நண்பர் @pachchakkili பதிவை பார்த்தவுடன் தோன்றியது என்னுடைய அனுபவத்தை எழுத வேண்டும் என்று.
வலிவலம் என்ற ஒரு கிராமத்தில் இருந்து சென்னையில் இன்ஜினியரிங் படிக்கச் சென்றேன். சென்னை சத்யபாமாவில் அட்மிஷன். Single window system, &Rural quota. பள்ளி இறுதி வரை தமிழ் வழி கல்வி. #Thread https://twitter.com/pachchakkili/status/1246684633661571074
ஆங்கிலம் ஒரு பாடம் தான்.சத்யபாமா பொறியியல் கல்லூரி (அப்போ Madras University affliated ) , சென்னையின் பகட்டு முழுவதையும் பிரதிபலித்த ஒரு இடம். எல்லாமே ஆங்கிலத்துல தான் பேசுவாங்க.சென்னையின் மேட்டுக்குடி மக்கள் , அரிய வகை ஏழைகளால் நிறைந்த ஒரு வளாகம் அது. @skpkaruna
விஜிபி குடும்ப வாரிசுகள், அப்போதைய டிஜிபி பையன், 1 தனியார் கல்லூரி முதலாளி பையன் , சில பல அரசியல் வாதிகளின் வாரிசுகள் ,மற்றும் தெலுகு தேசத்திலுருந்து குவிந்த பணக்கார மக்கள் போன்றோர் என் சக மாணவர்கள்.வாழ்க்கையில் முதல் முறை ஷர்ட் tuck inn பண்ணது அங்க தான்.
shoe னு ஒரு ஒன்னு , அறிமுகம் ஆனதும். செங்கல்லைதான் "Bricks"என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் என்று தெரியாத ஒரு மாணவன் ..சத்யபாமாவின் கட்டுப்பாடுகள்
Boys, girls no talking.
No private transportation to school (I mean it), only the school bus to be used.
Stricter dress code ( V shape Duppata, shirt tuck inn, badge must)
home food not allowed. canteen food must.
etc... திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், இப்போது நகைக்கும் படி இருந்தாலும், அப்போது இவை எனக்கு உதவியது. என்னை அந்த கல்லூரி ஒரு முறை கூட தாழ விட்டதில்லை.
நிறைய மக்கள் குரூப்பா தான் சுத்துவாங்க .ஒரே ஏரியா, ஒரே ஸ்கூல் , அரிய வகை ஏழை குரூப், அப்புறம் மாப்பிளை பெஞ்ச் ...இதுல எதுலயும் சேராத நாலஞ்சு பேரு..
அரிய வகை ஏழை வீட்டு புள்ளைங்களுக்கும் , நவ அரிய வகை ஏழை வீட்டு புள்ளைங்களுக்கும் ஒரு பழக்கம் உண்டு. நம்ம மேல நமக்கு இருக்கிற நம்பிக்கையை உடைக்கிற அளவுக்கு நம்மை ரொம்ப நல்லா நடத்துவார்கள். நாம சாப்பிடறதை கூட- முறையும், பொருளும் மட்டம்னு நம்மளையே எண்ண வைப்பதில் விற்பன்னர்கள்.
அரிய வகை ஏழைகள் தான் பெரும்பாலும் ஆசிரியர்கள் .. நீ எல்லாம் , ஏன்டா வந்தேன்னு பார்வையாலே கேப்பாங்க ..

ஆனால் internal ல mark கம்மி செய்தால் ஜேப்பியார் முட்டிய பேத்துடுவார்.ஆனாலும் ஒரு favoritism எப்போதும் உண்டு. அந்த இடத்தில் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி தான் நான்.
அப்போ தான் என் தேவதை வந்தார். ஒத்தை நாடி மனுஷன், பேசும்போது மூச்சில் இரைச்சல். கொச்சை தமிழ் ..

அவர் தான் TNR- T Nageswara Rao . அப்போதைய எலக்ட்ரிகல் HOD, பசங்க அவரை கூப்பிட்டது சைக்கோனு .. எங்களுக்கு circuit theory எடுத்தார் ..
பெரிய அறிவாளி , பாடநூல்கள் எழுதி இருக்கார். சலிக்காமல் ஆங்கிலத்தில் வகுப்பு எடுப்பார் ..

ஒரு நாள்,பாடம் நடத்த ஆரம்பிச்சி 30 நிமிடம் முடிந்து ஒரு pause கொடுத்தார். நான் பாடம் எடுத்தது எல்லாருக்கும் புரிஞ்சுதா னு ஒரு கேள்வி.. வழக்கம் போல எல்லாரும் ,
அமைதியையே பதிலா கொடுத்துட்டு உட்கார்ந்து இருந்தோம்.புரிந்தால் , நான் நடத்துவதை 15 நிமிஷத்துல யாரால் recap பண்ண முடியுமான்னு ஒரு கேள்வி.. திடீர்னு என்னை பார்த்து , நீ போய் board ல explain பண்ணுனு சொல்லிட்டாரு.
மேடைய பார்த்து மிரளாமல், நமக்கு தெரிஞ்ச நாலு ஆங்கிலத்தை வைத்து ,சுருக்கி பொருள் உரைச்சிட்டேன். TNR க்கு ஒரே மகிழ்ச்சி. ஸ்டேஜ் க்கு வந்து , என்னை அணைச்சி கிட்டார்.அன்று அவர் பொதுவெளியில், அந்த மேடையில் சொன்ன வார்த்தைகள், என் மீதான என் மதிப்பை மாற்றியது .
என்னை , நான் மிகவும் நம்பத் தொடங்கினேன்.வார்த்தைகள் TNR உடையதென்பதால் , என்னை ஏளனமாக பார்த்த பார்வைகள் , மாறியது .. அவரின் வார்த்தைகள் என்னை கடைத்தேற்றியது .
நான் Instrumentation , அதனால அவரை பார்க்கறதுக்கான வாய்ப்புகள் குறைந்தது .

ஆனாலும் அந்த வார்த்தைகள் , எங்கு சென்றாலும் ,என்னை விழாமல் பார்த்து கொண்டன. சில நிமிட உரையாடல்களில் ஒரு மனிதனின் வாழ்க்கையை புரட்டி போடும் ஒரு சக்தி ஒரு ஆசிரியருக்கு உண்டு.
என் தேவதையை நான் கண்டு பல பத்து வருடங்கள் ஆகிறது , அவர் அலைபேசி எண், என்னிடம் இல்லை. ஆனால் அவர் கொச்சை தமிழில் என்னிடம் சொன்ன " நூவு நல்லா வருவம்மா , ஜெய்ச்சிடுவீங்க " வார்த்தைகள் என்னிடம் என்றும் .
நம் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை மிக முக்கியம். கிராமப்புற மாணவர்களுக்கு அந்த நம்பிக்கை , இன்னும் அதிகம் தேவை..

நம்மள நாமே கை விட்டுட்டா , வேற யாருமே நம்மளை கரையேத்தமுடியாது
if anyone can share Mr. T Nageswara Rao s number, I will be thankful.
he was the HOD-Electrical department in Sathyabama Engineering college from 1997-2001.
Thanks to my dear Brother @skpkaruna who encourages me to write.
You can follow @gokulakrishnas.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: