நேற்று மாலை நண்பன் ஒருவன் திடீரென ஃபோன் பண்ணி, நம்ம ஊர் கடைக்காரர் ஒருவர் தன் பத்து வயது மகனின் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்காக 144 தடைக்கு முன் சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்ததாகவும், டாக்டர்கள் கை விரித்த நிலையில்
அவர் திரும்பவும் ஊருக்கு சென்று சித்த வைத்திய முறை மேற்கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் அந்த ஏழைத் தகப்பனுக்கு வேறு வழி தெரியவில்லை. வாடகைக்காருக்கு 8000ரூபாய் கேட்பதாக கூறி என்னை உதவச் சொன்னார்.
நானும் அவரைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு,
நண்பர்களின் உதவியையும் நாடினேன். எனது கல்லூரி நண்பி ஒருவர் திமுகவில் பொறுப்பில் இருக்கிறார். அவரிடம் சிறுதொகை ஏதும் கிடைக்குமாயென வாட்ஸ்ஆப்பில் கேட்டேன்.பத்து நிமிடங்களில் தொடர்பு கொண்டு தான் சென்னை திமுக இளைஞரணியிடம் பேசுவதாக கூறினார்.
அடுத்த அரை மணி நேரத்தில் தொடர்பு கொண்டு காலை திமுக இளைஞரணி தொண்டர்கள் அவரை சந்தித்து உதவுவார்கள் என்று கூறினார். எனக்கு அரை நம்பிக்கைதான். இன்று காலை பத்து மணிக்கு அந்த சிறுவனின் தந்தை பேசினார். மிகவும் நொந்த மனநிலை.
5 வருடமாக சிகிச்சை எடுக்கிறார்களாம். இதற்கு மேல் அவன் வலியை என்னால் தாங்க முடியாது என்றார். வலி தெரியாமல் தூங்குவதற்கான மாத்திரையை கூட மிகவும் கடினப்பட்டு தாம்பரத்தில் வாங்கி எடுத்து வந்தாராம். அதற்குள் என் நண்பி உதவி பற்றி அவரிடம் பேசியிருந்தார்.
காலை பதினொரு மணிக்கு சிறுவனின் தந்தை அழைத்தார். திமுக இளைஞரணியை சார்ந்தவர்கள் வந்தார்களெனவும், அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் விடுவிப்பு அறிக்கையை தர தாமதிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அடுத்த அரை மணி நேரத்தில் எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.K.S.ரவிச்சந்திரன் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து விடுவிப்பு அறிக்கை வாங்கி தந்ததோடு, பயணத்திற்கான அனுமதி உத்தரவையும் பெற்று தந்துவிட்டு, 8000ரூபாய் திமுக இளைஞரணி உதயநிதி நிதியென்று கூறி தந்து சென்றதாக கூறினார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின் நண்பர்கள் மற்றும் எங்களால் முடிந்த தொகையை கணக்கில் அனுப்பி வைத்தேன். இப்படியெல்லாம் நடக்குமா என என்னால் நம்ப முடியவில்லை, ஆனால் நடந்தது.
You can follow @sarankaran_y.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: