#ராமநவமி
ராமன் எளிய மக்களுக்கும்,ஏனைய உயிர்களுக்கும் கருணை செய்ய வந்த அவதாரம்.அவன் மண்ணிலேயே விண்ணை கொண்டு வந்தான்.ஆயிரமாண்டாக வறண்டு கிடக்கும் பாலையில் அச்சுறுத்தலற்று பெய்த அமுத மழை.(1)
ராமன் முடிசூடும் போது மக்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று கம்பன் சொல்லுவான்.அதாவது கற்பிற் சிறந்தோங்கிய மாதர்கள் எல்லோரும் தாய் கோசலையின் மனமடைந்த பூரிப்பை அடைந்தார்களாம்.வேத பிராமணர்கள் ராமனின் குரு வசிஷ்டனின் மனநிலையை பெற்றார்களாம்.(2)
இளைய மகளிர் சீதையின் மனதையும்,சீதையோ லெக்ஷ்மியின் மனதையும்,மூப்பெய்திய எண்ணத் தூய்மையுடைய கிழவர்கள் தந்தை தசரதனின் மனதையும் ஒத்து,நாடே தன் அண்ணனும்,தம்பியும்,மகனும்,
மணாளனுமாக ராமனை கண்டிருந்தது என்கிறார்.(3)
// மாதர்கள், கற்பின் மிக்கார், கோசலை மனத்தை ஒத்தார்;
வேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் ஊர்ச்
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார்// - கம்பராமாயணம்.(4)
அனைவரும் கொண்டாடும் மாபுருஷன் ஸ்ரீராமன்.ராமராஜ்யக் கனவு என்பது யாருக்கானது என்பதையும் கம்பனே சொல்கிறார் ராமன் கானகம் புறப்படும் போது நடந்ததாக அதை..(5)
பறவைகள்,வீட்டில் உறங்கும் பூனைகள்,பசு அதன் கன்று,மலர்சோலைகள்,யானைகள் என எல்லாம் அழுதன.அய்யகோ! ராமன் என்னை ஆளாமல் போகிறானே..அவனாட்சிக்குட்படாமல் வாழப் போகிறோமே என ஏங்கி ஏங்கி அழுததாக சொல்கிறார் கம்பர்..(6)
ராமகாதையும்-மகாபாரதமும் இந்த நிலமெங்கும் வாழ்ந்த வாழ்கிற கவிஞன்,ஓவியன்,சிற்பி,வீரன் என எல்லோராலும் மீளுருவாக்கப்பட்டுக் கொண்டே வருகிறது எல்லா காலமும்..(7)
'ராம ராம கிருஷ்ண கிருஷ்ண' என்று ஓயாமல் ஏங்கித்துதிப்பது போல கவியிலும்,ஓவியத்திலும்,சிற்பத்திலும் கலைஞர்கள் அந்த நாமத்தை தன் மொழியில் உச்சரித்து இறவா புகழ் பெற்றிருக்கிறார்கள்.போர்களத்திலே வீரன் அந்த வானுயர் நீதியை போற்றி தன் முன்னோர் வழி என்று நடுகல்லாகிப் போயிருக்கிறார்கள்(8)
மூன்று பரம்பொருளுக்கும் ஆதியாய் நின்ற மூலம் ராமனென்றான் கம்பன்.யுகங்களை எல்லாம் தன் பாதத்தில் சரணடையச் செய்யும் நெடிந்துயர்ந்த உயரம் ராமனுடையது.(9)
அதை பாடி,செதுக்கி,நடித்து இன்னும் என்னென்னவாக எல்லாம் செய்ய முடியுமோ அப்படிச் செய்கிறார்கள்..சொல்லிச் சொல்லி அடங்கவில்லை அந்த தூய நாயகனின் மீதுள்ள காதல் வெறி.(10)
ராமராஜ்யம் அணில் தொடங்கி மகரிஷி வரை யாருக்கும் அடைக்கலம் கொடுக்கும் கருணை தரும் பேராட்சி.அந்த ராமராஜ்யம் என்ற கனவை ஏதோ போகிற போக்கில் காந்தி சொல்லவில்லை.(11)
ஒரு புயல் காற்றில் சகலமும் சிலிர்த்து அந்தரத்தில் பறக்கும் நொடிகளை ராமனின் பெயரை கேட்ட மாத்திரத்திலேயே பாரதமெங்கும் மக்கள் அடைகிறார்கள் உணர்வாக.(12)
இது இன்னும் பல்லாயிரம் வருடம் இங்கு ஒவ்வொரு அணுவிலும் ஊறி நிற்கும்.ஹனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்வது,ஒரு வணிக நிறுவன அடையாளமாக உருக்கொள்ளும்.(13)
இன்னொரு அழி ரப்பர் நிறுவனம் லங்காதகனம் என்று பெயர் சூட்டி தன் அழிப்பானின் நடுவே ஹனுமனின் 'லங்காதகனத்தை' அடையாளமாக பயன்படுத்தும்.எந்த காலத்திலும் இந்த கதைகளின் சுவடில்லாமல் எதுவும் இங்கே உருவாகாது.(14)
ராமகாதை இலக்கியமாக,ஓவியமாக,சிலையாக,
நாடகமாக,சினிமாவாக உருமாறிக் கொண்டே வரும்.ஸ்ரீராமஜெயத்தை பல்லாயிரம் முறை நாமம் ஜெபம் செய்து எழுதுவதைப் போல நீடித்து நிற்கும் காலம் அதன் மூலவனின் ராமகாதையை விடாமல் எழுதிக் கொண்டேதான் வரும்..

#ராமநவமி வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🙏🙏(15)
You can follow @sundarrajachola.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: