Let me tell the stories almost I was dead.
1) 8ஆவது படிக்கசொல்லோ வீட்டுக்கு பின்னால இருக்க குளத்துல லாரி ட்யூப்ல காத்தடிச்சு மேல உக்காந்து மிதக்கும் போது ட்யூப் நழுவி தண்ணீல முழுகி போராடி கடேசி நிமிஷத்துல அப்பா குளத்துல குதிச்சு காப்பாத்தினார். நீச்சல் தெரியாது அப்போ. 1/n https://twitter.com/adribbleofink/status/1213293516148707328
1) 8ஆவது படிக்கசொல்லோ வீட்டுக்கு பின்னால இருக்க குளத்துல லாரி ட்யூப்ல காத்தடிச்சு மேல உக்காந்து மிதக்கும் போது ட்யூப் நழுவி தண்ணீல முழுகி போராடி கடேசி நிமிஷத்துல அப்பா குளத்துல குதிச்சு காப்பாத்தினார். நீச்சல் தெரியாது அப்போ. 1/n https://twitter.com/adribbleofink/status/1213293516148707328
2) 10ஆவது படிக்கையில ஏரியா நண்பர்களோட கொடைக்கானல் போனப்போ குணா குகைகிட்ட மெயின்ரோடுலேந்து இறக்கம் இறங்கி நடக்கனும்.அந்த இறக்கத்துல ஒரு நண்பனோட பைத்தியக்காரத்தனமா ஓடி,பேலன்ஸ் கிடைக்காம பள்ளத்தாக்குல விழுகப்போறப்போ இருந்த கடேசி மரத்தை பிடிச்சுக்கிட்டதால 2பேரும் உயிர் தப்பினோம் 2/
3) டிப்ளமோ படிக்கையில திருச்சில குடமுருட்டி சுடுகாடு பக்கத்துல நண்பர்கள் முதல் தடவையா பீர் டேஸ்ட் பண்ணப்போனாங்க. நான் கூடவே வேடிக்கை பார்க்க. அடிச்சுட்டு திரும்ப வர்றப்ப வண்டில ட்ரிபிள்ஸ். போலீஸ் புடிப்பானேன்னு மெயின்ரோடுல வண்டில கடேசியா உக்காந்திருந்த நான் அப்புடியே பின்னாடி 3/
ஜம்ப் பணிணனேன் மெயின் ரொடுல. பின்னாடி க்ரீச்சுன்னு ஒரு சத்தம். கரூர்லேந்து திருச்சி வந்திட்டு இருந்த மொபஸல் பஸ் சரியா எனக்கு 2 அடி பின்னாடி ப்ரேக் அடிச்சு நிப்பாட்டினார் டிரைவர். பஸ்ஸே நல்ல நல்ல வார்த்தைல கழுவி ஊத்திச்சு. 4/
4) அமேரிக்கால இருக்கப்போ க்ளீவ்லாண்ட்ல மனைவியை கூப்பிட அவங்க ஆபீசுக்கு கார்ல போகையில ஸ்நோல கார் டயர் வழுக்கி நாலைஞ்சு பல்டி அடிச்சு கவிழ்நது மிதமான சேதத்தோட தப்பிச்சேன். விழுந்த இடத்திலேந்து சரியா 5 அடில ஒரு பெரிய குளம். பனில உறைஞ்சு இருந்தது. உள்ள விழுந்திருந்தா ரொம்ப ஆபத்து 5/
5) இந்தியா திரும்பி வந்து போரூர் dlf அலுவலகம். அடையார்லேந்து பைக்ல கிளம்பி ஆபீஸ் போறப்போ கிண்டி ரயில்வே மேம்பாலத்துல வேகமா போகும்போது ஒரு கார்ல சைட்ல தட்டி மெயில்ரோடுல விழுந்து பிரண்டு எந்திரிச்சா பின்னாடி அவரு லோடுவேன் க்ரீச்சுன்னு ப்ரேக் அடிச்சு நிப்பாட்டி உயிர் தப்பிச்சு 6/
6) சென்னைலேந்து திருச்சிக்கு srm Volvo semi sleeperல போகும் போது சிறுகனூர்கிட்ட பஸ் நின்னுட்டு இருந்த லாரில மோதி வெறும் கால் மட்டும் உடைஞ்சு உயிர் தப்பியது. பஸ்ல பயணித்த 3-4 பேர் ஸ்பாட் அவுட். 7/7
