கல்வி மறுக்கப்பட்டது என்னும் கட்டுக்கதை

"இந்தியாவில் 2000 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தோம். கல்வி என்பது குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயர் காலம் வரை, முறையான கல்வி என்பது இல்லவே இல்லை. ஆங்கிலேயர்கள் கல்வியில் சம உரிமை கொடுத்திராவிட்டால் இன்னும் 1/21
அடிமைகளாகவே இருந்திருப்போம்." இப்படிப் பல கருத்துக்கள் தமிழகத்தில், நான் மட்டுமல்ல பலரால் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டன. ஆனால் இவை எவ்வளவு தவறானவை, புனையப்பட்டவை, உண்மையை முழுமையாக மறைத்துள்ளது என்பதை, சமீபத்தில் படிக்க நேர்ந்த தரம்பால் என்ற காந்தியவாதி எழுதிய, "Beautiful 2/21
tree" என்ற ஆங்கிலப் புத்தகம் மூலம் உணரமுடிந்தது. இதன் தமிழாக்கம் B.R. மகாதேவன் என்பவரால், "அழகிய மரம்" என்ற பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
இது, 1822ல் தாமஸ் மன்றோ என்ற சென்னை மாகாணத்தை ஆண்ட கவர்னர், அன்றைய நிலையில் மதராஸ் பிரசிடென்சியின் கல்வி நிலையை அறிய 3/21
தயாரித்த அட்டவணையை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களின் கல்வி நிலை அறிக்கையை தயாரித்து அனுப்பிய, கலெக்டர்களின் தரவுகளின் அடிப்படையில், எந்த ஆங்கிலேயர்கள், முறையான கல்வியை ஏற்படுத்தினர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டதோ அதே ஆங்கிலேயர்களால் "மதராஸ் பிரசிடென்சி இண்டிஜீனஸ் எஜுகேஷன் 4/21
சர்வே" என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளைக் கொண்டும், அதற்குப் பிறகு 1831- 32 "ஹவுஸ் ஆஃப் காமண்ஸ்" ஆவணத்தின் அடிப்படையில் கலெக்டர்கள் அனுப்பிய கடிதம், அதில் இணைக்கப் பட்டிருந்த ஆவணத்தின் நகல்களோடும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது நம் பாரம்பரியக் கல்வியின் 5/21
ஆழத்தையும் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே படித்தனர் என்ற பிம்பத்தையும் உடைத்து உள்ளது. இந்தியா, கற்பித்தலில் மேலான நிலையில் இருந்ததை அந்தத் தரவுகள் மூலம் உணர முடிகிறது.
திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, கடலூர், திருச்சி, சென்னை, சேலம், வடஆற்காடு 6/21
மட்டுமல்லாமல், தெலுங்கு பேசும் மாவட்டங்களிலிருந்தும், கன்னடம் மலையாளம் பேசும் மாவட்டங்களிலிருந்தும் தரவுகள் தென்தமிழகத்தில் பெறப்பட்டுள்ளது. அவர்கள் அட்டவணையில் பிராமணர்கள், வைசியர், பட்டியலினத்தவர், பிற சாதியினர், இஸ்லாமியர்கள் என கணக்கெடுத்து உள்ளனர். ஒரு சில 7/21
மாவட்டத்தில், அங்குள்ள வேறு சில மிக சிறிய அளவில் இருந்த ஜாதியினரின் தரவுகளும் தரப்பட்டுள்ளது. ஜாதிவாரியாக, பயிற்று மொழி வாரியாக, மொழிவாரியாக, கற்ற கல்வியின் அடிப்படையில் தரவுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ஆவணங்களின் அடிப்படையில், இன்றைய தமிழகத்தின் பகுதிகளில் 4 பிராமணப் 8/21
பெண்களும், 11 வைசிய பெண்களும், பட்டியலினத்தில் 627 பெண்களும், பிற ஜாதியில் 317 பெண்களும், இஸ்லாமியர்களில் 239 பெண்களும் படித்துள்ளனர். இதிலிருந்து, பிராமண, வைசிய குடும்பங்களில் பெண் கல்வி ஊக்குவிக்க படவில்லை என்பது புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், மேலே குறிப்பிட்ட தமிழக 9/21
மாவட்டங்களில் 12,581 பிராமணர்களும் 38,12 வைசியர்களும் 42,240 பட்டியல் இனத்தவரும் 12,504 பிற சாதியினரும் 19,675 இஸ்லாமியர்களும் கல்வி பயின்றதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இது, வியப்பும் பெருமிதமும் தரும் தகவலாக உள்ளது. இத்தனை வருட காலமாக கட்டமைக்கப்பட்ட பிற ஜாதியினருக்கு 10/21
கல்வி மறுக்கப்பட்டது என்ற பிம்பம் சுக்கு நூறாகி உள்ளது.
ஆங்கிலேயருக்கு முந்தைய காலத்தில், வெறும் இதிகாசங்களும், சரித்திரமும், சமஸ்கிருதமும் மட்டுமே மிகச் சிலருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்பது தான் 1950களிலிருந்து இன்று வரை பரப்பப்பட்டது. ஆனால் ஆவணங்களில், இதற்கு மாறான 11/21
ஆதாரங்கள் உள்ளன. 1800களில் இந்தியாவிலிருந்த கல்வி, கேம்பிரிட்ஜ், எடின்பர்க், ஆக்ஸ்fபோர்ட் பல்கலை கழகத்திற்கு இணையாக இருந்தது என ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. மொழியியல், இதிகாசங்கள், சமயங்கள், மட்டுமல்லாது வடிவக்கணிதம் (ஜியாமெட்ரி), வானவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், 12/21
உடலியல், இசை, கவிதைகள், ஆய்வு தத்துவம், நவீன மொழிகள், பொதுச் சட்டம், மருத்துவக் கல்வி, ஜோதிடம், புராணம், வரலாறு மற்றும் ஒரிய மொழி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் கற்று தரப்பட்டுள்ளன. கல்லூரிக் கல்வி மிகக் குறைந்த அளவே 13/21
காணப்பட்டுள்ளது. அடிப்படைக் கல்விக்குப் பின் பெரும்பாலானவர்கள், தொழிற் கல்வி கற்றுள்ளனர்.
தொழிற்கல்வி, வீடுகளிலேயே பெற்றோர்களே குருவாக இருந்து கற்பிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில், உயர்கல்விக்கு பிராமணர்கள் சென்றதாக குறிப்புகள் உள்ளன. ஆனால் மருத்துவம், 14/21
வானசாஸ்திரம் போன்றவை அனைவராலும் கற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. தொழில் கல்வியைப் பொருத்தவரை, கைவினைஞர்கள் முதல் நாவிதர்கள் வரை தன்னுடைய தொழிலை, குடும்பத்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு கற்றுத் தர விரும்பவில்லை. அப்படி கற்பித்தால் குடும்பத்துக்கு கேடு விளையும், தொழில் நாசமாகும் என 15/21
நம்பப் பட்டதாகத் தெரிகிறது.

என்னென்ன புத்தகங்கள, அகராதிகள் பயன்படுத்தப்பட்டன எனவும்; இந்தியா முழுவதும் ஜெய்ப்பூர், பெங்காலி என பல மாநில நிலையும் ஆவணமாக உள்ளது. இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது, வெள்ளையருக்கு வெகுகாலம் முன்பே இந்தியாவில் கல்வி நிலை மிகச் சிறந்த முறையில் 16/21
இருந்ததை, தரவுகள் மூலம் ஊர்ஜிதப் படுத்த முடிகிறது. மேலும் 5 வயதில் இருந்து, ஏழு முதல் எட்டு வருடங்கள் பள்ளிக் கல்வி பயின்றுள்ளதாக குறிப்புகள் உள்ளன. மேற்படிப்பு என்ற கல்லூரி கல்வி 3 முதல் 5 வருடங்கள் ஆராய்ச்சி வரை இருந்துள்ளது. எல்லா குடும்பங்களும் ஏதாவது ஒரு தொழிலில் 17/21
ஈடுபட்டிருந்தது; அடிமையாக யாரும் யாருக்கும் இல்லை என்பதும், அவரவர் தொழிலின் உன்னதம் பேணப்பட்டதும் தெரிகிறது. மாணவர்கள் கொடுத்த கட்டணம், ஆசிரியர்கள் பெற்ற ஊதியம், அந்தக் காலத்திலேயே உள்ளூர் நிர்வாகம், அறக்கட்டளைகள் மூலம் ஒரு சில பள்ளிகள் நிர்வகிக்கப்பட்டது
பற்றியும் 18/21
அறிந்துகொள்ள முடிகிறது. ஆங்கிலேயர் காலத்தில் தான் நம் இந்திய பாரம்பரிய கல்விமுறை ஒழிக்கப்பட்டு, பள்ளிகளுக்கான விதிகள், கட்டட அமைப்புகளின் சட்டங்கள், ஒரே மாதிரியான கல்வி முறை அதாவது புத்தகம், பாடத்திட்டம் ஒன்று போல் எல்லா பகுதிகளிலும் இருக்க வேண்டும் என்று 19/21
வலியுறுத்தப்பட்டு, ஆங்கிலேயர்களால் நம் அறிவு வளம் சுரண்டப்பட்டது அவர்கள் மூலமே நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள யாரும் யாரையும் ஆங்கிலேயர்கள் காலம் வரை அடிமைப் படுத்தவில்லை என்ற ஒற்றை வரியை உலகுக்கு சொல்லியுள்ளது அழகிய மரம். இதனுடைய ஆங்கில புத்தகமான Beautiful 20/21
tree, இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Dr.R.காயத்ரி
கல்வியாளர் 21/21
You can follow @vimal043.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: