எனது நண்பன் என்னிடம் அடிக்கடி சொல்வது,
'என் லைஃப்ல எத்தனையோ பாராட்டு வாங்கியிருந்தாலும் இந்த பாராட்டோட,
போதுண்டா!! இந்த வாழ்க்கை, இதுக்கு மேல என்ன இருக்குனு தோண வைச்சது இதுதான்,
எங்க அப்பா இறந்த ஒரு வருடம் கழித்து நான் எங்க சொந்த ஊருக்கு போயிருந்தேன்,
வழக்கமா ஊர் திருவிழாவில் அப்பாதான் கருப்பசாமி வேஷம் கட்டுவார் ,பின் வயசான பிறகு சில வருடங்களாய் வேறொறுவரை நியமித்திருந்தார்கள் இப்போது அந்த வருடம் மீண்டும் என்னைக் கேட்டார்கள், நான் சாமி கும்பிடுவேன் ஆனா எனக்கு சாமியாடுறதுல நம்பிக்கை இல்லங்க என்றேன்
ஆனா ஊர் பெரியவங்க, ' தம்பி!! நீங்க கருப்பசாமி வேஷ ம் கட்டி ஊர சுத்தி நடந்து வாங்க, அது போதும் னாங்க, அரைமனசோட ஒத்துகிட்டேன், கிளம்பும் போது தங்கச்சி என்னிடம் வந்து, அப்பாவ மட்டும் நினைச்சிக்கோ உன்னோட கான்சியஸ் மனசை புடிச்சு வைச்சுகாத சப் கான்ஸியசுக்கு இடம் கொடு என்றாள்,
நானும் கருப்பசாமி வேஷம் கட்டி கொண்டேன் , அப்பாவை நினைச்சிக்கிட்டு சாமியிடம் ஊர்ல எல்லாரும் நல்லாயிருக்கனும்னு வேண்டிட்டு ஊரை சுத்தி வந்தேன்.தங்கச்சி சொன்னதை போல அரைவிழிப்பு நிலையிலேயே இருந்தேன் எதையும் நடிக்க முற்படல. மனசு முழுக்க அப்பாதான் நிறைந்திருந்தார்.
ஒரு வழியாக முடித்த போது ,ஊரில் எல்லாரும் சொன்னது ஒரே விஷயம் 'அப்பாவே திரும்பி வந்த மாதிரி இருந்தது'.
வீட்டிக்கு போனவுடன் அம்மா எதுவும் பேசாமல் அழுது கொண்டே கட்டி பிடித்து கொண்டாள். ஒருபக்கம் தங்கச்சி அழுது கொண்டு இருந்தாள். மறக்க முடியாத நாள் அது.
சிறு வயசில் இருந்து அப்பாவை பார்த்து வளர்ந்து தெரிந்தும் தெரியாமலும் அவரை இமிடேட் செய்து , கடைசியாக அவர் உடம்பா இல்லாத போது என்னோட சப் கான்ஷியஸிலிருந்து அவரை மீட்டெடுத்ததும் அதை எல்லாரும் பாராட்டியதும் மறக்க முடியாதது'.
இதைக் கேட்டவுடன் எனக்கு தோன்றியது, 'நாளை தன் பிள்ளையிடம் தன்னை பார்க்கும் போது இந்த வட்டம் நிறைவடையும் இவருக்கு'
ஏனேனில் தகப்பன்கள் தங்கள் குழந்தைகள் குறித்து கனவுகள் ஆசைகள் கொண்டிருக்கிறார்கள் அவை நிறைவேறும்போது சந்தோஷம் அடைகிறார்கள்.
ஆனால் அதை தாண்டி தன்னையே(தன் பலங்களோடும் பலவீனங்களோடும்) அவர்களிடம் காணும் அந்த கணத்தில் தான் பூரிக்கிறார்கள்
நுட்பமான இந்த கணத்தை பதிவு செய்த திரைகாட்சிகள் பின்வருமாறு,
இந்த படத்தில் கமல் திரைக்கலையை விரும்பிய ஆனால் வணிக சினிமாவின் நிர்பந்தங்களால் அதை செய்ய முடியாமல் போன ஒரு திரைகலைஞனாய் நடித்திருப்பார், தனது கடைசி நாட்களில் தனது மகனிடம் அவனது ஆசை குறித்து கேட்கும் போது அவன் ஸ்கிரின்ப்ளே என்றதும் கமல் முகத்தில் தோன்றும் அந்த உணர்வுகள்...
இந்த படத்தில் ஸ்ரீவித்யா ஒரு இசை நாட்டம் கொண்ட பாடகி தனது மகளை விட்டு பிரிந்திருப்பார் மீண்டும் இணையும் போது தனது மகளுக்கும் தன்னைப்போல இசைஆர்வம் இருப்பதை உணரும் அந்த தருணம்..
இறுதியாக கபாலியில் தலைவர் தன் மகளை பார்க்கும் காட்சி, முதலில் குழப்பம், அடுத்து தனது மகளை பிடித்திழுத்து பாதுகாப்பது, அதன்பின் பயமின்றி தீரமாக போரிடும் தன்னையே தன் மகளிடம் காணும்போது தோன்றும் ஒரு புன்னகை👌👌
You can follow @hunmid12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: