1/ எழுத்தாளர் ஜெயமோகன் பதிவு :

நேற்று காலை பத்து மணி அளவில் சுகாதாரப் பணியாளர் இருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எங்கள் வீடு வெளியே பூட்டியிருந்தமையால் சென்றுவிட்டு மீண்டும் வந்தார்கள். இரண்டு பெண்கள். முகக்கவசமும் கைக்கவசமும் அணிந்தவர்கள். ஒரு கணிப்பொறிப் பட்டியலை
2/ வைத்துக்கொண்டு பெயர், வயது, உடல்நிலை ஆகியவற்றை சரிபார்த்தனர். கோவிட் வைரஸ் எப்படி வரும் என்பதை ஓரிரு வரிகளில் சொல்லி, வெளியே போகவேண்டாம், கேட் உட்பட எதைத்தொட்டாலும் கை கழுவவேண்டும் என்பது போன்ற செய்திகளையும் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

நண்பர் லக்ஷ்மி மணிவண்ணனிடம் அவரிடம்
3/ மாத்திரைகள் எல்லாம் இருக்கின்றனவா என்று கேட்டேன். அவை மருத்துவத் துறையால் இரண்டு மாதத்திற்கு தேவையான அளவு முன்னரே அளிக்கப்பட்டுள்ளன, எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னார்.

இன்று காலை மொட்டைமாடியில் நின்றிருக்கையில் அவர்கள் எங்கள் குடியிருப்புக்குப் பின்பக்கம் செல்வது
4/ தெரிந்தது.நாட்டிலுள்ள அத்தனை வீடுகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் நேரில் சென்று ஆராய்வது அவர்களின் பணி. காய்ச்சல், இருமல் பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிந்தால் அத்தகவலை அறிவிப்பார்கள். அடுத்தகட்ட மருத்துவக்குழு வருகிறது. கோவிட்டுக்கான வாய்ப்பு உண்டு என்று தெரிந்தால்
5/ சுவரில் அறிவிப்பை ஒட்டுகிறார்கள். அந்த இடத்தையே தனிமைப்படுத்துகிறார்கள்.

இந்தியா இன்று கோவிட் வைரஸை எதிர்கொள்வதில் எடுத்துக்கொள்ளும் பெருமுயற்சி மிகமிக அறிவியல்சாரந்தது. ஏற்கனவே சிக்கன்குனியா, சார்ஸ்: அதற்குமுன் காசநோய், மலேரியா,இளம்பிள்ளைவாதம்: அதற்கு முன் அம்மைநோய்
6/ காலரா ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவப் பின்புலம் கொண்டது. பகுதிகளாக பிரித்து நேரடி மானுடக் கண்காணிப்பில் வைத்தல், தனிமைப்படுத்துதல், இலவச சிகிழ்ச்சை என மூன்று பகுதிகள். அவை வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன

மிக எளிமையான அடித்தட்டு ஊழியர்கள் இவர்கள்.
7/ ஊழியர் ஒருவருக்கு ஒருநாளுக்கு நாற்பது வீடுகள் கணக்கு. இருவர் இருவராகச் செல்கிறர்கள். இந்தியா என்ற இந்த மாபெரும் நிலப்பரப்பை, நூறுகோடி மக்களை அவ்வண்ணம் நேரில் சென்றடைவதற்கு மிகப்பெரிய உழைப்பும் அறிவியல்பூர்வமான திட்டமிடலும் தேவை. இந்த தகவல்களை பதிவுசெய்து ஒருங்கிணைத்து
8/ அறிக்கைகளாக ஆக்குவதற்கும் நவீன புள்ளியியல் சார்ந்த திட்டமிடலும் முன் அனுபவமும் தேவை. இந்தியா அதற்கென்றே உருவாக்கிக்கொண்ட பல அறிவியல்ரீதியான கொள்கைகள், சுருக்கும் முறைமைகள் உள்ளன.

இந்த ஊழியர்கள் முன்னரும் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். சிக்கன்குனியா வந்தபோது ஒவ்வொரு
9/ வீட்டு கொல்லைப்பக்கமும் சென்று நீர் தேங்குகிறதா என்று பார்தனர். மலேரியா பரிசோதனைக்காக வந்தனர். ஆண்டுக்கு இரண்டுமுறையாவது வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் மாபெரும் மக்கள்தொகை மிகப்பெரிய சவால். அதை சிறுகச்சிறுகக் கையாண்டு பழகியிருக்கிறார்கள். இந்த அமைப்பு இப்போது
10/ உருவாக்கப்பட்டது அல்ல, என்றும் இருந்துகொண்டிருப்பது

நானும் சில ஆண்டுகளுக்கு முன் இதைப்போன்ற வேலைகளைச் செய்தவன் என்றமுறையில் இதிலுள்ள சவால்களை அறிவேன். இதில் எட்டு அரசுத்துறைகள் ஈடுபட்டுள்ளன. அவற்றை ஒருங்கிணைக்கும் அரசதிகாரிகளின் அடுக்கு வரிசை உள்ளது. இந்த அமைப்பு
11/ பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது என்ற தொன்மம் உண்டு, அது பொய். அது ஷெர்ஷா காலம் முதல் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் அத்தனை அதிகாரிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் ஷெர்ஷா காலத்து பெயர்கள்தான் – சிரஸ்தார், தாசில்தார், ஜமாபந்தி. பிரிட்ரிஷார் அதை மேலும் ஒருங்கமைத்தனர்.
12/ ஷெர்ஷாவுக்கு முந்தைய வரலாற்றுக்காலகட்டத்தில் வேறுவகையில் இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

மாறுபட்ட நில அமைப்பும்,மையப்படுத்தபடாத சமூக அமைப்பும் கொண்ட இந்தியா என்னும் தேசத்தில் இந்தியா செய்யும் இந்தப்பணி, இதன் நடைமுறை அறிவியல், உலகநாடுகளேகூட
13/ கற்றுக்கொள்ளவேண்டியது. இன்றைய செய்திகளை வைத்துப் பார்த்தால் சர்வாதிகாரம் திகழும் சில நாடுகளைத் தவிர வேறெங்கும் இத்தகைய முழுமையான ஒருங்கிணைப்பு நிகழவில்லை என்றே தெரிகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் கிராமசேவக் என்ற பெயரில் தொடங்கி இன்று பல வகையான ஊழியர்களைக்
14/ கொண்டதாக விரிந்திருக்கும் மாபெரும் கிராமநிர்வாக அமைப்பு ஒன்று இங்கே உள்ளது. அந்த ஊழியர்களைப் பயிற்றுவிப்பதில் திண்டுக்கல் காந்திகிராமம் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு மிகப்பெரியது

இதில் முக்கியமான பங்கு வகிப்பவர்கள் இந்தக் கடைநிலை ஊழியர்கள். இந்த ஊழியர்கள் அரசை
15/ ஏமாற்றலாம், வேலைசெய்யாமலிருக்கலாம். அத்தனை எண்ணிக்கையில் இருக்கும் அவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆனால் அப்படிச் செய்வதில்லை. இந்தியாவின் கடைநிலை ஊழியர்களுக்கு அவர்களின் வேலைபற்றிய பெருமிதம் இருக்கிறது. அது மாபெரும் ஊக்கசக்தி.

அந்த பெருமிதம் தாங்கள் அரசூழியர்
16/ என்பதிலிருந்து வருகிறது. இந்தியாவின் வல்லமை அரசூழியர்களே. சுனாமி உட்பட நெருக்கடிகளில் அதை கண்கூடாகக் கண்டு பதிவுசெய்திருக்கிறேன். இந்த மாபெரும் அரசூழியர் அமைப்பு பொருளியல்சுமை என்றும் அதை இல்லாமலாக்கவேண்டும் என்றும் ‘நிபுணர்கள்’ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எப்போதும்
17/ அதற்கு எதிரானவனாக இருந்திருக்கிறேன். நூறு கட்டுரைகளாவது எழுதியிருப்பேன். அப்படி அரசூழியர் அமைப்பை அழித்த நாடுகள் எல்லாம் கதறிக்கொண்டிருக்கின்றன.

மாடியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். மெலிந்த கரிய பெண்கள். வீடுகள் முன் சென்று நின்று கேட்டை தொடாமலேயே கூவி
18/ அழைக்கிறார்கள். பலமுறை. உள்ளிருந்து ஒருவர் வருகிறார். அவர் எவ்வகையிலும் இனிய முகம் காட்டுவதில்லை. செய்திகளை கேட்டு பதிவுசெய்துவிட்டு திரும்பிச் செல்கிறார்கள். தோளில் பை போட்டிருக்கிறார்கள். அதில் குடிநீர். ஒருநாளில் இருபதுகிலோமீட்டர் நடக்கவேண்டும். இந்தியா என்பது இவர்களே.
19/ மொத்த நகரமும் உறைந்திருக்கிறது. தெருநாய்கள் அன்றி எங்கும் உயிரசைவே இல்லை. மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன. அந்த இரு பெண்களும் தெருக்களில் தங்களுக்குள் பேசிக்கொண்டே செல்கிறார்கள். எஞ்சியிருக்கும் உயிரசைவு என.

இன்று காலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு
20/ நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.

- நன்றி திரு நாகராஜன் வாட்ஸ்அப் பகிர்வு
You can follow @GopalanVs.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: