இஸ்லாமிய ரசிகனின் உணர்வுபூர்வ ஒரு பகிர்வு பதிவு..

கொரானா விஷயத்தில் எவனோ சில பெயர் தெரியாத சிலரால் அவர்களின் அறிவுகெட்ட தனமான தவறால் ஒவ்வொன்றையும் கடந்து செல்லும்போது ஏற்படும் பெரிய மன உளைச்சலின் நடுவே ஒரு பயணம்..

(1/18)
ஒவ்வொன்றையும் புன்முறுவலோடு மெல்லிய புன்னகையோடு சிரித்தபடியே கடந்து செல்கிறேன்

இந்தப் பத்து நாட்களில் நான் எதிர்கொண்ட பல நபர்களிடமும் நான் கேட்ட வார்த்தைகள்

எனக்கு நெருங்கிய இந்து நண்பன்: என்ன மாப்ள உங்க ஆளுங்க தான் ஃபுல்லா பரப்பி விட்டுட்டாங்க போலயே

(2/18)
தினமும் என்னோடு பயணிக்கும் ஒரு நெருங்கிய ஒரு பெண் தோழி:

சாதாரணமாக சிரித்துக்கொண்டு வழக்கம் போல் என்னை வழக்கமாக செய்யும் நக்கல் தான் இருந்தாலும் மனம் ஒரு கணம் வலித்தது

அவள் சொன்ன வார்த்தை உங்களையெல்லாம் பாகிஸ்தானுக்கு விரட்டவேண்டும்டா

(3/18)
வலிகளை கடந்து சிரித்துக்கொண்டு அமைதியாக சென்றேன். அடுத்ததாக நெருங்கிய நண்பனின் தங்கை ஒருத்தி

அண்ணா உங்க முஸ்லிம் ஆட்கள் தான் அதிகமாக பரப்பி விட்டார்களாமே?
உண்மையா அண்ணா

நான் பதில் எதுவும் கொடுக்காமல் ஒரே ஒரு புன்சிரிப்பை பதிலாக உதிர்த்துவிட்டு அந்த இடத்தை கடந்து வந்தேன்

(4/18)
அடுத்ததாக நான் யாரென்று தெரியாத அந்நிய நண்பர்கள் சிலர் ஒரு ரயில்வே ரோட்டை கடக்கும் போது பேசிக்கொண்டே சென்றார்கள்

இந்த துலுக்கனுங்க தாம்ப்பா எல்லா இடத்துலயும் பரப்பி விட்டார்களாம்

அதைக் கடந்து சிரித்தபடியே அடுத்த இடத்தை நோக்கி என்னுடைய பயணம்

(6/18)
இப்படி பல இடங்களில் மிக நெருங்கியவர்கள் கூட சிரித்தபடியே பேசும் சில வார்த்தைகள் மனதில் மிகுந்த காயத்தை ஏற்படுத்தினாலும் அவைகளை எல்லாம் தாண்டி விட்டு அவைகளுக்கெல்லாம் நான் தேடும் ஒரே மருந்து என் தலைவர் ரஜினியின் முகம் தான்

(7/18)
பல ஏசல் பேச்சுக்களை எல்லாம் கடந்து வந்து என் தலைவரின் முகத்தை நான் காணும் போது அவைகளை மறந்துவிட்டு அவரை ரசிக்க ஆரம்பித்து விடுவேன்

என்னையுமறியாமல் எனக்குள்ளே ஒரு சிலிர்ப்பு

(8/18)
அந்த தெய்வீக ஆன்மீக அமைதியான முகத்தை பார்க்கும்போது ஏதோ இந்த ஏசல் பேச்சுக்களுக்கு எல்லாம் விடை அளிப்பது போல அவர் முத்துக்கள் உதிர்த்த புன்னகை இருக்கும்

(9/18)
அவரால் உதவி பெற்றவர்கள் அவரால் வாழ்வு பெற்றவர்கள் அவரால் வளர்ந்தவர்கள் இப்படி எண்ணற்ற துரோகிகள் எல்லாம் அவரை ஏசி பேசி காயப்படுத்தும் போது அமைதியாக சிரித்துக்கொண்டே கடந்து செல்லும் அவரது பக்குவத்தை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு

(10/18)
சரி ஆயிரம் பேசினாலும் நம் தொப்புள் கொடி உறவான மாமன் மச்சான் சகோதரன் தானே பேசுகிறான் என அன்போடு சிறு வலியோடு அமைதியாக கடந்து சென்று விடுகிறேன்

மதமாச்சரியங்களை நான் மறப்பது எல்லாம் மதங்களைக் கடந்த இந்த மாமனிதனுக்காகத்தான் என்பதை எனது மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்

(11/18)
சிறுபிள்ளையில் இருந்தே அந்த அமைதியான ஆன்மீகவாதியின் முகத்தைப் பார்த்தே வாழ பழகிக் கொண்டேன் அவரை என் வழிகாட்டியாய் எடுத்துக்கொண்டேன் அவர் என் உள்ளத்தில் புகவில்லை என்றாள்

(12/18)
நானும் ஏதாவது ஒரு அடிப்படைவாத முஸ்லிம் அமைப்பின் உறுப்பினராக இருந்திருப்பேன் ஏனோ எனக்குள் கற்பக விருட்சமாய் உதைத்த அந்த ஆன்மீக தலைவனின் ஜோதி இன்றுவரை கொஞ்சம் கூட குறையாமல் எரிந்து கொண்டிருக்கிறது

என்ன ஒரு சிறு வருத்தம் முஸ்லிமாக பிறந்தது என் தவறு அல்ல

(13/18)
இப்படிப்பட்ட பல சோதனையான பேச்சுக்களைக் கேட்கும் பல நேரங்களில் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் இஸ்லாமியர்களைப் பற்றி பெருமையாக குறிப்பிட்ட சில பேச்சுக்களை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்வேன்

(14/18)
ஒரு முஸ்லிமாக இருக்கும் நான் ரஜினி ரசிகனாக இருக்கும் காரணத்தினால் எங்களுடைய சமுதாயத்தை சேர்ந்த பலரிடமும் எவ்வளவு ஏசல்களைத் தாண்டி வர வேண்டியது இருக்கிறது என்பதை சொல்லி மாளாது

அவ்வளவு கேள்விக்கணைகள்

அவர் சங்கி

அவர் ஆர்எஸ்எஸ் ஏஜென்ட்

அவர் பாஜக

(15/18)
அவர் காவி
என்று அவர் மீது முத்திரை குத்தும் பல இஸ்லாமியர்களை பகைத்துக்கொண்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்து அவர் தான் எனக்கு முக்கியம் அவரை விட வேறு யாரும் முக்கியமல்ல என்று எடுத்துரைத்து வரும்போது என் இன சகோதரனே என்னை பகையாளி ஆக பார்க்கும் அவலங்களில் கூட ஒருக்காலும்

(16/18)
என் மானசீக தலைவனை நான் மறந்ததில்லை

எது எப்படியாகினும் சரி என் உடம்பில் ஓடுவது ரஜினி ரத்தம்

வாழ்வோ தாழ்வோ இறுதிவரை சூப்பர்ஸ்டார் ரஜினிரசிகன் என்பதை நான் பெருமையுடன் ஏந்திக்கொண்டு

(17/18)
பல ஏசல் பேச்சுக்களையும் அவருக்காக பொறுத்துக்கொண்டு ஒரு தேசப்பற்றுள்ள இந்தியனாக வாழ்கிறேன் என்பதே இறைவன் எனக்கு கொடுத்த பெரிய ஒரு வரம் தான்

வாழ்க இந்தியா வளர்க தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் புகழ் ஜெய்ஹிந்த்.

(18/18)

@soundaryaarajni @rajinikanth
You can follow @Samuelclicks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: