சென்னையில் இந்த PSBB (DAV போன்ற) பள்ளிகளில் படிச்சவங்க எல்லாம் எளிதில் கிண்டி பொறியியல் கல்லூரியில் (CEG) மற்றவர்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளமுடியும்..

கவுன்சலிங் அப்பவே யார் யார் இங்க சேருவாங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடும் போல.. முதல் நாளே group form பண்ணிடுவாங்க..
வகுப்புகள் முடிந்து, முழுவதும் day scholarகளாக நுனி நாக்கில் ஆங்கிலம் தாண்டவமாட எந்த group bus standக்கு போகுதோ அது பெரும்பாலும் அந்த groupகளாக தான் இருக்கும்..

அந்த groupல எல்லா டிபார்ட்மண்ட் ஆட்களும் இருப்பாங்க..
இதே மாதிரி இருக்கும் எல்லா வருட சீனியர் groupகளுடன் உடனடி தொடர்பு கிடைத்துவிடும்.. எந்த ஆசிரியரிடம் எப்படி நடந்துக்கனும், எந்த புத்தகம் படிக்கனும் போன்ற அனைத்து தகவல்களும் பறிமாறப்படும்..

மதிய உணவு சாப்பிடுவது, canteen போவது என்று அது மிகவும் closed knit groupஆக இருக்கும்..
அவ்வளவு எளிதில் அந்த groupல நுழையமுடியாது..

அந்த பள்ளிகளின் மற்ற branchல இருந்து வந்தவங்க யார்னு முதல் நாள் அன்று எல்லா ஆசிரியரிடம் தன்னை பற்றி மாணவர்கள் அறிமுகம் செய்றப்போ சொல்லும் பள்ளி பெயர்ல தெரிஞ்சிடும்ல.. அதையும் பயன்படுத்திப்பாங்க..
அரசு பள்ளியில் இருந்து போன என்னை போன்றவர்களை ஆரம்பத்தில் அவர்கள் பார்க்கும் ஏளனப் பார்வை.. கடுப்பா இருக்கும்..

ஆங்கிலம் தெரியும்.. ஆனால் பேச்சு மொழியாக அரசு பள்ளிகளில் பேசுறதில்லை தானே.. மேலும் வீட்டிலும் தமிழ் தான்.. அதனால் english communication skill எனக்கு அப்போ குறைவு..
முதல் internal exam விடைத்தாள்களை கொடுக்கும்போது ஆங்கில ஆசிரியர் கூப்பிட்டு communication skill improve செய்யனும் என்று கூறி பேப்பர் கொடுக்க.. அதை வாங்கி வரும்போது இதுல கூடவா மார்க்க கம்மியா வாங்குவாங்க என்பது போன்ற பார்வை அந்த groupஐ சேர்ந்தவர்களிடமிருந்து.. ஆத்திரமாக வந்தது..
பள்ளி முடித்து கல்லூரி சேரும் வரை புத்தகங்கள் படிப்பது தான் பொழுதுபோக்கே. அது கல்லூரி ஆரம்பித்தபின்னும் தொடர்ந்தது. அதில் அண்ணாவின் பொன்மொழிகள் படிக்க நேர்ந்தது. இந்த பொன்மொழி எனக்காக எழுதியது போல அப்போது தோன்றியது..

// ஊக்கத்தை கைவிடாதே; அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு //
அந்த உந்துதல் தான் என்னை english communication skill improve செய்யும் ஆர்வத்தை தூண்டியது..

libraryல அது சம்பந்தமாக புத்தகங்கள் படித்து vocabulary வளர்த்துக்கொண்டேன்..

சரளமாக ஆங்கிலம் பேசாவிட்டாலும் முன்பைவிட கொஞ்சம் நன்றாக பேசும் நிலைக்கு வந்தாச்சு..
பல நல்ல அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் CSC, ECE சீட் இருந்தபோதும் நான் Mech தான் படிப்பேன், அதுவும் CEGல் தான் படிப்பேன் என்று ஒற்றை காலில் நின்று சேர்ந்தேன்.. ஆர்வத்துடன் எடுத்த படிப்பு என்பதால் முதல் செமஸ்டர்ல வந்த ED (engineering drawing) எனது favorite subject..
அந்த வகுப்பில் என் முழு திறமையும் காட்டினேன்.. ஒரு நாள் வகுப்பில் என்னுடைய drawing chartஐ reference chartஆக பார்த்து எப்படி ED வரையனும்னு பாருங்க என்று சொன்னார் ஆசிரியர்..

அப்போது அவர்கள் காட்டிய அந்த அதிர்ச்சி/ஆச்சர்யம் கலந்த பார்வையை நான் பெருமிதத்தோடு பார்த்தேன்..
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கு.. படித்த பள்ளி மூலம் communication skill போன்றவை கிடைக்கலாம்.. ஆனால் எல்லாவற்றிலும் முதல் ஆளாக இருக்கமுடியாது என்பதை அவர்களுக்கு உணர்த்தியது போல அன்று நினைத்தேன்.. அந்த வயதில் அப்படி நினைத்தது சரி என்றே நினைத்தேன்..
தான் ஒரு மேட்டுக்குடி பள்ளியில் படித்தேன் என்ற கர்வம் அவர்களிடம் முதல் செமஸ்டரில் இருக்கும். என் ED ஆசிரியர் சொன்னது, பின்னர் வரும் செமஸ்டர் முடிவுகள் போன்றவைதான் அவர்களின் கர்வத்தை அடித்து உடைக்கும். hostelல தங்கி படிக்குறங்க அந்தந்த மாவட்டங்களில் முதலாவதாக வந்தவங்க தானே
அவர்களும் திறமையை காண்பிக்க.. 2வது செமஸ்டரில் இருந்துதான் அவங்க கெத்து குறையும்..

மற்றவர்களுடன் சகஜமாக பழகுவாங்க..

ஆனா, முதல் செமஸ்டர்ல உருவான அந்த group கல்லூரி முடியும் வரை அப்படியே இருக்கும்..

அந்த பள்ளிகளில் இந்த மாதிரி நடந்துக்காதவங்களும் இருக்காங்க.. ஆனா குறைவானவங்க 😊
You can follow @pachchakkili.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: