இரண்டு முதலமைச்சர்களும், ஒரு பிரதமரும், நான்கு கட்டிடங்களும் !

#Thread

கொரோனா அச்சத்துக்கு நடுவே, தேசமே ஊரடங்கில் முடங்கியிருக்கிறது. இந்நேரத்தில் டெல்லி மத்திய அரசின் மைய வளாக மாளிகைகள் இடிக்கப்பட்டு, புதிய மைய வளாக மாளிகைகள் கட்டப்பட இருக்கின்றன.
மோடி அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டதுதான் இது.

இப்போதிருக்கும் மையவளாகமே வியக்கவைக்கக்கூடியதுதான் என்றாலும், 'உலகத்தரம்' வாய்ந்த வளாகம் வேண்டுமென மோடி அரசு நினைக்கிறது. புதிய வளாக செலவு 12,000 - 20000 கோடி என்கின்றன செய்திகள்
தற்போதுள்ள முக்கியக் கட்டிடங்களான வடக்கு, தெற்கு மாளிகைகள் 'நிலநடுக்க அபாயம்' உள்ளதால் மாற்றப்பட உள்ளதாக அரசு சொல்கிறது. மைய வளாக உப கட்டிடங்களான அருங்காட்சியகமும், இந்திரா தேசியகலை மையமும் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் அனைத்து அமைச்சரவைக்குமான அலுவலகங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன
வடக்கு - தெற்கு மாளிகைகள் அருங்காட்சியகமாகவும், கலை மையமாகவும் மாற்றப்பட இருக்கின்றன.

அதெப்படி, வடக்கு - தெற்கு மாளிகைகளில் நிலநடுக்கம் வரும் என்றால், அவற்றில் அருங்காட்சியத்தையும், கலை வளாகத்தையும் மாற்றினால் அங்கே நிலநடுக்கம் வராதா?
அதெப்படி குறிப்பிட்ட இரண்டு கட்டிடங்களில் மட்டும் நிலநடுக்க அபாயம் வரும்? மற்ற கட்டிடங்களில் வராதா? ஒருவேளை பண்பாட்டு அழிப்புக்காகவும், திரிப்புக்காகவும் செய்கிறார்களோ? என்றெல்லாம் கேள்வி கேட்டால், தேசவிரோதியான உங்களை கொரோனா கொண்டுபோகும். So, ShutUp.
தற்போது அனைத்து அமைச்சரவைக்கான போதுமான இடவசதி இல்லையென்பது அரசின் வாதம். நொடியில் இணைப்புகளை உருவாக்கும் 5ஜி யுகத்தில், ஆப் கி பார் மோடி சார்க்காரின் டிஜிட்டல் இந்தியாவில், பல்லாயிரம்கோடி செலவில் கட்டிடங்களால் அமைச்சரவை இணைப்பு என்பது வேடிக்கையாக இருந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல
2000 மரங்கள் வெட்டப்பட்டு, பூங்காங்கள் அழிக்கப்பட
இருப்பதால் சூழலியல் அக்கறைகளும் அரசுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன.ஆனால், சூழலியல்வாதிகள் அரசுக்கு எதிராக முழங்கும்போது 'நீங்கள் டயல் செய்தஎண் தற்போது பிசியாக உள்ளது; பின்னர் எப்போதும் முயற்சிக்கவேண்டாம்' மோடில் இருக்கிறது அரசு
பிரதமர் அலுவலகத்திலிருந்து, இப்போது இருக்கும் பிரதமர் வீடு 2.8 கி.மீ. அதனால், ஏற்படும் சிரமத்தைக் குறைக்க பிரதமர் அலுவலகம் அருகிலேயே பிரம்மாண்டமான வீடு கட்டப்பட இருக்கிறது. அதே பகுதியில் புதிய மக்களவை - மாநிலங்களவை வளாகங்கள் கட்டப்பட இருக்கின்றன.
அலுவலகம் அருகில் மக்களவை, அதற்கு அருகிலேயே வீடு என்றால் பிரதமர் இனிமேல் நாடாளுமன்ற வருகை பதிவேட்டில் பெயிலாகமல் வருவாரா என்றெல்லாம் கேட்கக்கூடாது... பிச்சு பிச்சு ! ராஸ்கல்ஸ் !

Okay. Then what is the point?
இந்திய பேரரசின் மைய வளாகம் என்பது ஏகாதிபத்தியத்தின் மரபணுவில் பிறந்தது. லூட்டியன்ஸ் உருவாக்கிய புது தில்லியின் ரத்தத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஜீன்கள் உள்ளன. இந்திய படோடோபமும், ஐரோப்பிய ராஜபாரம்பரியமும் கலந்து கட்டப்பட்ட ஏகாதிபத்திய கோட்டை அது.
எனவே, அங்கு மக்கள் கூடுவதற்கோ, எளிதாக அணுகுவதற்கோ, அதை பார்ப்பதற்கோ இடமில்லை. மன்னர் பராம்பரியம் இப்போது இருக்கும் வளாகத்தின் வடிவமைப்பில் மண்டியிருக்கும்.
அமெரிக்கா வெள்ளை மாளிகை, ரஷ்ய க்ரம்ப்ளின் அலுவலகம் ஒப்பிடும்போது ஏராளாமான இரும்புக்கதவுகளால் மக்களைத் தடுத்துநிறுத்தும் கோட்டையாகத்தான் இந்திய மைய வளாகம் உள்ளது. வெள்ளை மாளிகை, ரஷ்ய மாளிகை மிகக்குறைவான அளவு அரசுகட்டிடங்களை மட்டுமே கொண்டவை. அருகே தியேட்டர்கள்கூட உண்டு என்கிறார்கள்
ஆனால், இந்திய மைய வளாகம் அப்படியல்ல.

எனில், புதிதாக கட்டப்பட இருக்கும் வளாகத்தில், அதுவும் ஒரு 'சாய்வாலா' பிரதமராக இருக்கும் வளாகத்தில் இனி மக்களை அரவணைக்கும் ஜனநாயகம் பொங்கி வழியுமா?
புதிதாக கட்டப்பட இருக்கும் வளாகம் என்பது மக்களுக்கு இன்னும் கூடுதலான இரும்புத்திரைகளையே உருவாக்க இருக்கிறது. மக்கள் பயன்பாட்டு எல்லைகளாக உள்ள 80 ஏக்கர் நிலத்தில்தான், புதிய வளாகமே கட்டப்பட இருக்கிறது.
இந்துராஜ்ஜியத்தின் சர்வாதிகார லட்சியத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்களாகத்தான் அவை இருக்கும். பழைய வளாகம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியன் ரத்தம், புதிய வளாகம் என்பது எதேச்சதிகாரத்தின் சின்னம் !
ஆனால், விஷயம் இவை அல்ல. கொரோனாவுக்கு வெடிவெடிக்கும் ஊரில், கட்டிடத்தில் ஜனநாயகம் இல்லை என்றால் யார் அழப்போகிறார்கள்?

Coming to the point.

இந்தியாவில், தமிழ்நாடு என்கிற மாநிலம் இருக்கிறது. அம்மாநிலத்தில் கருணாநிதி என்கிற ஒரு கொள்ளைக்கார முதலமைச்சர் இருந்தார்.
இந்தியாவின் பழம்பெரும் கட்டிடங்களில் ஒன்றான செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தான் தமிழ்நாடு சட்டமன்றம் இயங்கியது. ஆனால், போதுமான இடவசதி இல்லாத நிலையில், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கட்டிட வளாகம் கட்டப்பட்டது.
அந்தக் கட்டிடத்தை அடுத்த வந்த முதலமைச்சர் மருத்துவமனை ஆக்கினார். இந்த செய்கைக்குப் பின்னால் இருக்கும் வன்மமும், முட்டாள்தனமும் உங்களை ஆத்திரமடையச் செய்யலாம். ஆனால், அதைத்தாண்டிய ஒரு அறிவுப்பூர்வமான கேள்விக்கு வருவோம்.
ஒரு மாநிலத்தை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட சட்டமன்ற வளாகத்தை, மருத்துவ மனையாக மாற்றினால் அடிப்படையில் எவ்வளவு சிக்கல்கள் எழ வேண்டும்?
ஏனெனில், சட்டமன்றம் என்பது முழுக்க பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் வகையில் உருவாக்கப்படுவது; அதிகாரவாசிகளுக்கான புகலிடம்; எளிமையாக மக்கள்அணுகமுடியாத கட்டமைப்பு கொண்டதாகத்தான் அது இருக்கும். இவையெல்லாம் கொள்ளைக்கார கருணாநிதிக்கு முன்பிருந்த அதிகாரவாசிகளால் உருவாக்கப்பட்ட மரபு.
ஆனால் மருத்துவமனை என்பது நோயாளிகளுக்கானது; அனைத்து மக்களும் எளிமையாக அணுகும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும். எனவே, சட்டமன்றவளாகம் வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை மருத்துவமனை ஆக்கினால் எவ்வளவு சிக்கல் வரவேண்டும்?

ஆனால், ஒரு சிக்கலும் வரவில்லை. ஏன்?
அதுதான் ஒரு ஜனநாயகவாதியின் திட்டமிடல் ரகசியம்.

இந்தியாவின் எத்தனையோ சட்டமன்றங்கள் இருக்கின்றன. அவை எவற்றிலாவது ஜனநாயகத்தன்மை என்பதை அதன் கட்டிட வடிவமைப்பில் உணர்ந்திருக்கிறீர்களா? வாய்ப்பே கிடையாது. ஏனெனில், அவை அதிகார படோடோபத்தின் வடிவமாக உருவாக்கப்பட்டவை; உருவாக்கப்படுபவை.
மிகப்புகழ்வாய்ந்த பெங்களூர் 'விதான் சபா', புதிதாக கட்டப்பட்ட ஆந்திராவின் அமராவதி இரண்டும் இதில் அடக்கம்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் முழு வடிவமைப்பைக் கண்டவர்களே தமிழ்நாட்டில் மிகச்சிலர் தான்.
பாரிஸ் கார்னரில் நூறு வருடங்களாக வசிப்பவர்கூட, அன்றாடம் அந்தச்சாலை வழியாக பயணிப்பவர்கூட அந்தக்கட்டிடத்தை பார்த்திருக்க முடியாது. காரணம் வானுயர்ந்து நிற்கும் மதில் சுவர். வெளியே தடுத்து நிறுத்தும் அகழிகள்
கட்டிடத்திற்கு உள்ளேயும்கூட ஒரு எல்லைக்கு மேல், ஜனநாயகத்தின் தூதுவர்களான பத்திரிகையாளர்களுக்கே அந்தக்கட்டிடத்தில் அனுமதி இல்லை. இவை எதுவும் பெரும் குற்றமில்லைதான்! ஆனால் ஜனநாயகப் பண்பாடற்றவை.
ஆனால், புதிய சட்டமன்ற வளாகம் அப்படியல்ல. அதன் ஒவ்வொரு துளியிலும் ஜனநாயகம் இருக்கும். நான்கு வட்ட வளாகங்களாக இருக்கும் அந்தக்கட்டிடத்தின்,

முதல் வளாகம் என்பது, மக்கள் கூடுவளாகம், ஜனநாயகத்தின் அடித்தளம் !

இரண்டாவது வளாகம், சட்டமன்ற அரங்கம் - மக்கள் வழங்கும் அதிகாரம்.
மூன்றாவது - அறிவு வழங்கும் நூலகம், ஆலோசனை வழங்கும் கூட்டரங்குகளால் அமைந்தவை - தகவல் மூலம் !

நான்காவது குட்டி வளாகம் - முதலமைச்சர் அவை - முடிவெடுக்கும் அறிவு பீடம் !
ஜனநாயகத்தில் மக்கள் தான் பெரியவர்கள் என்பதை உணர்த்தும் பெரிய முதல் வளாகம், அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் இருக்கும் சட்டமன்றம் கொண்ட போதிய வளாகம், அடுத்து தகவல் தொடர்பு - ஆலோசனை வழங்கும் நடுத்தர வளாகம், நான்காவது முடிவெடுக்கும் இடம் குட்டி வளாகம்.
மக்கள் கூடுதளம் > சட்டமன்றம் > தகவல் மூலம் > முடிவெடுக்கும் அறிவுபீடம்.

வளாகம் அமைந்திருக்கும் 'அண்ணா சாலையில்' பயணிக்கும் எவரும் அந்தக்கட்டிடத்தை முழுமையாக பார்க்கலாம். ரகசியம் காக்கும் சுவர் ஏதும் இருக்காது. சட்டமன்றம் முன்பே போரடலாம்; வன்முறையாளராக இருந்தால் கல்கூட எறியலாம் !
மக்கள்கூடும் முன்முகப்பில் பெரியார் சிலை; முதல்வர் இருக்கும் பின்முகப்பில் அண்ணா சிலை ! இரண்டும் இரண்டு தரப்புக்கும் வழிகாட்டும் சின்னங்கள். இது Phenomenal accident !

கடற்கரை, நதிமுகம் ஒருசேர அருகே அமைந்த பெருமை அநேகமாக இந்த ஒரு கட்டிடத்திற்கு மட்டும் தான் இருக்க முடியும் !
உலகின் முதல் 'பசுமை சட்டமன்ற வளாகம்' அது. கட்டிடம் தனக்குத் தேவையான வெளிச்சத்தை சூரியனிலிருந்தும், தேவையான காற்றை வெளிப்புறத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளும். மின்சாரமும், அதி உயர் மின்னணு சாதனங்களுக்கான செலவும் மிச்சம்.
அந்த காற்றோட்ட வசதியும், வெளிச்ச வசதியும் தான் நோயாளிகளுக்கு அச்சமில்லாமல் எந்த நேரமும் சிகிச்சை அளிக்கும் சாதகத்தைக் கொடுக்கிறது. இன்று கொரோனாவைக் கட்டுப்படுத்த 300 படுக்கை வசதிகளுடன் போதிய இடவசதி கொடுக்கிறது.
இப்படிப்பட்ட கட்டமைப்புதான், அதிகார மமதையில், வன்மத்தோடு 'மருத்துவமனையாக மாற்றப்படும்' அறிவிப்பைச் செய்த எதேச்சதிகாரவாதிக்கோ, கட்டிடம் மாற்றப்பட்ட பிறகு சிகிச்சை எடுக்க வந்த நோயாளிக்கோ எந்த சிக்கலையும் உருவாக்கவில்லை.
ஒரு ஜனநாயகவாதியின் திட்டமிடல் தன் எதிரிக்கும் உதவக்கூடும், எதிர்பாராத பேரழிவிலும் காத்து நிற்கும் என்பதற்கான சாட்சி புதிய சட்டமன்ற வளாகம் !
You can follow @VGananathan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: