டேய் இப்ப வரையும் 1983 ல கப் வாங்கி குடுத்தது கபில் தேவ்னு தான் முக்காவாசி பேருக்கு தெரியும்... பாதி பேருக்கு டீம்ல இருக்கவங்க பேர் கூட தெரியாது..1983 ல இந்திய அணிய விட பல மடங்கு பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் இருந்தது .. இருந்தும் என்ன பயன் ... https://twitter.com/commander_offl/status/1245680015909347328
பலமான தலைமை இல்லை..கபில் தேவ்
அந்த காலகட்டத்தில கிரிக்கெட் உலக ஏகாபத்திய நாடுகளே பாத்து பயந்த ஒரே மனிதன்.அப்போலாம் இந்தியா வளரும் நாடு கூட கிடையாது..வெறும் இங்கிலாந்தோட கடன் கட்டுபாட்டுல இருந்த சுதந்திரம் வாங்கியும் வாங்காத காமென்வெல்த் நாடு.. மத்த நாடுகல்ட்ட இருந்த

மாறி தரம் வாய்ந்த மைதானம் , இதர அத்தியாவசிய பொருட்கள் , மருத்துவ வசதி கூட இந்தியாவில் இல்லை..இருந்தும் இந்திய அணி வென்றதன் காரணம் கபில் தேவ் மட்டுமே என்பது அன்றும் இன்றும் என்றும் பலராலும் மறுக்க முடியாத உண்மை..
ஒரு அணி வெற்றி வாகை சூடுவது தலைவனால் மட்டுமே என்பதை நான் எப்போதும் தீர்க்கமாக சொல்லுவேன்...ஏனெனில் உலக புகழ் பெற்ற சுல்தானிய பேரரசர் ஆசியாவிலே அதிக போர்களில் வெற்றி வாகை சூடிய மன்னன் , சுல்த்தானிய மற்றும் இந்துஸ்த்தானத்தின் தலை சிறந்த மன்னன் அலாவுதீன் கில்ஜி
அவர் தன் அரசாட்சியில் அதிக போர்களில் வெற்றி பெற்றதன் முழு காரணம் அவரின் படை தளபதி ஆஃப்ரிக்க அடிமை மாலிக்காபூர் அது மட்டுமல்லாமல் அவர் படிப்பறிவு இல்லாதவர்.என்ற போதிலும் அவரின் அவையை அலங்கரித்த புகழ்பெற்ற அறிஞர்களும் அவரின் வெற்றிக்கு பாதி காரணம்...
ஆயிரம் தான் இவர்கள் எல்லாம் உறுதுணையாக இருந்தாலும் அவர்களை தேர்தெடுத்து, நன்முறையில் நடத்தி அவர்களை சிறந்த முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டவர் இந்திய சாம்ராஜ்யத்தில் அலாவுதீன் கில்ஜி மட்டுமே, அக்பர் கூட சில சமயங்களில் தடுமாறினார்.ஆகையால் தான் அலாவுதீன் அக்பரின் முன்னோடி என்று
வரலாறு கூறுகிறது ..ஆயிரம் சிறந்த படை வீரர்கள் , சிறந்த அறிஞர்கள் , சிறந்த தளபதிகள் தன் வசம் இருந்தாலும் தலைமை சரி இல்லை என்றால் சாம்ராஜ்ஜியமே அழியும் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு முகமது பின் துக்ளக் ..
அதே போல் தான் அசாருதீன் , கங்குலி , கோஹ்லி , ரோஹித் அணி பலமாக இருந்து என்ன பிரயோஜனம் ...1996 - 2007 வரை இருந்த இந்திய அணி 2007 க்கு பின்னர் வந்த இந்திய அணியை விட பலம் வாய்ந்தது என்று இப்போ உள்ளவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை ..80's, 90's கிட்ஸ்க்கு மட்டுமே தெரியும்.. இருந்தும்
டோனியின் தலைமை திறமையால் உலக கோப்பை சாத்தியமாயிற்று ..வரலாறு ராஜராஜ சோழனின் படை வீரகளை பற்றி பேசாது ராஜராஜ சோழனை பற்றி மட்டுமே பேசும் ..அதே போல் தான் தோனியை பற்றி பேசுவதில் தவறு இல்லை ..இருந்தும் ஏன் 2007 க்கு பின்னரும் 2011 க்கு பின்னரும் டோனி தோற்றார் என்று கேள்வி கேட்டால் ,
ஆலாலபட்ட நெப்போலியன் , அலெக்சாண்டரே தனது இளமை,.இடை , முதுமை காலங்களில் பல போர்களின் தோற்றம் உண்டு ..இதனால் வரலாறு அவர்களை பேசாமல் விட்டு விட்டதா அல்லது அவர்களை வென்ற அரசர்களை பற்றி பேசி விட்டதா..அரசன் என்றும் அரசனே 
..


உலக நாடுகளில் உள்ள அத்தனை ரசிகர்களும் டோனி போல் தலைமை எதிர்பார்க்கும் போது சொந்த நாடே அவரை அசிங்க படுத்துறது கஷ்டத்த தான் தருது...ஒரே ஒரு விஷயம் மட்டும் புரியுது இந்த உலகம் அதிகம் ஜெய்ச்சிட்டா பொறாமைல பேசுது , அதிகம் தோத்துட்டா ஏளனத்துல பேசுது ..
வேற எப்டி இருக்கணுனு கேக்ரிங்களா ..தனக்கு தேவையான ரன்ன அடிச்சிகிட்டு நல்ல பேர வாங்கிட்டு போய்டனும் போல.. அப்டி இருந்தா கடவுள்னு தூக்கி வச்சி ஆடுவானுங்க ... இன்னைக்கி நீங்க டோனிய தரம் தாழ்த்தி பேசிடலாம்..ஆனா இன்னும் 50 வருஷத்துக்கு அப்புறம் இந்தியாக்கு
உலக கோப்பை வாங்கி குடுத்தது யாருனு கேட்டா உலகம் டோனிய தான் சொல்லும் , அப்போ அணியில விளையாண்ட விளையாட்டு வீரர்கள கூட மறந்துடுவாங்க ..என் தலைவன் வரலாற்றுல எப்பவோ இடம் பெற்றுட்டாண்டா..ஒரு உலக கோப்பை வாங்கி குடுத்த கபில் தேவ் உங்களுக்கு பெருசுனா, ரெண்டு உலக கோப்பை வாங்கி குடுத்த டோனி
எங்களுக்கு பெருசு தான்டா... மைண்ட் செட்ட மாத்துங்க டா...