என்ன செய்து கிழித்தது #திராவிட_இயக்கம் என்று வாய் கூசாமல் கேட்பவர்களில் பாதிப் பேர் திராவிட இயக்கச் செயல்பாடுகளால் பயன் பெற்றவர்கள். மீதிப் பேர் அது குறித்து அறியாமலே திட்டும் இளைய தலைமுறையினர். அறியாதவர்களும் இனி அறிந்து கொண்டே திட்டுங்கள்
நாளை முதல்
அறிவோம் #தினம்_ஒரு_தலைவர்
நாளை முதல்
அறிவோம் #தினம்_ஒரு_தலைவர்
#திராவிடம் ?
* திராவிடம் என்றால் என்ன?
* திராவிடம் எந்த மொழிச்சொல்?
* யார் திராவிடர்கள்?
* திராவிட நிலப்பரப்பு எது?
* திராவிடம் என்ற சொல்லாடல் திராவிட இயக்கம் சாராத வேறு எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது?
இந்த கேள்விக்கெல்லாம் பதில்

#திராவிட_இயக்க_முன்னோடி
தாழ்வுற்றுப் பாழ்பட்டுக் கிடக்கும் சமூகத்தைக் கைதூக்கிவிட அவ்வப்போது புரட்சியாளர்கள் உதிக்கத் தவறுவதில்லை. வீழ்ந்து கிடந்த தமிழகத்தைத் தன்னிரகரில்லாத மறுமலர்ச்சிப் பணிகளால் எழுச்சியுறச் செய்ய முயன்றவர்களில் #அயோத்திதாசப்_பண்டிதர் முதன்மையானவர்.

#அயோத்திதாச_பண்டிதர்
இயற்பெயர்: காத்தவராயன்
தந்தை: கந்தசாமி பண்டிதர்
மனைவி: தனலட்சுமி (ரெட்டைமலை சீனிவாசன் தங்கை)
பிறப்பு: 20/05/1845
ஊர்: சென்னை ஆயிரம் விளக்கு பகுதி
மொழி புலமை: தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம்
தொழில்: சித்த மருத்துவர், ஆசிரியர், பதிப்பாளர்
மறைவு: 05/05/1914

தென்னிந்திய சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர் அயோத்திதாசர். பகுத்தறிவு, சீர்திருத்தம், சமத்துவம், போன்ற கொள்கைகள் கொண்டவர் எனவே இவரை பெரியார் தனது முன்னோடி என்றார்.
இந்தியாவில் பேரரசை நிறுவிய அசோகருக்கு பிறகு, தமிழகத்தில் பவுத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்
#அயோத்திதாச_பண்டிதர்
இந்தியாவில் பேரரசை நிறுவிய அசோகருக்கு பிறகு, தமிழகத்தில் பவுத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்
#அயோத்திதாச_பண்டிதர்
இலக்கிய, சமூக, சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமூகம் படைக்கும் பணியில் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர்; தென்னிந்தியாவில் தலித் மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர்.
“ #திராவிடர்_கழகம்” என்ற அமைப்பை முதன் முதலில் தோற்றுவித்தவர்.
#அயோத்திதாச_பண்டிதர்
“ #திராவிடர்_கழகம்” என்ற அமைப்பை முதன் முதலில் தோற்றுவித்தவர்.
#அயோத்திதாச_பண்டிதர்
1870இல் தனது 25ஆவது வயதில் “அத்வைதானந்த சபை'' ஒன்றைத் தொடங்கி தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையினப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்துச் சாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார். மலையினப் (தோடர்)பெண்ணைக் கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
#அயோத்திதாச_பண்டிதர்
#அயோத்திதாச_பண்டிதர்
இவர் சில காலம் இரங்கூனில் (பர்மிய நாடு) வாழ்ந்தார். இங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் அவரது மனைவியும் நோயினால் இறந்து போயினர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரிக்கு திரும்பியவர், தனது உறவினர் இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
1881ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது, தாழ்த்தப்பட்டவர்களை "ஆதித் தமிழன்' என்று பதிவு செய்ய கோரிக்கை வைத்தார்.
1986ஆம் ஆண்டு ஆதித்தமிழர்கள் (தாழ்த்தப்பட்டோர்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தினார்.
#அயோத்திதாச_பண்டிதர்
1986ஆம் ஆண்டு ஆதித்தமிழர்கள் (தாழ்த்தப்பட்டோர்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தினார்.
#அயோத்திதாச_பண்டிதர்
1882ஆம் ஆண்டு “திராவிடர் கழகம்'' என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வந்த #ஜான்ரத்தினம், 1885ல் “ #திராவிட_பாண்டியன்'' என்ற இதழைத் தொடங்கினார்
அயோத்திதாசர் அந்த இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார்
அயோத்திதாசர் அந்த இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார்
அரசியல், பொருளாதார ரீதியில் நசுக்கப்படும் தலித் மக்களின் விடுதலையில் அதிகமான அக்கறை செலுத்தினார்.
1890ஆம் ஆண்டு நீலகிரியில் “ #திராவிட_மகாஜன_சபை'' என்ற அமைப்பை துவங்கி ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்தார். அமைப்பின் சார்பில் 1891ஆம் ஆண்டு ஒரு மாநாட்டை நடத்தி தீர்மானங்கள் இயற்றினார்.
1890ஆம் ஆண்டு நீலகிரியில் “ #திராவிட_மகாஜன_சபை'' என்ற அமைப்பை துவங்கி ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்தார். அமைப்பின் சார்பில் 1891ஆம் ஆண்டு ஒரு மாநாட்டை நடத்தி தீர்மானங்கள் இயற்றினார்.
1892ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மகாஜன சபை மாநாட்டில், நீலகிரியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு "ஒடுக்கப்பட்டோர் கோவிலுக்குள் நுழைய அனுமதி வேண்டும்" என்று குரல் கொடுத்தார். இதில் கலந்து கொண்ட ஆதிக்க சாதியினர் அவரை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பினர்.
கல்வியால் மட்டுமே தலித் மக்கள் முன்னேற முடியும் என்று கருதி, பிரம்ம ஞான சபை #ஆல்காட் அவர்களுடனான நட்பை பயன்படுத்தி 1892இல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 பள்ளிகளை கொண்டு வந்தார்.
1894ல் சென்னை மற்றும் வட ஆர்க்காடு மாவட்டங்களில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
1894ல் சென்னை மற்றும் வட ஆர்க்காடு மாவட்டங்களில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
"திராவிட மாகாஜன சபை" சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றி தலித்துகளுக்கு இலவசக் கல்வி, கோயில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 முற்போக்குக் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பினார். அந்த மனு மறுக்கப்பட்டு அலட்சியப் படுத்தப்பட்டது.
இந்து மதம் மீதும், பார்ப்பனியத்தின் மீதும் வெறுப்புற்றுப்போன அவர், இறைக் கொள்கை, சடங்கு வாதம், பார்ப்பனிய ஆதிக்கம், மத, பண்பாட்டுத் தளங்கள் ஆகியவைகளைக் கேள்விக்குள்ளாக்கி சுய சிந்தனை அடிப்படையில் புதிய தேடல்களுக்குத் தயாரானார். #பகுத்தறிவை நோக்கிப் பயணப்பட்டார்.
1902 ஆம் ஆண்டு "தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தை" ஏற்படுத்தினார்.
19/06/1907 அன்று “ஒரு பைசாத் தமிழன்'' என்ற பெயரில் ஒரு வார இதழைச் சென்னை இராயப்பேட்டையில் தொடங்கி வெளியிட்டார்.
தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
19/06/1907 அன்று “ஒரு பைசாத் தமிழன்'' என்ற பெயரில் ஒரு வார இதழைச் சென்னை இராயப்பேட்டையில் தொடங்கி வெளியிட்டார்.
தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
#ஒரு_பைசாத்_தமிழன்
ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்கு பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார் எனத் தன் இதழுக்கு பெயர்க் காரணம் கொடுத்தார்
1908ஆம் ஆண்டு இதழின் பெயரைத் ”தமிழன்'' என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட்டார்.

தமிழகத்தில் தமிழர்களுக்கென்று எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் " #தமிழன்" இதழ் மூலம் பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, மொழிப்பற்று, இன உணர்வு, சமூகநீதி மற்றும் சுயமரியாதை இவற்றை மையமாகக் கொண்டு இதழை நடத்தினார்.
"இந்தி மொழி இந்து சாதி மதத்தோடு தொடர்புடையது எனவே அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது ஆங்கிலமே தகுதியுடையது" என்று 1911ல் எழுதினார்
சுதேசிமித்திரன் போன்ற இதழ்கள் இந்திய விடுதலை பற்றி எழுதியபோது இவர் முதலில் இங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை வேண்டுமென்று எழுதினார்
சுதேசிமித்திரன் போன்ற இதழ்கள் இந்திய விடுதலை பற்றி எழுதியபோது இவர் முதலில் இங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை வேண்டுமென்று எழுதினார்
ஆதிக்க சாதியினர் 'ஒற்றுமை' பேசியபடி ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றபோது, "சுத்த ஜலம் மொண்டு குடிக்க விடாத படுபாவிகளின் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள்! உங்கள் சத்துருக்கள் செய்த தீங்கினை மறந்து விடாதீர்கள்" என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
இந்து மதத்தில் தலித்துகளை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பண்பாட்டு, மதத்தடைகளைத் தூக்கியெறிவதுதான் விடுதலைக்கான ஒரே வழியென சாதி, மத, வர்ண எதிர்ப்புக்கொண்ட பவுத்தம்தான் இதற்குத் தீர்வு என முடிவு செய்கிறார்.
தமிழ்மொழி மறுமலர்ச்சிக்கு பெளத்த மதத்தை துணைக் கருவியாக்கி போராடினார்.
தமிழ்மொழி மறுமலர்ச்சிக்கு பெளத்த மதத்தை துணைக் கருவியாக்கி போராடினார்.
புரட்சியாளர் #அம்பேத்கர் புத்த மதம் மாறுவதற்கு அயோத்திதாசர் அவர்களின் ஆழ்ந்த கருத்துக்களே காரணமாக அமைந்தது.
தனது கொள்கைகளை முன்பே முன்னெடுத்தவர் அயோத்திதாசர் என்பதால் அவரை "திராவிட இயக்கத்தின் முன்னோடி" என்றார் #பெரியார்.
தனது கொள்கைகளை முன்பே முன்னெடுத்தவர் அயோத்திதாசர் என்பதால் அவரை "திராவிட இயக்கத்தின் முன்னோடி" என்றார் #பெரியார்.
எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர், மருத்துவர், பதிப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர் எனப் பன்முகங் கொண்டவராக விளங்கிய அயோத்திதாசருக்கு, எல்லாவற்றையும் விடத் தம்மின மக்களின் விடுதலையே மிக முக்கிய நோக்கமாக இருந்தது. அதற்காகவே தன் வாழ்நாளெல்லாம் உழைத்தார். 05/05/1914 அன்று மறைந்தார்.
அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார் பட்லர் கந்தப்பன் அவர்களிடம்தான் திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட ஓலைச்சுவடிகள் இருந்தது
1785ல் ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் துரை என்பவரிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட எல்லீஸ் துரை தான் பொறுப்பு வகித்த தமிழ்ச்சங்கம் மூலம் அச்சில் கொண்டு வந்தார்.
1785ல் ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் துரை என்பவரிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட எல்லீஸ் துரை தான் பொறுப்பு வகித்த தமிழ்ச்சங்கம் மூலம் அச்சில் கொண்டு வந்தார்.
தென்னிந்திய வரலாற்றில், இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதுகளில் நீதிக் கட்சியின் தோற்றம் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 3 சதவீத மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் மொத்த சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரக் களங்களில் ஆதிக்கம் பெற்றிருந்தனர்.
இத்தகு சூழலில் பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சார்ந்த தலைவர்களின் எழுத்துக்கள் வாயிலாகவும், ஆங்கிலேயக் கல்வியாளர்கள் வாயிலாகவும், பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் இனவழியே திராவிடர்கள் என்ற உணர்வும் வெளியாயிற்று. பார்ப்பனரல்லாத பிரிவினர் தம் நலன்களைப் பாதுகாக்க ஓர் இயக்கத்தை உருவாக்கினர்.
2) #டாக்டர்_நடேசனார்
திராவிட இயக்கத்தின் விடிவெள்ளி;
திராவிடச் சங்கத்தை உருவாக்கிய திராவிட சிங்கம்;
நீதிக்கட்சியின் தோற்றுவாய்க்கு மூலவித்து #டாக்டர்_நடேசனார்
தோற்றம்: 1975
தந்தை: கிருஷ்ணசாமி
ஊர்: திருவல்லிக்கேணி
மறைவு: 18/02/1937

திருவல்லிக்கேணியில் தொடக்கப் பள்ளியில் பயின்ற அவர் சென்னைப் பல்கலைக்கழகத் தில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார்.
பின்னர், ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார்.
பின்னர், ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜ கல்லூரியில் உடலியல் (Physiology) விரிவுரையா ளராகச் சிறிது காலம் பணியாற்றினார்.
ஏழை எளியோர்க்குத் தொண்டு புரிய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் மேலோங்கி நின்றது. சேவை புரிவதற்குரிய துறை மருத்துவத் துறை என உணர்ந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று மருத்துவராகிச் சென்னை திருவல்லிக்கேணியில் தனது மருத்துவச் சேவையைத் தொடங்கினார்.
அந்நாளில் அரசு பணிகளில் பெரும்பாலும் பிராமணச் சமுதாய மக்களே இடம்பெற்று ஆதிக்கம் பெற்றிருந்தனர். அவர்களின் கீழ்ப் பணிபுரிந்த பிராமணரல்லாதவர்களை தரக்குறைவாகவும் இழிவாகவும் நடத்தினர். அந்த ஊழியர்கள் தங்கள் குறைகளை வெளியிடவும், உரிமைகளை பெற்றிடவும் ஓர் அமைப்பு தேவை என்று உணர்ந்தார்.
பிராமணரல்லாத அரசு ஊழியர்கள் ஒன்றிணைந்து 1912இல், “சென்னை ஐக்கிய சங்கம்” (Madras United League) என்ற அமைப்பினைத் தொடங்கினர்.
இந்த அமைப்பின் கூட்டங்கள் திருவல்லிக்கேணியில் டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் மாலை நேரங்களில் நடைபெற்று வந்தன.
இந்த அமைப்பின் கூட்டங்கள் திருவல்லிக்கேணியில் டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் மாலை நேரங்களில் நடைபெற்று வந்தன.
இச்சங்கத்தின் முதல் சமூகப்பணி முதியோர் கல்வியாகும். மாலை நேரங்களில் நடந்த வகுப்புகளில் அரசு அலுவலர்களே ஆசிரியர்களாக வைத்து பாடங்களை நடத்தினர்
1913ல் நடேசனாரின் மருத்துவமணை தோட்டத்தில் நடைபெற்ற சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் சங்கத்தின் பெயர் #திராவிடர்_சங்கம் என மாற்றப்பட்டது
1913ல் நடேசனாரின் மருத்துவமணை தோட்டத்தில் நடைபெற்ற சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் சங்கத்தின் பெயர் #திராவிடர்_சங்கம் என மாற்றப்பட்டது
நடேசனார் சென்னை - திருவல்லிக்கேணியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அந்த காலத்தில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் விடுதிகள் கிடையாது. பார்ப்பனர் உணவு விடுதிகளில், பார்ப்பனர் அல்லாதவர் எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடலாம்; ஆனால் தங்கிச் சாப்பிட முடியாது.
பிராமணர் அல்லாத மாணவர்கள் சென்னையில் தங்கி படிக்க விடுதிகள் கொடுக்க மறுத்த காலத்தில் திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் ஜூலை 1916ல் #திராவிடர்_இல்லம் (Dravidan Home) என்ற விடுதியைத் துவங்கி மாணவர் தங்கி படிக்க துணை புரிந்தார். உணவு விடுதியோடு நூலகமும் அங்கே அமைந்திருந்தது.
இங்கே தங்கிப் படித்த ஆர்.கே.சண்முகம் தான் பிற்காலத்தில், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சராகவும், முதல் தமிழர் சபாநாயகராகவும் பதவி வகித்தார்
மேலும் எஸ்.சுப்பிரமணியம் உயர்நீதிபதியாகவும், தி.மூ.நாராயணசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் உயர்வு பெற்றார்கள்
மேலும் எஸ்.சுப்பிரமணியம் உயர்நீதிபதியாகவும், தி.மூ.நாராயணசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் உயர்வு பெற்றார்கள்
காங்கிரஸ் இயக்கம் வடநாட்டார் ஆதிக்கமும், தென்னாட்டுப் பார்ப்பனர் ஆதிக்கமும் கொண்ட இயக்கம் என்பதை சர்.பிட்டி. தியாகராயரும், டி.எம். நாயரும் உணர்ந்திருந்தனர்.
தென்னிந்திய திராவிட மக்களுக்கு காங்கிரஸ் அநீதி இழைத்து வருவதை அறிந்து அவ்வியக்கத்தினின்றும் விலகியிருந்தனர்.
தென்னிந்திய திராவிட மக்களுக்கு காங்கிரஸ் அநீதி இழைத்து வருவதை அறிந்து அவ்வியக்கத்தினின்றும் விலகியிருந்தனர்.
இந்நிலையில் பார்ப்பனரல்லாதோர் நலன்களுக்கு அச்சுறுத்தலாக ஹோம் ரூல் இயக்கம் தோன்றியதால் அதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் பார்ப்பனரல்லாத தலைவர்கள் இருந்தனர். ஆனால் இவ்விரு தலைவர்களும் 1913ல் சென்னை நகரசபை உறுப்பினராக இருந்தபோது நடந்த சில நிகழ்வுகளால் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர்
சில ஆண்டுகள் பேசிக் கொள்ளாமலிருந்த டி.எம் நாயரையும், பிட்டி. தியாகராயரையும் ஒன்றிணைய வைத்தவர் டாக்டர் நடேசனார் ஆவார்
பொதுநலனின் பொருட்டு தங்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்வியல் உரிமைகளைக் காப்பாற்ற வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபட்டனர்.
பொதுநலனின் பொருட்டு தங்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்வியல் உரிமைகளைக் காப்பாற்ற வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபட்டனர்.
இப்பெரும் தலைவர்கள் ஒன்றுபட்டதன் விளைவாக 20/11/1916 அன்று பிட்டி. தியாகராயர், டி.எம் நாயர், நடேசனார் மேலும் ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் சென்னை விக்டோரியா அரங்கில் கூடி “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” (South Indian Liberal Federation) என்ற அரசியல் அமைப்பை தொடங்கினர்.
அமைப்பின் சார்பில் "Justice" என்ற ஆங்கில ஏடு தொடங்கப்பட்டது. தமிழில் ‘திராவிடன்’ என்ற இதழும், தெலுங்கில் ‘ஆந்திரப்பிரகாசிகா’ என்ற இதழும் வெளியிடப்பட்டன.
வாரந்தோறும் நடேசனாரின் தோட்டத்தில் பார்ப்பனரல்லாதார் இன எழுச்சிக் கூட்டங்களும், இலக்கியக் கூட்டங்களும் நடத்தப்பட்டது.
வாரந்தோறும் நடேசனாரின் தோட்டத்தில் பார்ப்பனரல்லாதார் இன எழுச்சிக் கூட்டங்களும், இலக்கியக் கூட்டங்களும் நடத்தப்பட்டது.
டாக்டர் நடேசனார் முயற்சி இல்லையானால், நீதிக் கட்சி என்ற பிராமணரல்லாதார் இயக்கம் ஏற்பட்டிருக்க முடியாது. நடேசனார் கூட்டிய மாநாடுகளும் கூட்டங்களும் எண்ணிலடங்காதவை. இவற்றுக்கு நடேசனார் தனது கைப்பொருளையே செலவழித்தார்.
டி.எம்.நாயர் லண்டன் பயணப்பட்டபோது நீதிக் கட்சியின் பொறுப்பு நடேசனாரிடம் ஒப்படைக்கப்பட்டது. டி.எம்.நாயரும் தியாகராயரும் காலமான பிறகு, தனியாக இருந்து நீதிக் கட்சியை நடத்திய பெருமை மிக்கவர் நடேசனார்.
1920-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றார் நடேசனார்
சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் சீரிய குறிக்கோள்களுக்கும் கொள்கைகளுக்கும் வாதாடினார். இவர் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்களில் மிகச்சிறந்தது ‘பார்ப்பனர் அல்லாதார் யார்?' என்பதைப் பற்றிய வரைவுதான்.
சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் சீரிய குறிக்கோள்களுக்கும் கொள்கைகளுக்கும் வாதாடினார். இவர் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்களில் மிகச்சிறந்தது ‘பார்ப்பனர் அல்லாதார் யார்?' என்பதைப் பற்றிய வரைவுதான்.
நீதிக்கட்சியின் போராட்டத்தின் விளைவாக 1919-ல் மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் சட்டமன்றங்களில் பிராமணரல்லாதார் வகுப்புவாரி முறையில் இடம்பெற வகைசெய்யப்பட்டிருந்தது
பிறகு அரசு நிர்வாகங்கள் பல்கலைக்கழக ஆட்சிக்குழு போன்ற அமைப்புகளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கோரியது
பிறகு அரசு நிர்வாகங்கள் பல்கலைக்கழக ஆட்சிக்குழு போன்ற அமைப்புகளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கோரியது
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் தாய்மொழிப் படிப்பை அலட்சியப்படுத்தி வந்தது. நடேசனார் கொண்டு வந்த தீர்மானம்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தாய்மொழிப் படிப்பை அறிமுகப் படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது.
தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அம் மாமனிதர் 18.2.1937 அன்று இம்மண்ணுலகை நீத்தார்.
டாக்டர் நடேசனார் மரணம் அடைந்தபோது ‘குடி அரசு’ இதழில் தந்தை பெரியார் எழுதிய இரங்கல் செய்தி.
டாக்டர் நடேசனார் மரணம் அடைந்தபோது ‘குடி அரசு’ இதழில் தந்தை பெரியார் எழுதிய இரங்கல் செய்தி.
17/09/2008 அன்று டாக்டர் நடேசனார் அஞ்சல் தலை கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டது.
டாக்டர் நடேசனாரின் நினைவுகளை சுமந்து நிற்கும் சென்னையின் அடையாளங்கள்
டாக்டர். நடேசன் பூங்கா
டாக்டர். நடேசன் சாலை.
டாக்டர் நடேசனாரின் நினைவுகளை சுமந்து நிற்கும் சென்னையின் அடையாளங்கள்
டாக்டர். நடேசன் பூங்கா
டாக்டர். நடேசன் சாலை.
திராவிடச் சிங்கம், தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்து சென்னை மாநகராட்சி மூலம் மக்கள் தொண்டு புரிந்தவர். ஒடுக்கப்பட்டோருக்காக வாதாடியவர். அவர்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய பெருமகனார் டாக்டர் நடேசனார்.
வாழ்க நடேசனார் புகழ்; வாழ்க திராவிடம்.
வாழ்க நடேசனார் புகழ்; வாழ்க திராவிடம்.

#சர்_பிட்டி_தியாகராயர்
சிறப்பு பெயர்: வெள்ளுடை வேந்தர்
தோற்றம்: 27/04/1852
ஊர்: சென்னை கொருக்குப்பேட்டை
பெற்றோர்: அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள்
மனைவி: சின்னவள்ளி அம்மாள்
படிப்பு: BA
மொழி புலமை: தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இலத்தீன், பிரெஞ்சு, உருது
மறைவு: 28/04/1925

வணிகத் தொழிலில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த தியாகராயர், வணிகம் மூலம் ஈட்டிய பொருளை ஏழை எளியோர்க்கு உதவிகளாக வாரி வழங்கினார். கைத்தறியில் பல புதுமைகளைப் புகுத்தினார். தென்னிந்திய வர்த்தக் கழகத்தின் தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றினார் (1909 - 1921).
தியாகராயர் காலத்தில் வண்ணாரப்பேட்டையில் தொடக்கப் பள்ளி வசதிகூட அரிதாகக் காணப்பட்டது. வண்ணாரப்பேட்டை வாழ் சிறுவர்கள் இலவசமாக பயின்றிட “வடசென்னை செகண்டரிப் பள்ளியை" 3.12.1897 அன்று தொடங்கினார். இந்தப் பள்ளி 1904இல் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.
தியாகராயர் நினைவைப் போற்றும் வகையில் இப்பள்ளியைக் கல்லூரியாக உயர்த்த பலர் முயற்சி மேற்கொண்டனர். பலருடைய கூட்டு முயற்சியால் 1956முதல் இப்பள்ளி வளர்ந்து தியாகராயர் கல்லூரியாக வளர்ச்சி பெற்றுப் புகழ்பெற்றது.
சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் தலைவராக இருந்துள்ளார் (1887 - 1924 )
தியாகராயர் முயற்சியால்தான் அரசு விக்டோரியா தொழிற் பயிற்சிக் கூடம் 26.3.1889 அன்று நிறுவப்பட்டது.
இவரது முயற்சியால் 1905இல் ஏற்படுத்தப்பட்டதே செங்கல்வராய நாயக்கர் தொழில் நுட்பப் பயிற்சிப் பள்ளி ஆகும்.
தியாகராயர் முயற்சியால்தான் அரசு விக்டோரியா தொழிற் பயிற்சிக் கூடம் 26.3.1889 அன்று நிறுவப்பட்டது.
இவரது முயற்சியால் 1905இல் ஏற்படுத்தப்பட்டதே செங்கல்வராய நாயக்கர் தொழில் நுட்பப் பயிற்சிப் பள்ளி ஆகும்.
06/05/1882 அன்று நடைபெற்ற நகரவைத் தேர்தலில், தண்டையார்பேட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து 1925 வரை சுமார் 42 ஆண்டுகாலம் நடைபெற்ற நகரவைத் தேர்தல் அனைத்திலும் தண்டையார்பேட்டை வேட்பாளராக நின்று வெற்றி வாகை சூடினார்.
(1910-1912) - சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பிராகத் தேர்ந்தெடுகப்பட்டார்.
இந்தியத் தேசியக் காங்கிரசில் தியாகராயர், தன் நண்பர் டாக்டர் டி.எம். நாயருடன் இணைந்து 1916ஆம் ஆண்டு வரை தீவிரமாகச் செயலாற்றி வந்தார்.
இந்தியத் தேசியக் காங்கிரசில் தியாகராயர், தன் நண்பர் டாக்டர் டி.எம். நாயருடன் இணைந்து 1916ஆம் ஆண்டு வரை தீவிரமாகச் செயலாற்றி வந்தார்.
ஒரு பவுன் தங்கம் 20 ரூபாய்க்கும் குறைவாக விற்ற காலத்தில், பத்தாயிரம் ரூபாயை சுளையாக எடுத்து மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் திருப்பணிக்கு நன்கொடையாக அளித்தார் பக்திப் பழமான தியாகராயர்.
ஆண்டு 1916, குடமுழுக்கன்று கோவிலுக்கு செல்கிறார். மிகப்பெரிய நன்கொடை அளித்த அவரை தடுத்து நிறுத்தி “உங்கள் குலதர்மப்படி நீங்கள் இதற்கு மேல் வர அனுமதியில்லை” என்று சொல்லி அவரைத் தரையில் உட்காரவைத்த பார்ப்பனர் விறுவிறுவென குடமுழுக்கு கோபுரத்திற்கு செல்லும் சாரத்தில் ஏறிச் செல்கிறார்
ஆண்டவன் சன்னதியிலேயே பிறப்பினால் பாகுபாடு காட்டும் தன்மையால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியே வந்தவர் அரசியல் களத்தில் இருந்த டி.எம் நாயரை சந்திக்கிறார். முன்னரே இதுகுறித்து போராடி வந்த நடேசனாரும் இணைகிறார். #நீதிக்கட்சி என்ற முதல் திராவிட அரசியல் இயக்கம் 1916ல் உருவானது
1920 - நீதிக்கட்சி வென்று ஆட்சியமைத்தது.
கோவில்களில் ஒரு சிலரே ஏகபோகம் நடத்தி வந்த நிலையை மாற்றி #இந்து_அறநிலையத்துறை சட்டத்தைக் கொண்டு வந்தனர். பனகல் அரசர் இயற்றிய சட்டத்தினால் உருவான அறநிலையத்துறையின் சார்பில்தான் (3-4-2016) கபாலீசுவரர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.

தேர்தலில் வாக்களிக்க இருந்த தடையை நீக்கி, "பெண்களுக்கு வாக்குரிமை" வழங்கியது சர். பிட்டி தியாகராயர் தலைமையிலான நீதிக்கட்சி.
* அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம், நாள் 09/03/1923
* (1921 - 1928 ) - 19,095 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டது.
* தொடக்கப் பள்ளிகளில் Mid Day Meals Scheme (1921)
* உயர்கல்விகளில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தை குறைக்க " கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குழு" அமைப்பு

* கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் ( அரசாணை எண் 849, dt 21/06/1923)
* தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும் ( அரசாணை எண்: (அ) 205, dt 01/02/1924, அரசாணை எண்: (ஆ) 1825, dt 24/09/1924 ).
* தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும் ( அரசாணை எண்: (அ) 205, dt 01/02/1924, அரசாணை எண்: (ஆ) 1825, dt 24/09/1924 ).
மருத்துவம் படிக்க சமஸ்கிரதம் தெரிந்திருக்க வேண்டும்;
பார்ப்பனர் மட்டுமே சம்ஸ்கிரதம் கற்க முடியும்.
இதுபோன்ற பார்ப்பனீயத்தின் சூழ்ச்சியை தகர்த்தது #நீதிக்கட்சி
பிட்டி தியாகராயர் முனைந்து அவ்விதியை ரத்து செய்த பிறகே பார்ப்பரல்லாத மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றனர்.

யஞ்யராமன் என்ற பிராமண இளைஞர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொண்டு செய்ய சேரிப் பகுதியில் போய்த் தங்கினார் என்பதற்காக அவரைச் சாதியிலிருந்து விலக்கி வைத்தனர். அப்போது பிட்டி தியாகராயர் தலையிட்டு அவரைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி நியமனம் செய்தார்.
#திராவிடத்_தந்தை சர். பிட்டி. தியாகராயர் முழக்கம்;
பார்ப்பனீயத்திற்கு பலியாகாதே! மதத்திலே அவன் தரகு வேண்டாம்!
கல்வியிலே அவன் போதனை வேண்டாம்!
சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே!
திராவிடா, விழி! எழு! நட !
உன் நாட்டை உனதாக்கு...!
பார்ப்பனீயத்திற்கு பலியாகாதே! மதத்திலே அவன் தரகு வேண்டாம்!
கல்வியிலே அவன் போதனை வேண்டாம்!
சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே!
திராவிடா, விழி! எழு! நட !
உன் நாட்டை உனதாக்கு...!
தியாக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தியாகச் செம்மல் திராவிட மக்களின் பெருந்தலைவர் சர் பிட்டி. தியாகராயர் 28.4.1925 அன்று மக்களைத் துன்பக் கடலில் ஆழ்த்திவிட்டு இப்பூவுலகை விட்டு மறைந்தார்.
சர். பிட்டி. தியாகராயர் நினைவிடம். கொருக்குப்பேட்டை.
சர். பிட்டி. தியாகராயர் நினைவிடம். கொருக்குப்பேட்டை.
"போக போக்கியத்தை விட்டுத் தாமாகவே கள்ளும் முள்ளும் காட்டாறும் கருங்குழியும் நிரம்பிய பாதை வழியே செல்லத் தொடங்கினார். அவர் களத்தில் தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது. அவர் அன்று பறக்கவிட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின் கீழ் நின்றுதான் நாம் இன்று பணியாற்றி வருகிறோம்”- #அண்ணா
சென்னைக்கு வெளியூரிலிருந்து வருபவர்கள் தவறாமல் வந்து செல்லும் ஒரு இடம் T Nagar. தியாகராய நகர் தான் T Nagar என்றாகிவிட்டது.
இந்தப் பகுதிக்கு 1925ல் சர்.பிட்டி. தியாகராயர் நினைவாக அவர் பெயர் சூட்டினார்கள்.
சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம், ரங்கநாதன் தெரு (1962)
இந்தப் பகுதிக்கு 1925ல் சர்.பிட்டி. தியாகராயர் நினைவாக அவர் பெயர் சூட்டினார்கள்.
சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம், ரங்கநாதன் தெரு (1962)
'பிட்டி தியாகராயர் அரங்கம்' எனும் பெயரில், தியாகராயர் நகரில், அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்றினை, தலைவர் கலைஞர் அவர்கள் கழக ஆட்சிக் காலத்தில் உருவாக்கினார்.
ரிப்பன் மாளிகை எனப்படும் சென்னை மாநகராட்சி நுழைவாயிலில் இவரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1959ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்ற திமுகவினர் நகர மன்றத்தில் நுழையும் முன் வளாகத்தில் அமைந்திருந்த தியாகராயர் சிலைக்கு முதலில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
கலைஞரின் "பராசக்தி" படத்தில் இடம்பெறும் காட்சி இது. படத்தில் வட்டமிட்டுக் காட்டியுள்ளவர் யார் என்று தெரிகிறதா?
நீதிக்கட்சியின் தந்தை தியாகராயர் அவர்கள். அவரை நினைவுகூறும் வகையில் இக்காட்சி இடம்பெற்றது
தணிக்கை குழுவினரிடம் சிக்காத வண்ணம் இக்காட்சியை அமைக்க வைத்தார் கலைஞர்.
நீதிக்கட்சியின் தந்தை தியாகராயர் அவர்கள். அவரை நினைவுகூறும் வகையில் இக்காட்சி இடம்பெற்றது
தணிக்கை குழுவினரிடம் சிக்காத வண்ணம் இக்காட்சியை அமைக்க வைத்தார் கலைஞர்.
நீதிக்கட்சியின் தந்தை,
திராவிட சித்தாந்தத்தின் துவக்க புள்ளி,
பார்ப்பனீயத்துக்கு எதிரான தீப்பொறி,
மதிய உணவு திட்டத்தின் முன்னோடி,
தென்னிந்திய வர்த்தக சங்க நிறுவனர்,
வெள்ளுடை வேந்தர்,
சர்.பிட்டி தியாகராயர்! வாழ்க அவர் புகழ்.
#பிட்டி_தியாகராயர்

#தாரவாட்_மாதவன்_நாயர்
சிறப்பு பெயர்: #திராவிட_லெனின்
தோற்றம் : 15/01/1968
ஊர்: பாலக்காடு அருகில் திரூர் கிராமத்தில் (தற்போதைய கேரளம்)
பெற்றோர்: சி.சங்கரன் நாயர், கமினி
மறைவு: 17/07/1919
நடேசனார், தியாகராயர் போராடினார்கள் என்றால் டி.எம்.நாயர் நேரடியாக களத்தில் சண்டை செய்தார்.

* சென்னை மாநிலக் கல்லூரியில் FA (Fellow of Arts) பட்டம் பெற்றார்
* ஸ்காட்லாந்து எடின்பரோ பல்கலைகழகத்தில் மருத்துவத்தில் M.B.C.M என்ற பட்டம் பெற்றார் (1894)
* எடின்பரோ பல்கலைகழகத்தில் M.D. பட்டம் பெற்றார் (1896)
* காது-மூக்கு-தொண்டை மருத்துவ மேல்படிப்பை பாரிசில் முடித்தார்.

* Chennai Medical Council துனைத் தலைவராக பதவி வகித்தார்
* மிகப்பெரிய மருத்துவ நூலகம் வைத்திருந்தார் "Medical Library"
* "Diabites; Nature and Treatment" என்ற நூலை எழுதியுள்ளார்
* "Antiseptic" என்ற பத்திரிக்கையை நடத்தினார்
* "Madras Standard" என்ற பத்திரிக்கை ஆசிரியர்

* பொது வாழ்வில் தீவிர ஈடுபாடு கொண்டு காங்கிரசில் சேர்ந்து பணியாற்றினார்.
* மாநகராட்சி உறுப்பினராக (1904 - 1916) வரை பணியாற்றினார்.
* Madras Medical Registration Act எனும் சட்டத்தைக் கொண்டு வந்து மருத்துவத் தொழில் செய்வதை ஒழுங்குபடுத்த வகை செய்தார்.
#டிஎம்_நாயர்
* மாநகராட்சி உறுப்பினராக (1904 - 1916) வரை பணியாற்றினார்.
* Madras Medical Registration Act எனும் சட்டத்தைக் கொண்டு வந்து மருத்துவத் தொழில் செய்வதை ஒழுங்குபடுத்த வகை செய்தார்.
#டிஎம்_நாயர்
1908இல் திருவல்லிக்கேணி கோவில் குளத்திற்கு வரியில்லாமல் தண்ணீர் விட வேண்டுமென்ற தீர்மானத்தை எதிர்த்த நாயர் அப்படி செய்தால் வருமான இழப்பும், தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றார். சிலர் இதற்காக அவரை கடுமையாக விமர்சித்தனர். நேர்மையானவர்களுக்கு இடம் இடமில்லை எனக் கூறி பதவி விலகினார்.
சிலகாலம் பொதுப்பணியில் விலகியிருந்த நாயர், 1914இல் முதல் உலகப் போரின்போது, எஸ்.எஸ். சென்னை என்ற மருத்துவ உதவிக் கப்பலில் சிறிது காலம் மருத்துவராகப் பணிபுரிந்தார். இப்போர்க்களப் பணியைப் பாராட்டி நாயருக்கு ‘கெய்சர்-1-இந்து தங்கப் பதக்கம்’ (Kaiser-1-Hind. Gold Medal) வழங்கப்பட்டது.
#லேபர்_கமிஷன்
1906இல் அரசு நியமித்த "லேபர் கமிசனில்" நாயரும் இடம் பெற்றார். முதலாளிகளின் கையாட்களும், வெள்ளையர்களும் நிரம்பிய அந்தக் கமிஷன், 1908இல் அறிக்கையை அரசுக்குத் தந்தது. கமிஷனின் அறிக்கையை ஒத்துக்கொள்ளாத டி.எம்.நாயர், தனது கருத்துக்களை எழுதி அரசுக்கு தனியாக அனுப்பினார்

1916 - டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டார். வெற்றி பெறக்கூடிய சூழல் இருந்தும் திட்டமிட்ட சூழ்ச்சியால் டி.எம். நாயரை எதிர்த்து போட்டியிட்ட சீனிவாச சாஸ்த்திரி என்ற பிராமணர் வெற்றி பெற்றார். இதனால் வெறுப்புற்று காங்கிரசிலிருந்து விலகினார்.
மயிலாப்பூர் கோவில் குடமுழுக்கிற்கு சென்றபோது பிராமணர்களால் அவமதிக்கப்பட்ட வருத்தத்தில் இருந்த தியாகராயரையையும், காங்கிரசிலிருந்து வெளியேறி இருந்த நாயரையும் சந்தித்தார் நடேசனார். மூவரும் இணைந்து "திராவிடர் கழகத்தை" அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.
20/11/1916 - சென்னை வேப்பேரியில் வழக்கறிஞர் டி.எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் ஒன்றுகூடி பிராமணர் அல்லாதாரின் பிரச்சனைகள் குறித்த விவாதித்தனர். பிராமணர் அல்லாத மக்களின் நலன்களை வலியுறுத்த, விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிக்கை துவங்க முடிவெடுத்தனர்.
நீதிக் கட்சியை தோற்றுவிக்கக் காரணமாக இருந்தவர் சி.நடேசனார் என்றாலும், நீதிக் கட்சியை வழிநடத்தியவர் டி.எம். நாயர் அவர்களே. 25/12/1917 அன்று நடைபெற்ற தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின் முதல் மாநாட்டில் டி.எம்.நாயர் பற்றி பிட்டி. தியாகராயர் தனது தலைமை உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்
சங்கத்திற்கு சட்ட திட்டங்கள் வகுத்துக் கொடுக்கும் பொறுப்பு டி.எம். நாயர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
20/12/1916 - பிராமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto) வெளியானது. அதில் கையெழுத்துப் போட்டவர் சங்க செயலாளர் பிட்டி. தியாகராயர். விரிவான, விளக்கமான அறிக்கை அது.
20/12/1916 - பிராமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto) வெளியானது. அதில் கையெழுத்துப் போட்டவர் சங்க செயலாளர் பிட்டி. தியாகராயர். விரிவான, விளக்கமான அறிக்கை அது.
சென்னை டவுன் ஹாலில் நடந்த கூட்டத்தில் நாயர் பேசிக் கொண்டிருக்கும் போது "நீங்கள் ஏன் காங்கிரஸை விடுத்து வகுப்புவாதக் கட்சியில் சேர்ந்தீர்கள்? வகுப்பு வாதத்தால் நாடு சுயராஜ்ஜியம் பெறுமா? அப்படி எங்கேனும் நிகழ்ந்த சரித்திர சான்று உண்டா?" என்று கேட்டார் திரு.வி.க
டி.எம் நாயர் பதில்
டி.எம் நாயர் பதில்
டி.எம். நாயரின் பேச்சும், எழுத்தும் நீதிக் கட்சியை எல்லா இடத்திற்கும் கொண்டு சேர்த்தது. காங்கிரஸ் தலைவர்களின் கவலை அதிகரித்தது. நீதிக் கட்சியை அழிக்க காங்கிரஸில் இருந்த பார்ப்பனர் அல்லாதத் தலைவர்களைக் கொண்டு போட்டி இயக்கம் ஆரம்பித்து...
26.2.1917இல் தொடங்கப்பட்ட ஆங்கில ஏடான ‘ஜஸ்டிஸ்’க்கு டி.எம் நாயரே ஆசிரியராக இருந்தார். இந்த ஏட்டிற்கான பெயரை நாயர் பிரெஞ்சு நாட்டு ஜியார் ஜியஸ் கிளமென்சோ (Georges Clemenceau 1841- 1929) 1880 முதல் நடத்திய ‘லா ஜஸ்டிஸ்’ (La Justice) என்ற ஏட்டின் பெயரைத் தழுவி அமைத்திருந்தார்.
சென்னை எழும்பூர் ஏரிக்கரை மைதானத்தில் 07/10/1917 அன்று நாயரை அழைத்து வந்து பெருவாரியான மக்கள் திரண்ட மாநாடு ஒன்றை சென்னை நகர ஆதிதிராவிடர் அமைப்புகள் நடத்தின. வரலாற்று சிறப்புமிக்க இக்கூட்டம் ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம் (The Spur Tank Meeting) என்று அழைக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் ஸ்பர்டாங் சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்குத் திரு. ரெட்டைமலை சீனிவாசன் தலைமை தாங்கினார்.
“ஆதிதிராவிட தோழர்களே, தோழியர்களே” எனத் தொடங்கிய டி.எம். நாயர் அவர்களின் உரை, வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சு எனப் பலராலும் பாராட்டப்பட்டது. அதிலிருந்து சில பகுதிகள்:
“ஆதிதிராவிட தோழர்களே, தோழியர்களே” எனத் தொடங்கிய டி.எம். நாயர் அவர்களின் உரை, வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சு எனப் பலராலும் பாராட்டப்பட்டது. அதிலிருந்து சில பகுதிகள்:
டாக்டர் அன்னிபெசன்ட் பற்றியும், அவரின் நோக்கம் பற்றியும், அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை பற்றியும் "Madam Besant"
என்ற நூலை எழுதி Higgin Bothams நிறுவனத்தால் வெளியிடச் செய்தார். இதனால் கோபமுற்ற பெசன்ட் தாக்கல் செய்த வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
என்ற நூலை எழுதி Higgin Bothams நிறுவனத்தால் வெளியிடச் செய்தார். இதனால் கோபமுற்ற பெசன்ட் தாக்கல் செய்த வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
10/11/1917 - மாண்டேகு-செம்ஸ்போர்டு சென்னை வந்து புதிய ஆட்சி அமைப்பது பற்றி பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்தனர். நீதிகட்சி தலைவர்கள் Non Brahmin Reservation பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் பெரிதாக அக்கறை காட்டவில்லை. இதன் பின்னணியில் சி.பி.ராமசாமி அய்யரும், பெசன்ட் இருந்தார்கள்.
டி.எம் நாயர் இதுப்பற்றி வலியுறுத்த இங்கிலாந்து சென்றார். ஆனால் அவர் எந்த கூட்டத்திலும் லண்டனில் பேசக்கூடாது என்று அன்னிபெசன்ட், திலகர் போன்றோர் தந்த நெருக்கடிகளை முறியடித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.
டி.எம் நாயருக்கு கொடுத்த நெருக்கடிகள்
டி.எம் நாயருக்கு கொடுத்த நெருக்கடிகள்
1918 - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தன்னந்தனியாக பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்று விரிவாக விளக்கினார்
18/07/1919 அன்று மீண்டும் லண்டன் நாடாளுமன்ற குழுவில் உரையாற்றச் சென்றார். ஆனால் அதற்கு முதல்நாள் டாக்டர் நாயர் மறைந்தார் (17-07-1919).
18/07/1919 அன்று மீண்டும் லண்டன் நாடாளுமன்ற குழுவில் உரையாற்றச் சென்றார். ஆனால் அதற்கு முதல்நாள் டாக்டர் நாயர் மறைந்தார் (17-07-1919).
லன்டனில் மறைந்தாலும் டாக்டர் டி.எம் நாயரின் இறுதி மரியாதையில் ஏராளமானோர் பங்கேற்றனர். விபரம் கீழே.
இதை சொல்லக் காரணம் அங்கிருந்த காங்கிரஸார் இங்கிருக்கும் அன்னிபெசன்ட், திலகர், திருவிக பாரதி போன்ற எவரும் டாக்டர் டி.எம். நாயர் மறைவுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை.
இதை சொல்லக் காரணம் அங்கிருந்த காங்கிரஸார் இங்கிருக்கும் அன்னிபெசன்ட், திலகர், திருவிக பாரதி போன்ற எவரும் டாக்டர் டி.எம். நாயர் மறைவுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை.
“டி.எம்.நாயர் இறக்கவில்லை என்று சொல்லுவேன். அவர் கொள்கைகளும், தொண்டுகளும் இன்னும் இந்நாட்டில் வேலை செய்து கொண்டு வருகின்றன. ஆதலால் அவர் இன்னும் உயிருடனிக்கிறார். டாக்டர் டி.எம். நாயர் ஒரு புரட்சி வீரர்; அவரை ஒரு #திராவிட_லெனின் என்று சொல்ல வேண்டும்.” - தந்தை பெரியார்.
டி.எம் நாயர் மறைவு செய்தி கேட்டு திருவல்லிக்கேணி பார்ப்பனர்கள் தேங்காய் உடைத்து கொண்டாடினார்கள்
ஒருமுறை நாயர் சொன்னது, “எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றி கொண்டாலும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றி கொண்டாலும், பார்ப்பனர்கள் தங்களின் பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள்”
ஒருமுறை நாயர் சொன்னது, “எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றி கொண்டாலும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றி கொண்டாலும், பார்ப்பனர்கள் தங்களின் பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள்”
அதற்குப் பின் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்தது நாயர் காட்டிய வழியில் நின்று முன்னுரையில் சொன்ன சாதனைகளை எல்லாம் செய்தது.
"போராட்டத்தைத் தொடங்கி அப்போராட்டக் களத்திலேயே உயிரைத் துறந்தவர்”
திராவிட லெனின் - டி.எம். நாயர்;
வாழ்க அவர் புகழ்!

"போராட்டத்தைத் தொடங்கி அப்போராட்டக் களத்திலேயே உயிரைத் துறந்தவர்”
திராவிட லெனின் - டி.எம். நாயர்;
வாழ்க அவர் புகழ்!

#பனகல்_அரசர்
இயற்பெயர் - ராமராய நிங்கார்
பிறப்பு: 09/07/1866
ஊர்: காளஹஸ்தி
இறப்பு: 16/12/1928
படிப்பு: திருவல்லிக்கேணி உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும், 1899இல் சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.

இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்தில் நிலச்சுவான்தார்கள், ஜமீன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதில் 1912 முதல் 1915 வரை உறுப்பினராக பதவி வகித்தார்.
டாக்டர் நடேசனார் இதே காலகட்டத்தில் தொடங்கிய "திராவிடர் கழகத்தில்" தன்னை இணைத்துக் கொண்டு பணியைத் தொடர்ந்தார் பனகல் அரசர்.
டாக்டர் நடேசனார் இதே காலகட்டத்தில் தொடங்கிய "திராவிடர் கழகத்தில்" தன்னை இணைத்துக் கொண்டு பணியைத் தொடர்ந்தார் பனகல் அரசர்.
இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்துக்கு 1920-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் நீதிகட்சியின் வேட்பாளராக வென்று சட்டமன்ற உறுப்பினரானார்.
முதல்வர் சுப்பராயலு ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.
முதல்வர் சுப்பராயலு ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.
சென்னை மாகாணத்தை (1920 -1926) வரை நீதிக்கட்சி ஆட்சி செய்தது.
1920இல் சுப்புராயலு முதல்வரானார். பிறகு இவர் உடல்நலக் குறைவால் பதவி விலகியதால், அடுத்ததாக #பனகல்_அரசர் ஆட்சிக்கு வந்தார்.
1923ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த இவர் 1926 வரை ஆட்சி செய்தார்.

இந்து #அறநிலையத்துறை சட்டத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்தவர் #பனகல்_அரசர். இந்த சட்டம் கோவில் நிர்வாகம், அர்ச்சனை உட்பட அனைத்தும் எங்களுக்கு சொந்தம் எனக் கூறிய ஒரு பிரிவினரிடமிருந்து மீட்டு, அனைவரும் வழிபடுவது உட்பட பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தது.
பனகல் அரசர் ஆட்சி காலத்தில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. (அரசாணை எண். 108 நாள்: 10-05-1921)
* தலித்துகள், பஞ்சமர் என்ற சொல் நீக்கப்பெற்று #ஆதிதிராவிடர் என அழைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண். 817 நாள் 25-3-1922)
* தாழ்த்தப்பட்ட மாணவர்களை கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க இரண்டு முறை அரசாணை (அரசாணை எண் (அ) 205 நாள்: 11-2-1924; (ஆ) 1825 நாள்: 24-9-1924)
* தாழ்த்தப்பட்ட மாணவர்களை கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க இரண்டு முறை அரசாணை (அரசாணை எண் (அ) 205 நாள்: 11-2-1924; (ஆ) 1825 நாள்: 24-9-1924)
#பனகல்_அரசர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்
கல்லூரிகளில் பார்ப்பனரல்லாத மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைப்பு (அரசாணை எண். 536 நாள் 20-5-1922)
* கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத குழந்தைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் (அரசாணை எண். 849 நாள் 21-6-1923)

#பனகல்_அரசர் ஆட்சியின் சாதனைகள்:
* இடஒதுக்கீடு சட்டத்தின் முதல்கட்டமான வகுப்புவாரி உரிமை சட்டம். இதன்மூலம் அரசுப் பணிகளில் அனைத்து சாதியினரும் பங்கேற்க வாய்ப்பு உருவானது.
* சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற விதி நீக்கப்பட்டது.

* குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெண்களை கோயிலுக்கு பொட்டுக் கட்டிவிட்டு, தேவரடியார் என்று முத்திரை குத்தும் முறைக்கு முடிவுகட்டும் சட்டம் (1.1.1925)
* புதிய பல்கலைக்கழகம் காணச் சட்டம். பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று.

சென்னையில் வசிக்கும் இன்றைய தலைமுறைக்கு பரிட்சயமானது பனகல் பூங்கா. ஆனால் பலருக்கு அந்த பெயர் எதனால் வந்தது, அங்கு சிலையாக இருக்கும் நபர் யார், அவருக்கு எதற்காக சிலை வைத்துள்ளார்கள் என்றும் தெரியாது. பனகல் மாளிகையும், பனகல் பூங்காவும் பனகல் அரசர் நினைவாக வைக்கப்பட்டது.
#பனகல்_அரசர் ஆட்சிகாலம் சமத்துவத்தை நோக்கி அரசியல் நகர்ந்த தொடக்க காலம், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆட்சிகாலம்.
பனகல் அரசர் 16/12/1928 அன்று மறைந்தார்
வாழ்க திராவிட முன்னோர்கள் புகழ்

பனகல் அரசர் 16/12/1928 அன்று மறைந்தார்
வாழ்க திராவிட முன்னோர்கள் புகழ்