எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி :
பலரும் எம்.பி, எம்.எல்.ஏ தொகுதி நிதி என்றால், அதை அவர்கள் விருப்பத்துக்கு எடுத்து செலவு செய்யலாம் என கருதிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்கு இருக்கும் check power கூட இவர்களுக்கு இல்லை. மேலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை
எப்படி, எந்தெந்த திட்டங்களுக்கு, எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என மிகத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் உண்டு. அந்தந்த மாவட்ட கலெக்டர், ப்ராஜெட் ஆஃபிஸர் வழியேதான் பணம் அளிக்கப்படும். இவர்கள் எந்தெந்த திட்டம் உதா : மின்விளக்கு, போர் மோட்டார், சாலை, பள்ளி, மருத்துவமனை கட்டிடம் என..
கடிதம் தருவதோடு சரி. அதற்கான டெண்டர், சாங்ஷன், பில் பேமெண்ட் எல்லாமே அரசுத் துறைகள் மூலம்தான் செல்லும். அதிலும், பள்ளிக் கட்டிடத்துக்கு, அரசுக் கட்டிடத்துக்கு என வலுக்கட்டாயமாக வேறு நிதியை ஒதுக்கிக் கொள்வார்கள். இந்த எம்.பி, எம்.எல்.ஏ நிதி என்பது எதற்காக முதலில் தரப்பட்டது?
மக்கள் பிரதிநிதிகள் அவரவர் தொகுதிகளுக்கு செல்லும்போது, அங்குள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைப்பார்கள். பெரும்பாலும் அவை தெருவிளக்கு, குழாய், கிராம சாலை என எளிய கோரிக்கையாகவே இருக்கும். அவைகளை முறைப்படி அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்க்க இருக்கும் நடைமுறைகள் மாதக்கணக்கில்
நேரமெடுக்கும். இந்த தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் உடனுக்குடன் செய்து தரலாம். இந்த நிதி மக்களின் உடனடி தேவைகளை அறிந்து அதை மக்கள் பிரதிநிதிகள் செய்து தர உதவிய மிகச் சிறந்த வழிமுறை. இப்போது இந்த எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியைதான் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது நேரடியாக மக்களுக்கு இழைக்கும் பெரும் அநீதி. உதாரணத்துக்கு எனது நண்பர் @kshanmugamdmk தனது பொள்ளாச்சித் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தித் தருவதற்கு முன்னுரிமை தந்து செய்து தருகிறார். அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரு தனியார்
பள்ளிக்கு இணையாக இண்டெர்நெட், ஸ்கைப் வசதியுடன் கல்வி கற்க உதவுவது எத்தனைப் பெரிய உதவி என்பது எளிய குடும்பத்து மாணவர்களுக்குதான் புரியும். இப்படி எம்.பி உதவி இல்லாமல் இத்தனை பள்ளிகளுக்கு இந்த வசதிகளை செய்துதர அதிகாரிகளுக்கு என்ன ஆர்வம் இருந்துவிடும்? இத்தனைக்கும் நாடு முழுக்க
உள்ள எம்.பிகளின் இரண்டு ஆண்டு நிதி 8000 கோடிதானாம்! இதை டீசல் செஸ் மூலம் ஒரே வாரத்தில் அரசு எடுக்கும். அதிகாரப் பரவல் செய்ய வேண்டிய பரந்து விரிந்த தேசத்தில் நடக்கும் அதிகாரக் குவிப்பு மிகவும் கண்டனத்துக்குரியது.
நடந்தது எம்பிகளின் உரிமை பறிப்பு அல்ல! மக்களுக்கான சேவைக் குறைப்பு.
You can follow @skpkaruna.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: