AI, Computer Vision - I
By Seshathiri Dhanasekaran

நீங்க டேட்டா சயின்ஸ், Artificial Intelligence கத்துக்கணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டா நீங்க முதல்ல கத்துக்க வேண்டியது லீனியர் அல்ஜிப்ரா. என்னடா இது லீனியர் அல்ஜிப்ரா சொல்றான்னு உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கலாம்.
#Thread
நம்ம தினமும் பார்க்கும் ஆடியோ வீடியோ இமேஜ் எந்த டைப் ஆக இருந்தாலும் எந்த விதமான டேட்டா இருந்தாலும் கம்ப்யூட்டர் இல்லைனா மொபைல் ப்ராசஸஸ் பண்ண போவது வெறும் நம்பர்களாக மட்டுமே.
உங்கள் முகம் ஒரு குறிப்பிட்ட நம்பர்களை கொண்ட ஒரு அணிக்கோர்வை மட்டுமே. அந்த மேட்ரிக்ஸ் மேட்ச் ஆச்சுன்னா உங்க செல்போன் அன்லாக் ஆகும், இல்லனா நீயார்ரா கோமாளின்னு தள்ளிவிட்டுப் போயிடும்.
முத்து, நான் தான் அண்ணன் அண்ணன் என்ற கவுண்டர் கதறல்கள் வேலைக்காகாது.
உதாரணமாக 150*150 அளவு கொண்ட ஒரு இமேஜ் என்றால் கம்ப்யூட்டர் பொறுத்தவரை அது 150*150 மேட்ரிக்ஸ் மாத்திரமே.(150 - இது பிக்சல் அளவு)
அதில் இருக்கும் நம்பர்கள் 0-255(2இன் அடுக்கு 8).
அப்படம் கருப்பு வெள்ளை படமாக இருந்தால் 1 மேட்ரிக்ஸ் , கலர் படமாக இருந்தால் 3 மேட்ரிக்ஸ் . வீடியோ படமாக இருந்தால் 1 நொடி வீடியோ = 24 FPS (பிரேம் பேர் செகண்ட்) ஆக 1 நொடி வீடியோ 24 இமேஜாக கணக்கு எடுத்து கொள்ளப்படும்.
இந்த மாதிரி கடினமான வேலைகளை செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியதுதான் செயற்கை நியூரல் நெட்வொர்க்ஸ். நியூரல் நெட்வொர்க்ஸ் நம்முடைய மூளை மாதிரியேதான்.
மூளையில் உள்ள நியூரான்கள் எப்படி செயல்படும் அப்படின்னா ஒரு விஷயம் நடக்கப்போவது முன் அதிலுள்ள சாதக பாதக அம்சங்களை இப்படி நடக்குமா இப்படி நடக்கும் என்று எல்லாவிதத்திலும் யோசித்து முடிவெடுக்கும்.
நாம் எப்படி நமக்கு சாதகமான ஒரு முடிவு எடுத்து ஒரு விஷயத்தை செய்கிறோமோ அதைப் போலவே. இப்போ உங்களுடைய முகம் தான என உங்கள் போன் எல்லா விதமான டெஸ்ட் செய்யும் . கொஞ்சம் 33%க்கு மேல் மேட்ச் ஆனாலே அன்லாக் ஆகும் .
சரி நான் ராத்திரியில் சில நேரம் ஓபன் பண்ணினா ஆகல ஏன்னு கேட்டா நீங்க எப்படி உங்க டேட்டாவை கொடுக்க கொடுக்க தான் அது கற்று கொள்ளும். இதுவும் ஒரு குழந்தையை போல தான்.
Facial recognitionஐ பொறுத்தவரை Unlock செய்யும் நேரத்தில் நம் முகமும் அல்ரெடி சேமிக்கப்பட்ட டேட்டாவும் மேட்ச் ஆகுதான்னு முன்னபின்ன ( forward and back propagation) போயிட்டு வந்து கண்டுபிடிச்சி ஓபன் செய்வதற்கு பின்னால் உள்ள சூட்சுமமே மேட்ரிக்ஸ்.
சரி இந்த மேட்ரிக்ஸ் எப்படி வரும், அதில் எப்படி மேட்ச் செய்வது அதில் உள்ள வழிமுறைகள் என்ன , அதற்கு தான் லீனியர் algebra படிக்கணும்.
#Part1 #End
You can follow @PhDJokesMemes.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: