நமது நாட்டின் பாரத பிரதமர் விளக்கேற்ற சொன்னார் என்பதற்கு மட்டும் சிலர் கதறிக் கொண்டிருக்கும் வேளையில்

யாராவது அவர் பேச்சு சாரம்சத்தில் முக்கியமானதை கவனித்தீர்களா...?

ராமாயணத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்...

கொரானா சமயத்தில் சமூக விலகலால் மனம் 1/13
சோர்ந்து போயிருக்கும் நமக்கு இது ஒரு உற்சாகம் ஊட்டக்கூடிய ஸ்லோகம்...

கிஷ்கிந்தா காண்டத்தில் மனைவியை பறிகொடுத்து
மனம் தளர்வடைந்து நிலையில்இருந்த ராமனுக்கு...
சீதையை நாம் நிச்சயம் மீட்போம் என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் கூறுகிறான் ..லட்சுமணன்..
அதை மேற்கோள் காட்டி 2/13
நமக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை உரைக்கிறார் நரேந்திர மோடி அவர்கள்..

இப்படி ஒரு பாரதப்பிரதமர் எங்கிருக்க கூடும்..? யாருக்கு வாய்க்க கூடும்

ஊக்கமது கைவிடேல்.

பறவைகள் காட்டியபடியும், ஜடாயு சொல்லியபடியும் ராம-லக்ஷ்மணர்கள் சீதையைத் தேடிக்கொண்டு தெற்கு நோக்கிப் போகும் 3/13
வழியில் கிரௌஞ்ச என்னும் மிக அடர்ந்த காட்டின் உள்ளே நுழைந்தார்கள். அந்தக் காட்டை ஆளும் கபந்தன் என்னும் அரக்கன் அவர்களைப் பிடித்துக்கொண்ட போது, அவனுடைய கைகளை அவர்கள் வெட்டிவிட்டார்கள். ஒரு முனிவருக்குத் தொந்திரவு கொடுத்ததால் அரக்கனாக ஆகும்படி சாபம் பெற்ற கபந்தன் அவரிடம் 4/13
மன்னிக்கக் கோரியபோது, அவரும் மனம் இளகி இராமர் இந்தப் பக்கம் வரும்போது அவனுக்கு விமோசனம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். அவன் அதைச் சொல்லி, தனது ராக்ஷச உடலை அவர்களையே எரிக்கச் சொல்கிறான். அப்படி எரிக்கப்பட்டபோது, அவன் தனது சாபத்திற்கு முன்னிருந்த உடலிலேயே உயிர்பெற்று 5/13
எழுந்தான்.

சாப விமோசனம் பெற்ற அவன் அவர்களுக்கு மிக விசுவாசமாகி, வாலி எனும் வானர அரசனிடம் பயந்துகொண்டு அவனது தம்பியான சுக்ரீவன் இருக்கும் ரிஷியமுக மலைத்தொடருக்கு போகும் வழியைச் சொல்லி, சுக்ரீவன் அவர்களுக்கு சீதையைத் தேடித் தருவதில் உதவுவான் என்றும் சொல்கிறான்.

அவன் 6/13
காட்டிய வழியில் சென்று அந்த மலைக்குப் பக்கத்தில் இருக்கும் பம்பா ஏரிக்கரைக்கு அவர்கள் இருவரும் வருகிறார்கள். அதுவரை அலைந்த அலைச்சலில் மிகவும் தளர்ந்துபோன இராமர் மறுபடியும் நம்பிக்கை இழந்து தான் எங்கே சீதையை கண்டுபிடிக்க முடியும் என்றும், ராவணனிடமிருந்து எப்படி அவளை மீட்க 7/13
முடியும் என்றும் கவலைப்படுகிறார். அப்படிப் பேசும் இராமரை அவர் மேலும் துயரத்துக்குள் மூழ்காதவாறு பார்த்துக்கொள்ள லக்ஷ்மணன் அவருக்கு ஊக்க வார்த்தைகள் சொல்லி தேற்றுகிறான்.

உத்ஸாஹோ பலவானார்ய! நாஸ்த்யுத்ஸாஹாத்பரம்ʼ பலம்|
ஸோத்ஸாஹஸ்யாஸ்தி லோகே(அ)ஸ்மின் ந கிஞ்சிதபி துர்லபம்|| 8/13
4.1.121||

ஆர்ய = O revered one, மதிப்புக்குரியவரே
உத்ஸாஹோ = enthusiasm, உற்சாகம்
பலவான் = is a strong one, பலம்
உத்ஸாஹாத் = compared to enthusiasm, உற்சாகத்தோடு ஒப்பிட்டால்
பரம் = supreme, மேலான
பலம் = strength, பலம்
நாஸ்தி = is not there, கிடையாது
ஸோத்ஸாஹஸ்ய = for one 9/13
who is enthused, உற்சாகம் இருப்பவனுக்கு
லோகே(அ)ஸ்மின் = in the worlds, உலகங்களில்
கிஞ்சிதபி = even a little also, சிறிது இருந்தாலும்
துர்லபம் = impossible, முடியாதது
நாஸ்தி = not there, கிடையாது.

மதிப்புக்குரியவரே! எதிலும் எப்போதும் உற்சாகம் என்று இருந்தால் அதுதான் 10/13
ஒருவனுக்கு பலம். உற்சாகத்துக்கு மேலாக எந்தவித ஊக்குவிக்கும் சக்தியும் கிடையாது. உற்சாகம் ஒருவனுக்கு சிறிது இருந்தாலும் அவனால் உலகில் சாதிக்கமுடியாதது என்று எதுவும் கிடையாது.

ஒருவனுக்குப் பலம் என்று பார்க்கும்போது அது உடலளவிலும் இருக்கும், மனத்தளவிலும் இருக்கும். 11/13
இவ்விரண்டில் மனோபலமே மிக முக்கியமானது. அது இருக்கும்போது ஒருவன் எது வேண்டுமானாலும் செய்யத் துணிவான். அவனுக்கு வெற்றியும் நிச்சயம் உண்டு.

என்ன அருமையான வார்த்தைகள்..

இந்த இக்கட்டான நிலையிலிருந்து நிச்சயம் நாம் விடுபடுவோம்..

ராம பாணத்திற்கு தப்பிய எந்த இலக்கும் 12/13
கிடையாது..

அந்த ராமபாணம் இந்த கொடிய நோயில் இருந்தும் நம்மை காக்கும்...

இன்று இரவு ஒன்பது மணிக்கு அனைவரும் வீட்டில் விளக்கேற்றி ஸ்ரீராமனை துதிப்போம்...

ஸ்ரீ ராம ஜெயம்...🙏 13/13
You can follow @vanamadevi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: