகளிடம் இல்லை. இந்த இடத்தில் இந்திராகாந்திக்கு கை கொடுத்தது, அவர் தந்தை பண்டித நேரு தொடங்கிய நிறுவனங்கள்,
9/N
புனேயில் உள்ள CSIR-National Chemical Laboratory மற்றும் ஹைதராபாத்தில் உள்ள CSIR-Indian Institute of Chemical Technology. இங்கே பணியில் இருந்த விஞ்ஞானிகளை மருந்துகள் தயாரிக்க கேட்டுக்கொண்டார். எளிதான விஷயம் இல்லை என்றாலும், இந்த ஆய்வக விஞ்ஞானிகள் பல மருந்துகளை

10/N
Reverse Engineering மூலம் தயாரித்து, அதை இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கவும் பயிற்சி அளித்தனர்.

இதன் மூலம் இந்திய மருந்துக் கம்பெனிகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றன. இதுதான் Generic Pharma என்பதன் தொடக்கம். இதனால்தான்,

11/N
அமெரிக்காவில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் Paracetamol, இந்தியாவில் 50 பைசாவுக்கு கிடைக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை அனுப்பச் சொல்லி அமெரிக்க அதிபர் கேட்பதற்கும் இந்திரா காந்தி எடுத்த முடிவுதான் காரணம்.

இந்திரா காந்தியின் இந்த அபரிமிதமான துணிச்சல்மிக்க நடவடிக்கையால் இந்தியா

12/N
உலகின் மருந்தகமாக மாறியது. அதற்கு CSIR-NCL மற்றும் CSIR-IICT விஞ்ஞானிகள் உறுதுணையாக இருந்தனர்.

எல்லா சாதனைகளுக்குப் பின்னும் UNSUNG HEROES இருப்பார்கள். இந்தச் சாதனைக்குப் பின் இருக்கும் UNSUNG HEROES தமிழர்கள். இந்த மருந்துகளைத் தயாரிக்கும் கொள்கலனில் வேதிப்பொருள்களை
13/N
வாளிகளில் தூக்கி ஊற்ற வேண்டும். மிகவும் ஆபத்தான பணி. இதற்காகத் தமிழகத்தில் இருந்து ஏறக்குறைய 600 குடும்பங்கள் புனேவுக்கு வந்தன. அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் CSIR-NCL-ல் இருக்கிறார்கள்.

இங்கே விஞ்ஞானியாகச் சேர்ந்தபோது, அங்கிருந்த தமிழ் குடும்பங்களைப் பார்த்து ஆச்சர்யமாக
14/N
இருந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள இந்த ஆய்வகத்தில் இவ்வளவு தமிழர்கள் எப்படி வேலைக்கு வந்தார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன், பதிலில்லை. தொடர்ந்து தேடியபோது கிடைத்ததுதான் இந்த வரலாறு.

ஒவ்வொரு இந்தியனும் ஒரு மாத்திரையை விழுங்கும்போது, நினைவில்
15/N
வைக்க வேண்டியது, இந்திராகாந்தி, CSIR விஞ்ஞானிகள், 600 தமிழ் குடும்பங்கள் மற்றும் Generic Pharma கம்பெனிகள்.

பின் குறிப்பு 1: புனேவில் CSIR-National Chemical Laboratory-ல் மாணவராக இருந்த அஞ்சி ரெட்டி தொடங்கியதுதான்

16/N
உலகப்புகழ் பெற்ற இந்திய மருந்துக் கம்பெனி Dr Reddy's Lab. நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் பல Dr Reddy's Lab தயாரித்ததாக இருக்கும்.

பின் குறிப்பு 2: இந்திரா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன் இந்தியா தயாரித்த Active Pharma Intermediate மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க
17/N
டாலர்கள். 2005-ம் ஆண்டில் இது 2000 மில்லியன் அமெரிக்க டாலர்களாக ஆக உயர்ந்தது.

இன்றைக்கு, உலகின் மருந்து உற்பத்தியில் 12% இந்தியாவினுடையது. இந்திராகாந்திக்கு முன்பு இந்திய மருந்து சந்தையில் சர்வதேச கம்பெனிகளின் பங்கு 70%.

2005-ம் ஆண்டு இந்திய கம்பெனிகளின் பங்கு 77%. நிலைமை
18/N
தலைகீழாக மாறிவிட்டதைக் கவனியுங்கள்.

பின் குறிப்பு 3: சமீபகாலமாக விண்ணில் நிகழ்ந்தவற்றை விதந்தோதி, மண்ணில் நிகழ்ந்ததை மறந்துவிடும் பழக்கம் வந்துவிட்டதோ என்ற ஐயம் என் போன்றவர்களுக்கு வருகிறது.

- முனைவர். கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

~விகடன்~
19/N
You can follow @sankar100382.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: