ஆதவா! நீ வா வா!
வணக்கத்திற்குரிய சூரிய தேவா!
உனை வணங்கியே எந்நாளையும் நான் தொடங்குகிறேன் .
சுணக்கமற்று சுறுசுறுப்பாய்த்தான் திகழச்செய்கிறாயடா!
நெருங்கமுடியாத நிஜமாய் மிளிரும் நீ ஒரு எட்டாக்கனி!
ஒவ்வொரு விடியலுக்காகவும் எனை ஏங்கவைக்கும் காதல்கனி!
ஆர்பரிக்கும் என் உள்ளத்தே அடிபுகுந்த நீ எனக்கோர் திகட்டாத்தேன்கனி!
மனம் மயக்கிய பேரழகா!
மஞ்சள் நிறத்தழகா!
பார்போற்றும் பேரழகா!
பாஸ்கரா! இன்று...
தாமதம் ஏனடா!
ஆதவா! வா வா! நீ விரைந்தோடி இன்று வா!
நினைக்காணத்தான் துடிக்கும் அந்த ஊர்க்குருவியும் காகமும் நானும்உனக்கிங்கு ஒரு பொருட்டில்லையோ? பறந்து வந்து உனைக்கான பருந்தல்லவே யாம் மூவருமே தான். கருணையுள்ளம் தான் உனக்கில்லயோ? காணத்தவிக்கிறோமடா!மனங்குளிரக்காட்சியளிக்க மாட்டாயா?
ஆகா! வந்துவிட்டாயடா! எம்மூவரின் மனக்குரல் தான்கேட்டாயோ? வெள்ளிதான் முளைத்து வெளிவந்ததோ! எம் நெடு நேரத்தவம் தான் பலித்ததே? கண நேரமதில் தங்கமாய் தகதகவென உருமாறிய நினைக்காணக் கண்கோடி தான் வேணுமடா. நீ என்றென்றும் பேரழகனடா! என் மனங்கவர் கள்வனடா!உலக நாயகன்நீயே தானடா!
சுருங்கச்சொல்லின் - நீயோ- இருட் பகைவன் ! காலையில் - இளம் பரிதி! ! உச்சிக்கிழான்! செங்கதிரோன்! நீயோ- அண்டயோனி! ஆகையால் நீ ஓர் எழில் மிகு உலகம் சுற்றும் வாலிபனே்ஆவாய் .
மாலைப் பொழிதில் நின் அழகில் சொக்கி நான் போகயிலே சொக்கநாதன் நினை ஜடாமுடி தரிக்கத்தான் கூவி அழைத்தனனோ? குரல் கேட்ட நீ எனை துறந்து சென்றனயோ? துயர் மிக க் கொண்டேனடா! துங்கீசா! துலாதரா! சகியின் துயர் நீக்க வானவா! மித்திரா! நீ காலை தான் வருவாயா!காணத்தான் காத்துக்கிடப்பேனடா கதிரேசா!
You can follow @prasannasanthi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: