#செவ்வேள்
#தமிழ்க்கடவுள்
#முருகன்

"முருகப்பெருமான் ஆரிய ஆகமங்களுக்கு உட்படாத அழகு; தமிழர்களின் முருகன் கருப்பு நிறம்" என்றெல்லாம் சிலர் பிதற்றுகிறார்களே;

உண்மையில், சமஸ்கிருத, தமிழ் இலக்கியங்களில் முருகப்பெருமானின் நிறம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது எது?+ https://twitter.com/SeemanOfficial/status/1226018135557300224
முருகன் "செவ்வேள்" என்று தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படுகிறார்.

செவ்வேள் = செம்மை நிறம் பொருந்தியவர்!

சங்க இலக்கியமான பரிபாடல்,

"மூவிரு கயந்தலை, முந்நான்கு முழவுத்தோள், ஞாயிற்று ஏர் நிறத் தகை.. செவ்வேள்"

என்று பாடுகிறது

அதாவது,உதிக்கின்ற செங்கதிர் நிறம் கொண்ட செவ்வேள்!+
கந்தபுராணம் சொல்வது:
"செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க"

அவனது கையும் சிவந்த நிறம் என்னும் திருப்புகழ்:
"செங்கை வேல் வென்றிவேல்"

அவனது பாதம் சிவப்பு என்னும் திருப்புகழ்:
"கோல ப்ரவாள பாதத்தில்" (அதாவது, முருகனின் சிவந்த பாதத்தில்)+
முருகனின் கையோ வேலோ பாதமோ மட்டுமா சிவப்பு? அவனே சிவப்பு என்னும் கந்தரநுபூதி:

"கையோ?அயிலோ? கழலோ? முழுதும் செய்யோய் மயில் ஏறிய சேவகனே"

(திருமேனி முழுவதும் செம்மை நிறம்!)

அவன் சிவந்த வானத்தின் நிறம் கொண்டவன் என்று சொல்லும் கந்தரநுபூதி:
"செவ்வான் உருவில் திகழ் வேலவன்"+
சமஸ்கிருதத்தில் என்ன உள்ளது?

ஸூப்ரமண்ய ஸகஸ்ரநாமத்தில்,
"ஓம் பிங்கலாய நம:" என்று ஒரு நாமம்.

பிங்கலாய = சிவந்த நிறம் உடையவனே!

இப்படி, தமிழ் மற்றும் சமஸ்கிருதக் கடவுள் முருகன் சிவப்பு என்பது தெள்ளத்தெளிவு.+
பண்டைத் தமிழ் இலக்கியம் எதிலும் முருகன் கரிய வண்ணத்தவனாகக் குறிக்கப்படவில்லை.

உடனே சிலர், "கருப்பு என்பது உழைப்பு; சிவப்பு என்பது ஆரியத் திணிப்பு" என்று உளறலாம்.+
சிவப்பு நிறம், கருப்பை விட உயர்வானது என்று எங்கும் சொல்லப்படவில்லை.

"பச்சைமா மலை போல் மேனி"
"கார்முகில் வண்ணன்"

என்றெல்லாம் பச்சையும் கருப்பும் கொண்டாடப்படுகின்றன.

முருகன் செவ்வேள் எனில், மன்மதன் கருவேள் என்பர். மன்மதன் பேரழகன் தானே. +
மொத்தத்தில், அறியாமையால் "முருகன் எனது முப்பாட்டன்" என்று ஒரு படத்தைப் போடுபவர்கள் சொல்வதில் ஒரே ஒரு நியாயம் இருக்கும் - அந்தப் படத்தில் உள்ளவர் அவர்களின் முப்பாட்டனாய் இருந்தாலும் இருக்கலாம்.

ஆனால் அது முருகன் இல்லை.

ஓம் சரவணபவ🙏🙏
You can follow @_VSriram.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: