ஒரு சின்ன thread...

#இந்தியா
இத்தாலி போல 22 மடங்கு பெரியநாடு

இத்தாலியில் 6கோடி நபர்கள்
இந்தியாவில் 130 கோடி நபர்கள்

இத்தாலி மக்கள் , இந்திய மக்களைவிட
கல்வியிலும் பொருளாதாரத்திலும் டாப்புல இருக்காங்க....

அதுபோல அமெரிக்காவடன் இந்தியாவை பொருளாதாரத்திலும் கல்வியிலும் ஒப்பிடவே
முடியாது

ஆனால் இப்படிப்பட்ட
வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்கள்
மக்களை கட்டுப்படுத்த முடியாமல்
கொரானாவையும் கட்டுப்படுத்த முடியாமல்
தவிக்கும் போது...

சற்றும் யோசிக்காமல்....
பொருளாதாரத்தை பின்னடி பார்த்துப்போம் என்று ஒதுக்கிவிட்டு
மக்கள் உயிரை காப்பாற்ற ஊரடங்கு உத்தரவு தைரியமாக
போட்டாங்க பாருங்கள்...

அன்றாடம் நடக்குற நோய் தொற்று எவ்வளவு? இறப்பு எவ்வளவு? குணமாகி போவோர் எத்தனை பேர் என்று அரசாங்க லெட்ஜர்ல அப்டேட் ஆகுது...

ஒரு மூன்றாயிரம் பேர் வாழுற சின்ன கிராமத்தோட நாலாவது வீதிலிருக்குற, ரெண்டாவது வீட்டு ராமசாமி பையன் ரமேஷ்
வெளிநாட்டுலிருந்து வந்து இருக்கார் விடாதே பிடி என்று
பஞ்சாயத்து கிளர்க்கு, ஓடிவர

அவருக்கு காய்சலா இருக்கா
வேறு ஏதும் கொரானா அறிகுறி இருக்கா
என்று VHN நர்ஸ் செக் பண்ணிட...

அந்த விபரத்தை VAO லெட்ஜர்ல அப்டேட் பண்ணி தாசில்தாருக்கு ஒரு மணிநேரத்தில வாட்ஸ்ஆப்புல அனுப்ப.....
தாசில்தார் அடுத்த ஒரு மணிநேரத்தில எல்லா பஞ்சாயத்து லிஸ்ட்டையும் கம்ப்யூட்டரில் கலெக்டருக்கு அனுப்ப....

கலெக்டர் எல்லா தாசில்தாரும் அனுப்பிய டேட்டாவை சரிபார்த்து அறிக்கையோடு ஹெல்த் மினிஸ்ட்டருக்கு அனுப்ப...

நமது பஞ்சாயத்தில் காலைல
ஒன்பது மணிக்கு ராமசாமி பையன் ரமேஷ்சை
செக் பண்ணியது மதியம் ஒரு மணிக்கு தலைமை செயலக பைலில் இருக்கு...

இதெல்லாம் அப்படியே நேரா பிரதமர் அலுவலகத்தின் மெயிலில் ஏறி
நம்ம பஞ்சாயத்து ரமேஷ் ஜாதகம் பிரதமர் கையில் இருக்கும்....
என்ன... ஸ்பீடு....

மூவாயிரம் பேருக்கு
ஒரு பஞ்சாயத்து போர்டு...
இருபதாயிரம் பேருக்கு
ஒரு பேரூராட்சி...

ஒருலட்சம் பேருக்கு நகராட்சி...

பத்து லட்சம் பேருக்கு மாநகராட்சி....

இதற்கு எல்லாம், செகரட்டரி, க்ளார்க், ஓஏ, வாட்டர் போர்டு ஆப்ரேட்டர்,
EB ஆப்ரேட்டர், துப்புரவு பணியாளர்கள்னு ஆரம்பிச்சு பெரிய உள்ளாட்சிதுறை நிர்வாகமும்....
VHN ஹெல்த் இன்ஸ்பெக்டர், மாவட்ட இணை இயக்குநர் என்று சுகாதாரத்துறை நிர்வாகமும்...

இதற்கெல்லாம் துணையாக இரவு பகலாக காவல்துறையினரும்...

நம்மை வீட்டுக்குள்ள இருக்க சொல்லிவிட்டு அவர்கள் வெளியே போராடிக்கொண்டு ஓடி ஆடி உழைக்க வைத்த இந்திய சிஸ்டத்தை ஒரு நூலில் இணைத்து வழி நடத்தி
கொரானாவுடன் போர் செய்கிறார்கள்...

அதனால, கொரோனாவ கட்டுப்படுத்துற விஷயத்துல, இந்தியாவுக்கு பாடமெடுக்குற தகுதி வேற எந்த நாட்டுக்கும் கிடையாது.

சீனாவை பாரு...
கீயூபாவை என்று யாராவது பேசினால்
பழக்கவழக்கம் போனாலும் பரவாயில்லை அந்த நபர்களை விரட்டி விடுங்க...
ஒவ்வொரு தனிமனிதனை சோதிக்குறது, நோய் தடுப்பு ஏற்ப்படுத்ரதுன்னு எந்த விஷயமாகட்டும்... இந்தியாதான் உலகத்துக்கு உதாரணம்.

என்ன ஒரு பிரச்சனை...
இந்தியாவில் அதிக சுதந்திரம் அதனால் நன்றிகெட்ட தனமான ஆட்களால் அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை அடுத்த நாட்டை புகழ்ந்துகிட்டு
தாய் நாட்டை
பழித்து இழித்து பேசுவார்கள்...

இந்த 5% சதவிகித நபர்களின்
தொந்தரவுத்தான் பிரச்சனையே தவிர, இந்திய சிஸ்டமேடிக்க அடிச்சுக்க, உலகத்துல வேறொரு சிஸ்டமே கிடையாது !!!
You can follow @being_rowdy.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: