"நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி" - திராவிட பேரரசன் #கலைஞர் 💥
#Kalaignarthread #Kalaignar #Thread
01/01/2000
வள்ளுவன் தன்னை வானுயர செதுக்கி உலகினுக்கு தந்த #கலைஞர்

அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 48 அடி பீடமும், பொருட்பால், இன்பத்துப்பால் குறிக்கும் வகையில் 95 அடி சிலையும் நிறுவப்பட்டது

உலகில் எங்கும் இல்லாத வகையில் 3,681 கருங்கற்கலால் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது
15/09/2010
தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் "அண்ணா நூற்றாண்டு நூலகம்"

3.75 லட்சம் சதுரஅடி பரப்பில், 8 தளங்களை கொண்டது

யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது

பார்வையற்றோர் மெய்ப்புல அறை கூவலர் பிரிவில் 500+ பிரைய்லி புத்தகங்கள் உள்ளது
"சென்னை #அண்ணா_மேம்பாலம்"
ஜூலை 1, 1973

தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம், அன்றைய இந்தியாவின் முதல் மிக நீண்ட மேம்பாலம் இதுவே.

#Kalaignarthread #Annaflyover
நவம்பர் 13, 1973
திருநெல்வேலி "திருவள்ளுவர் #இரட்டை_மேம்பாலம்"

*ஆசியாவிலேயே ரயில்வே துறை இருப்புப்பாதைக்கு மேல் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம்

*இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் (700 மீட்டர் நீளம்)

*குறள் போன்று இரண்டு அடுக்கு உள்ளதால் திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது
ஏப்ரல் 17, 1973
" #பூம்புகார் சுற்றுலா நகரம்" சிலப்பதிகார கலைக் கூடம்.

இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் "பூம்புகார் #கடலடி அருங்காட்சியகம்"

பழந்தமிழர் துறைமுகமான காவேரி பூம்பட்டிணத்தின் 7 தெருக்களை நினைவுகூறும் வகையில் 7 அடுக்கு கோபுரம் அமைக்கபட்டுள்ளது.
"தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்"

இந்தியாவில் முதல் சட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர்
(நவம்பர் 14, 1996)

இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே
ஆசியாவின் மிகப்பெரிய தேர் #திருவாரூர்_ஆழித்தேர் (96அடி உயரம், 360டன் எடை)
"ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி 
தவிக்கையிலே உனக்கு தேரோட்டம் 
தேவையா தியாகேசா" என்ற அதே கலைஞர்தான்,1948லிருந்து ஓடாமல் நின்ற தேரை பழுது பார்த்து டிஸ்க் பிரேக் போன்ற வசதிகள் செய்து 1970ல் மீண்டும் ஓடச்செய்தார்
இந்தியாவின் மிகப்பெரிய #கடல்நீரை #குடிநீராக்கும் #திட்டம் சென்னை மீஞ்சூரில் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது (ஜூலை 30, 2010)

இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சென்னை நகர மக்களுக்கு விநியோகிக்கலாம். இதன்மூலம் 20 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.
குளித்தலை - முசிறி "தந்தை பெரியார் காவேரி பாலம்" கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.(ஆகஸ்ட் 28, 1971)

ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தமிழகத்தின் மிக நீண்ட பாலம் (1450 மீட்டர் நீளம்) #Kalaignarthread
தெற்காசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் "சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்" (1999)

37 ஏக்கர் பரப்பளவில் சென்னை கோயம்பேட்டில் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. #Kalaignarthread
" #கத்திப்பாரா #மேம்பாலம்" - ஆசிய துனை கண்டத்தில் க்ளோவர் இலை அமைப்பில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய மேம்பாலம் இதுதான் (அக்டோபர் 26 , 2008)

The Largest Clover Leaf Flyover Bridge in Asia
(செப்டம்பர் 20, 1989)
ஆசியாவின் முதல் " #கால்நடை #மருத்துவ #பல்கலைக்கழகம்" உருவாக்கியவர் கலைஞர்.

First Veterinary and Animal Sciences University in Asia (1989)
Kamaraj Domestic Terminal, Chennai

(1990) கலைஞர் முயற்சியால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு கர்மவீரர் #காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.
"காமராஜர் உள்நாட்டு முனையம்"
ஆரம்ப காலத்தில் போக்குவரத்து TVS, ABT, ஜெய விலாஸ் போன்ற சில முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கியது.

கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவில் முதன்முதலாக பேருந்துகளை அரசுடமையாக்கினார். தமிழகத்தின் கிராம பகுதிகளுக்கும் பேருந்தை இயக்கினார். #Kalaignarthread #Transport
கலைஞரின் சத்தான திட்டங்களில் ஒன்று அரசு பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம்.

1989ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் இந்த திட்டத்தை செயல்படுத்தினார். முட்டை உண்ணாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கவும் உத்தரவிட்டார்.
#Kalaignarthread
"தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (1971)"

உழவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் கலைஞர். #Kalaignarthread
நவம்பர் 14, 2008
சென்னையில் " #இந்திய #கடல்சார் #பல்கலைக்கழகம்" கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.
ஏப்ரல் 11, 1974 அன்று கன்னியாகுமரியில் "பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தை" உருவாக்கியவர் #கலைஞர்.
#தமிழ்நாடு #ஆசிரியர் #கல்வியியல் #பல்கலைக்கழகம் (ஜூலை 1, 2008)

இந்தியாவில் முதன் முதலாக ஆசிரியர் பயிற்சியை மேம்படுத்தும் நோக்கில் , கல்வியலுக்காக தனி பல்கலைக் கழகத்தை உருவாக்கினார் #கலைஞர்

கல்வியியல் இளநிலை(B.Ed) மற்றும் முதுநிலை(M.Ed) படிப்புக்கள் பயிற்றுவிக்கப்படுகிறது
இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகம் முழுவதும் பரவலாக 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கியவர் #கலைஞர்.

இந்தியாவிலேயே பிரசவ மரணம் அரிதாக நடக்கும் மாநிலம் தமிழகம். இதற்கு அன்றே கலைஞர் ஏற்படுத்திய இலவச பிரசவம், பிரசவகால நிதி போன்ற திட்டங்களே காரணம்.
கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கலைஞர் உருவாக்கிய திட்டம்தான் " #அனைத்து #கிராம #அண்ணா #மறுமலர்ச்சி #திட்டம்"

500+ மக்கள் தொகை உள்ள கிராமங்களில் இன்றிருக்கும் இணைப்பு சாலை, கான்கிரீட் தெருக்கள், மின்விளக்கு, குடிநீர், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு வித்திட்டவர் கலைஞர்
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் "ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம்" கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
அடிக்கல்: 30/01/2007
துவக்கம்: 11/06/2009
இதன்மூலம் 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 18 ஊராட்சிகளில் உள்ள 20லட்சம் மக்கள் பயனடைவார்கள்
#ஒகேனக்கல் #கூட்டு #குடிநீர் #திட்டம்" (26/06/2008)
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண கலைஞர் ஆட்சியில் இத்திட்டம் துவங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்கள் பயன்பெறுகிறார்கள்.
1969ல் இந்தியாவிலேயே முதன்முதலாக " #போலீஸ்_கமிஷன்" அமைத்தவர் கலைஞர்

காவல் துறையின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்

1969 -கோபால்சாமி தலைமையில் முதல் ஆணையம், 1989 -சபாநாயகம் ஐஏஎஸ் தலைமையிலான ஆணையமும் பரிந்துரைத்த கோரிக்கைகள் பெரும்பாலும் ஏற்கப்பட்டது
#வருமுன்_காப்போம்_திட்டம் (1996)
ஏழை, எளியோர்களின் நோயை முன்கூட்டியே கண்டறிந்து மருத்துவ வசதிகளை அளிக்கும் வகையில் இந்த திட்டம் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது (பயனாளிகள் 77லட்சம்)

2001ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் நிறுத்தபட்டு, 2006ல் மீண்டும் நடைமுறைக்கு வந்தது
ரூ.1க்கு #ஒரு_கிலோ_அரிசி

2006ல், ரேஷனில் ரூ. 2க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் கலைஞர். பின் அண்ணா நுாற்றாண்டு விழாவின் தொடக்க நாளான, 15 செப்டம்பர், 2008ல், 1 கிலோ அரிசி, ரூ 1 ரூபாய் என மாற்றினார்.
" #இலவச #கேஸ் #இணைப்பு #வழங்கும் #திட்டம்" (15/01/2007)

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட சமூகத்தில் #பெண்கள் விரைவில் அடுப்படியை விட்டு வெளியே வந்தால்தான் கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னேறுவார்கள் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காக 1972ம் ஆண்டு திமுக ஆட்சியில் " #பிச்சைக்காரர்கள் #மறுவாழ்வு #திட்டம்" ஏற்படுத்தப்பட்டது.

மடியேந்தும் பிச்சைக்கெல்லாம் வாழ்வு கொடுத்தார்!
அவர் மற்றவர் போல் வாழ்வதற்கு வசதி கொடுத்தார்! #KalaignarThread
#கோயம்பேடு_மார்க்கெட்
ஆசியாவின் மிகப்பெரிய மொத்த காய்கறி, பழ மற்றும் பூக்கள் விற்பனை நிலையம்.

295 ஏக்கர் பரப்பளவில்
Phase1 - காய்கறி, பழம் பூக்கள் விற்பனைக்கு 3200 கடைகள்
Phase2 - ஜவுளி, Phase3 - உணவு தாணியம் விற்பனை கடைகள் அமைந்துள்ளது. #KalaignarThread
#தொழுநோய்_மறுவாழ்வு_இல்லம்

இந்தியாவில் முதல்முறையாக சமுதாயத்தில் புறக்கணிக்கபட்ட பிச்சைகாரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கு அரசு சார்பில் மறுவாழ்வு இல்லம் அமைத்து கொடுத்தவர் #கலைஞர்.

அக்டோபர் 2,1971ல் காஞ்சிபுரம் மாவட்டம் பரனூரில் முதல் மறுவாழ்வு முகாம் தொடங்கப்பட்டது.
#கண்ணொளி_சிகிச்சை_திட்டம் (1969)
இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரை, பார்வை குறைபாடு உடைய ஏழை எளிய மக்களுக்கு கண் சிகிச்சை மற்றும் இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம். #KalaignarThread
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான
#கலைஞர்_காப்பீட்டுத்_திட்டம்

ஏழைகளுக்கும் உயர் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்களின் உயிர் காக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜூலை 23, 2009ல் 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' தொடங்கப்பட்டது. #KalaignarThread
" #பள்ளி_சிறார்_கண்ணொளி_திட்டம்"
ஜூலை 21, 2010
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பார்வை குறைபாடுள்ள மாணவ மாணவிகளுக்கு, கண் சிகிச்சை மற்றும் கண்ணாடி வழங்கும் திட்டம்.
#வள்ளுவர்_கோட்டம்
(ஜனவரி 31, 1976)
உலகப்பொதுமறை தந்த வள்ளுவனை போற்றும் வகையில் கலைஞர் அவர்களால் 'வள்ளுவர் கோட்டம்' உருவாக்கப்பட்டது

இங்குள்ள அரங்கத்தின் தூண்களில் திருக்குறள் விளக்கத்துடன் கிரைனைட் கற்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

1989ல் இங்குதான் கலைஞர் முதல்வராக பதவியேற்றார்.
#சேலம்_உருக்காலை
கலைஞர் முயற்சியால் செப்டம்பர் 16,1970 அன்று சேலம் இரும்பு உருக்காலைக்கு இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார்.

பன்னாட்டு அளவில் 12 பெரிய சில்வர் உற்பத்தியில் சேலம் உருக்காலையும் ஒன்றாகும். மலேசியா இரட்டை கோபுரம், மெல்போர்ன் மைதானம் சேலம் இரும்பால் அமைக்கப்பட்டது.
புத்தம்புதுக் காய்கறிகள்,
என்ன விந்தை!
நித்தம் வழங்கிடும் உழவர் சந்தை!

இடைத்தரகர்கள் கிடையாது,
கடை வாடகை கிடையாது,
விளை பொருட்களை ஏற்றி வர அரசு பேருந்தில் கட்டணம் கிடையாது,

விவசாயிகள் நேரடி பயனடைய கலைஞர் தீட்டிய திட்டம்தான் #உழவர்_சந்தை_திட்டம்
(14/11/1999 அண்ணா நகர், மதுரை)
#மாணவர்_இலவச_பஸ்பாஸ் (1996)
பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்காகப் பயணம் செய்வது சுமையாக இருக்கக்கூடாது என இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் கலைஞர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
#FreeBusPass #KalaignarThread
#மினி_பஸ்_திட்டம் (1997)
அரசுப் பேருந்து சேவை இல்லாத, அரசுப் பேருந்துகளை இயக்க முடியாத தொலை தூர கிராமங்களுக்கு சேவையாற்றும் வகையில் மினி பஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் கலைஞர்.
கிராமப்புற மாணவர்கள், விவசாயிகளுக்கு இந்த திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.
1929-பெண்கள் சொத்துரிமை தீர்மானம் நிறைவேற்றினார் #பெரியார்

1956-தனது பெண்கள் சொத்துரிமை மசோதா தோற்கடிக்கப்பட்டபோது
"எங்கோ ஒரு தலைவன் பிறப்பான், அவன் இச்சட்டத்தை நிறைவேற்றுவான்" என்றார் #அம்பேத்கர்

1989-இந்தியாவில் முதன்முறையாக #பெண்கள்_சொத்துரிமை_சட்டம் நிறைவேற்றினார் #கலைஞர்
#மாநில_திட்டக்குழு (1971)
பொருளாதார முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டக்குழு போன்று மாநிலத்திற்கும் வேண்டுமென்று ஏப்ரல் 1971ல் இந்தியாவிலேயே முதன் முதலில் மாநிலத்திற்கென்று திட்டக்குழுவை அமைத்தவர் #கலைஞர்.
#மாநில_சுயாட்சி #KalaignarThread
"பேதமற்ற இடமே மேலான இடம்" என்றார் #பெரியார்

“தோழமைதான் சமத்துவத்தின் கனி; சமதர்ம மணம்; அதைக்காண வேண்டுமானால் சாதி தொலைய வேண்டும்” என்றார் #அண்ணா

பெரியார் அண்ணா காட்டிய வழியில், சாதியை ஒழித்து சமத்துவம் உருவாக்கிட #கலைஞர் தீட்டிய திட்டம்தான் #பெரியார்_நினைவு_சமத்துவபுரம்
#திருவள்ளுவர்_ஆண்டு (1971)
1971ல் கி.மு ஆண்டு கணக்கீட்டை திருவள்ளுவர் ஆண்டு என மாற்றி தமிழ்நாட்டு அரசிதழில் வெளியிட்டவர் கலைஞர். 1972இல் இது நடைமுறைக்கு வந்தது. #KalaignarThread
இந்தியாவில் முதன்முறையாக கிராம, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவத்தை அறிமுகபடுத்தியவர் #கலைஞர் (2009)
#KalaignarThread #சுகாதாரம்
#இணையத்தில்_தமிழ் (1999)

பிப்ரவரி 1999, முதல்வர் கலைஞரால் உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டு, கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டது.

இணையத்தில் கலைஞர் அனுப்பிய தமிழ் வாழ்த்து செய்தியே முதல் வாழ்த்து செய்தியாகும்.

இந்தியாவிலேயே இணையத்தில் அதிக பக்கங்களை கொண்ட மொழி #தமிழ்
#இசைப்பள்ளிகள்
1996க்கு முன் சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களில் மட்டுமே இசைப் பள்ளிகள் இருந்தன

1996க்கு பின் வந்த கலைஞர் ஆட்சியில் திருநெல்வேலி, விழுப்புரம், தூத்துக்குடி, பெரம்பலூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம் ஆகிய 17 இடங்களில் இசைப்பள்ளிகள் துவங்கப்பட்டது. #KalaignarThread
#குடிசை_மாற்று_வாரியம் (1970)
1970ல் இந்தியாவிலேயே முதன்முதலாக குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் #கலைஞர்.
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் #சிங்காரவேலர் பெயரில் "சிங்காரவேலர் நினைவு மீனவர் இலவச வீட்டு வசதி திட்டம்" #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது. (1970)
#தமிழ்_இணையக்_கல்விக்கழகம்
(Feb 17,2001)
அச்சில் ஏற்றிய தமிழ் இலக்கியத்தை இணையத்தில் ஏற்றி உலகளவில் கொண்டு சேர்த்தார் #கலைஞர்
Visit Tamil Virtual Academy 👇
https://tamilvu.org 
#இஸ்லாமியரும்_கலைஞரும்

* இஸ்லாமிய சமுதாயத்திற்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கினார்.

* உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தார்.

* இஸ்லாமியர்களுக்காக உருது அகாடமி உருவாக்கினார்.

#kalaignarThread #MuslimsWelfare
#சேலம்_சூப்பர்_ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. (20/08/2010)

தனியார் மருத்துவமனைக்கும் மேலான வசதிகளுடன் 600+ படுக்கைகள், Centralized AC, அதிநவீன தீவிர சிகிச்சை உபகரணங்கள், மேலும் தனித்தனி சிகிச்சை பிரிவுகள் கொண்டது இந்த மருத்துவமனை. #KalaignarThread
மார்ச் 29, 2007 - #BMW கார் உற்பத்தி தொழிற்சாலையை துவங்கி வைத்தார் #கலைஞர்
ஹூன்டாய், நோக்கியா, மோட்ரோலா, சாம்சங், பாக்ஸ்கான், டெல் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளும் கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.
#SIDCO(1970)
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் (Small Industries Development Corporation Limited) கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

இதன் நோக்கம், தமிழகம் எங்கும் தொழிற்பேட்டைகள் அமைத்தல், தேவையான மூலப்பொருட்களை வழங்கல், தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துதல்.
#கணினியை இந்திய மாநிலங்கள் அறிந்திடாத காலத்தில் தமிழகத்தில் கணினியை துணைப் பாடநூலாக்கியவர் கலைஞர் (1969)

அன்று கலைஞர்தான் பாடநூல் வாரியத் தலைவர். அப்போது அமெரிக்கா சென்றிருந்தபோது செமி கண்டக்டர்தான் கணினி உலகின் முக்கிய விஷயம் என்பதை உணர்ந்து அதற்கும் தனி புத்தகம் கொண்டு வந்தார்
#தியாகிகள்_ஓய்வூதியம்

* #மொழிப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கினார்

* #சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி தந்தார்

* #இடஒதுக்கீடு கேட்டு போராடியதில் மரணமடைந்த வன்னியர் சமுதாய குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கினார் #கலைஞர்.
#பொய்கை_அணை
02/10/2000 அன்று ஆரல்வாய்மொழியில் #கலைஞர் அவர்களால் பொய்கை அணை திறந்து வைக்கப்பட்டது
இதன் கொள்ளளவு 42.62 அடி, அணையின் நீளம் 1202 மீட்டர். இதில் ஆற்று மதகுமூலம் 201.38 ஹெக்டேர் நிலங்களும், கால்வாய் மதகுமூலம் 182.22 ஹெக்டேர் நிலங்களும் பாசன வசதி பெறும் #KalaignarThread
#உப்பாறு_அணை (1968)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உப்பாறு அணை அமைந்துள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு கசிவு நீரை சேமித்து வைப்பதற்காக 1968ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டது

அணையின் உயரம் 30 அடி, நீளம் 2,300மீ, நீர்பிடிப்பு பகுதி 350 ச.மைல்கல் ஆகும்
#சேலம்_மாவட்ட_ஆட்சியர்_அலுவலகம்
(16/09/2007)
சேலம் மக்கள் சிரமமின்றி பயன்பெறும் வகையில் 64 துறைகளை ஒருசேர உள்ளடக்கிய நான்கு அடுக்கு மாடி கட்டிடம், "சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்" கலைஞர் ஆட்சியில் கட்டபட்டது. #KalaignarThread
தமிழகத்தில் காவிரி ஓடும் பாதையில் இதுவரை சிறியது பெரியதாக மொத்தம் 14 அணைகள் உள்ளது.

அதில் #மேட்டூர் அணை ஆங்கிலேயர்கள் கட்டியது. #கல்லனை கரிகாலன் கட்டியது. மீதமுள்ள 12 தடுப்பணைகளை கட்டியவர் #கலைஞர்.
#KalaignarThread
கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டியிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள #கருப்பாநதி_அணை கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது (1971)

கொள்ளளவு 72 அடி. இந்த அணையின் கீழ்வரும் 6 கால்வாய்கள் மூலம் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் கொண்டு செல்லப்பட்டு 70க்கும் மேற்பட்ட குளங்கள் நிரப்பப்படுகிறது.
#அர்ச்சகர்கள்_நலத்திட்டம்
தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கோயில் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு கோயில்களுக்கு சென்றுவர இலவச சைக்கிள்களை 18/10/2010 அன்று கலைஞர் வழங்கினார்.
இந்தியாவில் முதன்முதலாக "சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்" கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தனது தொகுதிக்கு தேவையான முக்கியப் பணிகளை செயல்படுத்த, தொகுதி மக்களின் கோரிக்கையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொள்ள இத்திட்டம்.
#ELCOT - Electronics Corporation of Tamil Nadu
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து மாநில மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்க தமிழ்நாடு மின்னணு நிறுவனம் கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது. தமிழக IT துறையின் விரிவாக்கம், மாநில மின் பரவலாக்கத்தின் மூலம் இதுவே
#SIPCOT - State Industries Promotion Corporation of Tamil Nadu (1971)

பெருந்தொழில்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கென கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் #SIPCOT உருவாக்கப்பட்டது. #KalaignarThread
#விவசாயிகள்_இலவச_மின்சாரம் (1989)
இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் #கலைஞர்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (1969), தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (1969),
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (1989),
சிறுபான்மையினர் நலத்துறை (2007), என ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனித்தனி துறைகளை உருவாக்கியவர் #கலைஞர்
தமிழ்ல படிச்சா வேலை கிடைக்குமா?

கிடைக்கும் 😊

தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றியவர் #கலைஞர்.
1969ல் தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பேசிய கலைஞர், 'விவசாயிகள் பொருளாதாரத்தில் 44% பங்களிக்கின்றனர்; ஆனால் அவர்கள் வங்கிகளில் பெறும் கடன் 2% மட்டுமே. எனவே வங்கிகளை அரசுடைமையாக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்'. இதை ஏற்ற பிரதமர் இந்திராகாந்தி 14 #வங்கிகளை தேசியமயமாக்கினார்.
என் பரம்பரையில் யாரும் பட்டதாரி இல்லையென ஏங்கிய பல குடும்பங்களில், உன் குடும்பத்துல முதல் பட்டதாரியே Engineer என்று, அனைத்து மாநிலத்திலும் நடைமுறையிலிருந்த தகுதி தேர்வை தூக்கி எறிஞ்சுட்டு, #முதல்_பட்டதாரி சலுகையும் கொடுத்து பல குடும்பங்களை கரை சேர்த்த கட்டுமரம்தான் #கலைஞர்
#மாற்றுத்திரனாளிகள்_நலன்

* 01/03/2010 - மாற்றுத்திரனாளிகள் என பெயர் சூட்டினார் #கலைஞர்

* தனி நலவாரியம், தனித்துறை அமைத்தார்

* பேருந்தில் 25% கட்டண சலுகை

* ரயில்களில் மாற்று திரனாளிகளுக்கு தனி பெட்டி

* பள்ளி கல்லூரிகளில் 3% இடஒதுக்கீடு

* தனியார் நிறுவனத்தில் 5% இடஒதுக்கீடு
#திருநங்கைகள்_நலன்

* #திருநங்கை என பெயர் சூட்டியவர் கலைஞர் (2006)

* இந்தியாவிலேயே முதன்முதலாக திருநங்கைகள் நல வாரியம் (15/04/2008)

* நாடாளுமன்றத்தில் திருநங்கை பாதுகாப்பு தனிநபர் மசோதா

* திருநங்கை அடையாள அட்டை, குடும்ப அட்டை, காப்பீட்டு அட்டை, வீடுகள், தையல் இயந்திரம் (2008)
#செம்மொழி_பூங்கா (24/11/2010)
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில் சென்னையின் மத்திய பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் 500க்கும் மேற்பட்ட செழிப்பான தாவரங்களை கொண்டு செம்மொழிப் பூங்காவை உருவாக்கினார் #கலைஞர்
சுதந்திர போராட்டத்தில் தியாகி வ.உ. சிதம்பரனார் சிறையில் மெய்நோக இழுத்த செக்கினைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்து அதை நினைவுச் சின்னமாக்கினார் கலைஞர்.
#அண்ணல்_அம்பேத்கர்_மணிமண்டபம்
சென்னை அடையாரில் அண்ணல் அம்பேத்கருக்கு மணி மண்டபம் அமைத்து ஜுன் 10, 2000 அன்று திறந்து வைத்தார் #கலைஞர்.
#Ambedkar #KalaignarThread
கிராமப்புற வளர்ச்சிக்கென #நமக்கு_நாமே_திட்டம் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. (1998)

நாட்டு மக்களிடையே கூட்டுறவு, தற்சார்பு உணர்வுகளை வளர்த்திட, அரசு மானியத்துடன் தங்களின் தேவைகளே தாங்களே பூர்த்தி செய்து கொள்ள இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முதலாக தகவல் தொழில்நுட்ப கொள்கையை (IT Policy) உருவாக்கியவர் #கலைஞர்.

தகவல் தொழில் நுட்பத்திற்கென்றே ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் தனித் துறை உருவாக்கப்பட்டு 05/10/1998 முதல் தலைமை செயலகத்தில் செயல்படத் துவங்கியது.
#ITPolicy #KalaignarThread
#அரசு_பள்ளியில்_கணினிபாடம் (1998)
இந்தியாவிலேயே முதன்முதலாக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலை பாடமாக்கியவர் #கலைஞர்

IT பார்க் 7வது மாடியில் சொகுசாக அமர்ந்து கொண்டு திமுகவை வசைபாடும் சீமான்களுக்கு இது தெரியுமா? 90களிலேயே அரசு பள்ளிகளில் VB, Java, DB படித்து எப்படி வளர்ந்தோமென்று!
1969 முதல் 1976 வரையிலான ஆட்சி காலத்தில் 15 ஏக்கர் நில உச்ச வரம்பு சட்டம் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர் உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு 1,37,236 ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுத்தார் #கலைஞர்
#Kalaignarthread #Agriculture #Farmers
#விவசாயிகள்_நலன்
13/05/2006- பதவியேற்ற மேடையிலேயே 7000 கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்தார் #கலைஞர்

2006- 50% பயிர் காப்பீட்டுத் தொகை அரசே மானியமாக கொடுத்தது. 1 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்

2006-10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 891கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது
இந்தியாவில் தேசியக் கொடியேற்றிய முதல் முதல்வர் #கலைஞர் (15/08/1974)

சுதந்திர தினத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தார்.
#Kalaignarthread #மாநிலசுயாட்சி
சென்னையில் 12 அடுக்கு மாடிகள் கொண்ட "டைடல் பார்க்" #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது (04/07/2000)

மின்சாரத்தை சிக்கனபடுத்துவதற்காக இந்தியாவில் முதன்முதலாக "Thermal Energy Storage System" அறிமுகம் செய்யப்பட்டது. அன்று இந்த 'மின் தொகுப்பு'முறை உலகில் மூன்றாவது பெரியது #TidelPark
சென்னை மறைமலை நகரில் #Ford கார் உற்பத்தி தொழிற்சாலை கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது (March 19, 1999)

இந்த தொழிற்சாலை மூலம் 10,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.
#Kalaignarthread #Industries #Ford
காஞ்சிபுரம் ஒரகடத்தில் "ரினால்ட் நிசான்" கார் உற்பத்தி தொழிற்சாலை
#கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது (மார்ச் 19, 2009)
#Renault_Nissan #KalaignarThread
"இந்தியாவிலேயே முதன்முதலாக பிறவியிலிருந்தே பேசவும் கேட்கவும் இயலாத குழந்தைகளுக்கு ‘TN CM’s Comprehensive Cochlear Implant Scheme’ என்ற திட்டத்தை துவக்கியவர் #கலைஞர். இதற்காக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மன்றத்தில் அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்” - டாக்டர் மோகன் காமேஸ்வரன்
உயர் நீதிமன்றத்தின் முதல் தலித் நீதிபதி - அ.வரதராசன் கலைஞர் ஆட்சியில் பணி நியமனம் செய்யப்பட்டார். (15/02/1972)
#KalaignarThread #Highcourt
சிறுசேரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப பூங்கா #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது (2010)

M.K Stalin Inaugurate the Global Development Centre (IT Special Economic Zone) of Syntel at SIPCOT IT Park in Siruseri
ஐவகை நிலங்களை குறிக்கும் வகையில் ஐந்து பூங்காக்கள் உருவாக்க முடிவு செய்யப்பட்டு "ஏழைகளின் ஊட்டி" சேலம் ஏற்காட்டில் 16 ஏக்கர் பரப்பளவில் "குறிஞ்சி நில மரபணு பூங்கா" #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. (2010)
#KalaignarThread #Yercaud
#பாலாறு_பொருந்தலாறு_அணை திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் ரெங்க மலைக்கும், குட்டிக்கரடுக்கும் இடையே பாலாறு, பொருந்தலாறு ஆகிய இரு ஆறுகளுக்கும் குறுக்கே #கலைஞர் ஆட்சியில் இந்த அணை கட்டப்பட்டது.
#Kalaignarthread #Dams
கோயமுத்தூரில் அமைந்துள்ள "டைடல் பார்க்" #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. (02/08/2010)

02/08/2010: Chief Minister Dr. Kalaignar Inaugurate the #TIDELPark (IT-SEZ) Coimbatore #KalaignarThread
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா ( #ITPark) #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது
(11/02/2010)

Deputy CM M.K Stalin inagurate the IT Park in Navalpattu Tiruchy.
#Kalaignarthread #ITPark
மதுரை மாவட்டம் இலந்தைக்குளத்தில் அமைந்துள்ள "தகவல் தொழில்நுட்ப பூங்கா" #கலைஞர் அவர்களால் வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட்டது. (19/02/2010)

Dr. Kalaignar inaugurated Madurai integrated IT SEZ promoted by the #ELCOT on 19/02/2010.
#KalaignarThread #ITPark
திருநெல்வேலி கங்கைகொண்டானில் அமைந்துள்ள "தகவல் தொழில்நுட்ப பூங்கா" #கலைஞர் அவர்களால் வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட்டது. (19/02/2010)

Dr. Kalaignar inaugurated Thirunelveli integrated IT SEZ promoted by the #ELCOT on 19/02/2010.
#KalaignarThread #ITPark
சென்னையில் பெருங்குடியில் அமைக்கப்பட்டுள்ள "மாநில தரவு மையம்" #கலைஞர் அவர்களால் விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட்டது (19/02/2010)

Dr. Kalaignar inagurated the "State Data Centre" at Perungudi near Chennai on 19/02/2010. #KalaignarThread
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள "தகவல் தொழில்நுட்ப பூங்கா" #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது (2007) #KalaignarThread #ITPark
இந்தியாவில் சட்டமாவதற்கு முன்பாகவே தமிழகத்தில் #கலைஞர் கொண்டு வந்த சட்டங்கள்:

1) தகவல் உரிமை சட்டம் (1997)
2) ராகிங் தடுப்பு சட்டம் (1996)
3) ஈவ் டீசிங் தடுப்பு சட்டம்(1998)
4) அதிக வட்டி வசூல் தடுப்பு சட்டம் (2001) #KalaignarThread
#நரிக்குறவர்கள்_நலவாரியம் (2008)

அன்றைய #விசிக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @WriterRavikumar கோரிக்கையை ஏற்று "நரிக்குறவர்கள் நல வாரியம்" அமைத்தவர் #கலைஞர்

நரிக்குறவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தனிநபர் மசோதா கொண்டு வந்தவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செல்லம்பாளையம் வனப்பகுதியில் #வறட்டுப்பள்ளம்_அணை திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த அணையின் நீர் விவசாயம், மீன் வளர்ப்பு, வன விலங்குகளுக்கு குடிநீராகவும் பயன்பட்டு வருகிறது

மொத்த நீளம் 1.7 கி.மீ, 17மீ உயரத்திற்கு நீரைத் தேக்கி வைக்க முடியும்.
#தையல்_இயந்திரம்_திட்டம் (1975)

1975: ஏழை விதவை பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975ஆம் ஆண்டிலேயே துவக்கி வைத்தார் #கலைஞர்.
#Kalaignarthread #WomensWelfare
#அந்ததியர்_இடஒதுக்கீடு

* அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கியவர் #கலைஞர் (29/05/2009)

* பாளையங்கோட்டையில் நெல்லை கோர்ட்டு எதிரே ஒன்டிவீரனுக்கு மணிமண்டபம், சிலை அமைக்க 63.38 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு, 18-1-2011 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. #SCA
எழுபதுகளில் குதிரை பந்தைய சூதாட்டத்தால் சென்னையில் குடும்பத்தை இழந்தவர்கள் ஏராளம்.

1973 - கலைஞர் ஆட்சியில் குதிரை பந்தயத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகளாக நடந்து வந்த குதிரைப் பந்தயமானது, 14-08-1974 அன்று நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. #KalaignarThread
இந்தியாவில் முதன்முதலாக அரசு பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கியவர் #கலைஞர் (1989)

இன்று லட்சக்கணக்கான பெண்கள் அரசு பணிகளில் பெரும் பதவிகளில் இடம்பெற வித்திட்டவர் கலைஞர்.
#KalaignarThread #WomensWelfare
#பெண்_காவலர்கள் (1973)

கலைஞர் ஆட்சியில்தான் முதன்முதலாக தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். இன்று டிஜிபி போன்ற உயர்பதவிகளில் பெண் காவலர்கள் பணிபுரிய வித்திட்டவர் கலைஞர்.
#KalaignarThread #Womens
#உள்ளாட்சியில்_பெண்கள்
1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு செய்து; கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முதல் மேயர் பதவி வரை ஏறத்தாழ 40,000 மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை பெற்றிட வாய்ப்பை உருவாக்கித் தந்தவர் #கலைஞர்
#பெண்கள்_உயர்கல்வி
ஏழை பெண்களுக்கு கட்டணமின்றி உயர்க்கல்வி அளிக்கும் திட்டம், கலைஞர் ஆட்சியில் நடைமுறைபடுத்தப்பட்டது. (1989)

UG வரை அளிக்கப்பட்ட இந்த இலவச கல்வித்திட்டமானது 2008ஆம் ஆண்டு முதல் PG வரை நீடிக்கப்பட்டது.
#Womens #KalaignarThread
#மகளிர்_சுயஉதவிக்_குழு (1989)
தமிழகத்தின் பெண்கள் சுயமாக தொழில் செய்து வளர்ச்சி காண உதவும் வகையில் "மகளிர் சுய உதவிக் குழு" அறிமுகப்படுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் முதல் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது.
#KalaignarThread #Womens
இந்தியாவிலேயே முதன்முதலாக "பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் குற்றத் தடுப்பு மசோதாவை" அறிமுகம் செய்தார் #கலைஞர் (12/02/1973)

அந்த சட்டத்தை பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த உத்தமர் எம்ஜிஆர் தொடர்ந்து எதிர்த்தார், தான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்தை ரத்தும் செய்தார் #KalaignarThread
#சமச்சீர்கல்வி
State Board, Matric, CBSE என்று பள்ளி பருவத்திலேயே குழந்தைகள் மனதில் உருவாகும் ஏற்றத்தாழ்வை போக்க தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் #கலைஞர் உருவாக்கிய திட்டம்தான் #சமச்சீர்கல்வி
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் (1989)

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரில் ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளவும், வருவாய் இழப்புகளை சரிக்கட்டவும் ₹6000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார் #கலைஞர்
" #கருணை_இல்லம்" கண்ட கருணை உள்ளம் #கலைஞர். (ஜூன் 3, 1973)

ஆதரவற்ற குழந்தைகள் வாழ்ந்திட இடம் அமைத்து உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, அன்றாட தேவைகள் என அனைத்திலும் முன்னுரிமை தந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் கலைஞர் 👇 #KalaignarThread
1952ல் வெளிவந்த #பராசக்தி யில் #கைரிக்க்ஷா இழுப்பவன் வலியை தனது வசனத்தில் வெளிப்படுத்தியிருப்பார் #கலைஞர்

நீ வேனா மெட்ராஸ் மேயரா வந்து சரிபன்னு என்று கேலி பேசும் போலீஸ் பாத்திரம்

20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வரான கலைஞர் மனிதனை மனிதனே இழுக்கும் கைரிக்க்ஷாவை ஒழித்தார் (02/06/1973)
எம்முயிர் தமிழ் காக்க,
தம்முயிர் தனை ஈந்த
மொழிப் போர் தியாகிகளுக்கு
#வீர_வணக்கம் 🙏

சென்னையில் "மொழிப் போர் தியாகிகள் மணிமண்டபம்" #கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டு 25/01/2001 அன்று திறந்து வைக்கப்பட்டது. #KalaignarThread
செப்டம்பர் 17, 1997
சேலத்தில் அமைந்துள்ள " #பெரியார்_பல்கலைக்கழகம்" கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
#KalaignarThread #University
(செப்டம்பர் 7, 1990)
நெல்லையில் தமிழ்த் தாய் வாழ்த்து தந்த " #மனோன்மணியம்_சுந்தரனார்" பெயரில் பல்கலைக்கழகம் அமைத்தவர் #கலைஞர். #KalaignarThread
சென்னை கிண்டியிலுள்ள "தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர். (1989)
#KalaignarThread #University
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் #Apollo_Tyres டயர்கள் உற்பத்தி தொழிற்சாலை #கலைஞர் ஆட்சியில் துனை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. (10/02/2011)
#KalaignarThread
ஶ்ரீபெரும்புதூரில் 75 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவின் இரண்டாவது சாம்சங் நவீன குளிர்சாதன பெட்டி உற்பத்தி தொழிற்சாலை #கலைஞர் ஆட்சியில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. (27/11/2010)
#KalaignarThread #DMK4TN
உலகின் இரண்டாவது பெரிய கட்டுமான கருவிகள் மற்றும் சுரங்க இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான #கோமட்சு_லிமிடெட் உற்பத்தி தொழிற்சாலை கலைஞர் ஆட்சியில் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. (28/03/2007)
#KalaignarThread #Komatsu_Ltd
செங்கல்பட்டில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் #Ford_Figo கார் உற்பத்தி தொழிற்சாலை #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது. (05/02/2010)
#KalaignarThread
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆஷ்லி அல்டீம் நிறுவனம் சார்பில் அமைந்துள்ள நவீன அலுமினிய வார்ப்பட ஆலை கலைஞர் ஆட்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. (20/01/2010)
#KalaignarThread #Asley_Alteams
ஶ்ரீபெரும்புதூரில் #நோக்கியா மொபைல் உற்பத்தி தொழிற்சாலை கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது. (2006)
இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மொபைல்கள் 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலை மூலம் 25,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். #Kalaignarthread
ஒசூரில் 24.85 கோடி ரூபாய் முதலீட்டில் 220 ஏக்கர் பரப்பளவில் மலர் பதப்படுத்தும் "டான் ப்ளோரா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்க்" - மலர் தொழிற் பூங்கா கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 500 பேர் நேரடியாகவும், 1000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர். #KalaignarThread
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பிரெஞ்சு நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 525 கோடி ரூபாய் முதலீட்டில் செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை 27.09.2000 அன்று கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது. #KalaignarThread
Nokia - Siemens நிறுவனத்தின் 3G மொபைல் உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலையை சென்னை ஒரகடத்தில் 10/04/2010 அன்று அன்றைய துணை முதல்வர் மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
#KalaignarThread
#நல்லதங்காள்_அணை (2007)

ஆறு கிராமங்களில் 4744 ஏக்கா் பரப்பில் நீா்ப்பாசனம் மேற்கொள்ள ஏதுவாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் ஓடைக்கு குறுக்கே கலைஞர் ஆட்சியில் இந்த அணை கட்டப்பட்டது.
#KalaignarThread #Dams
#மோர்தானா_அணை (1999)

#வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான #மோர்தானா_அணை கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது. குடியாத்தத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
நீளம் - 392 மீட்டர், உயரம் 23.89 மீட்டர்
#KalaignarThread #Dams
#இராஜதோப்பு_அணை (1991)

வேலூர் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய அணையான ராஜாதோப்பு அணை #கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது. அணையின் உயரம் 24.57 அடி. #KalaignarThread
#செண்பகத்_தோப்பு_அணை (1989)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஜவ்வாது மலையிலிருந்து உருவாகும் கமண்டல நாகநதியின் குறுக்கே செண்பகத் தோப்பு அணை கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது. அணையின் உயரம் 54 அடி, நீளம் 650
#குண்டேரிப்பள்ளம்_அணை (1976)
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கொங்கர்பாளையம் கிராம பகுதியில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணை #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

அணையின் வாயிலாக 3000 ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுக பாசனமாக 2000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
#வள்ளிமதுரை_அணை (2007)
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில்  சித்தேரி மலையின் அடிவார கிராமமான வள்ளிமதுரையில், வரட்டாற்றின் குறுக்கே வள்ளிமதுரை அணை #கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.
இந்த அணையின் பாசனப் பரப்பானது 5108 ஏக்கர்.
#பாலாறு_பொருந்தலாறு_அணை (1976)
திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் ரெங்க மலைக்கும், குட்டிக்கரடுக்கும் இடையே பாலாறு, பொருந்தலாறு ஆகிய இரு ஆறுகளுக்கும் குறுக்கே #கலைஞர் ஆட்சியில் இந்த அணை கட்டப்பட்டது.
கலைஞர் பேர் சொல்லும் திட்டம் "இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி திட்டம்" (15/09/2006)

இந்த திட்டத்துக்கு கலைஞர் சூட்டிய பெயர் "அரசு வண்ணத் தொலைக்காட்சி பெட்டி". மக்கள் சூட்டிய பெயர் "கலைஞர் டிவி"

ஆட்சிகள் மாறலாம்...
சில காட்சிகள் மாறாது!
மக்கள் பயன்பாட்டில் இன்றும் #கலைஞர்_டிவி
#செம்மொழி #தமிழாய்வு #மத்திய #நிறுவனம் (18/08/2007)

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் #கலைஞர் ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டது.

கலைஞர் தனது சொந்த பணத்தில் ரூ.1 கோடி நிதி கொடுத்து அதன் வட்டித் தொகையில் விருது அளிக்கப்படுகிறது (30/06/ 2008)

Central Institute of Classical Tamil
#தஞ்சை_பெரியகோவில் கண்ட சோழனுக்கு கோவில் உள்ளே சிலை நிறுவ அனுமதி மறுத்தது மத்திய அரசு. வேறுவழியின்றி கோவிலுக்கு வெளியே சிலை நிறுவினார் #கலைஞர்

சும்மா வைக்கவில்லை,
"மத்தியஅரசு அனுமதி மறுத்த காரணத்தால் சோழனின் சிலை கோவிலுக்கு வெளியே நிறுவபடுகின்றது" என கல்லில் எழுதி வைத்துவிட்டார்
#தஞ்சை_பெரியகோவில் ஆயிரமாவது ஆண்டை கொண்டாடும் வகையில் அரசு சார்பில் விழா எடுத்து சிறப்பித்தார் #கலைஞர் (25/09/2010)

இந்நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 1000 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.

விழாவில் #ராஜராஜன் நாணயமும், #பெரியகோவில் அஞ்சல் தலையையும் வெளியிட்டார் கலைஞர்.
#சென்னை_மெட்ரோ_ரயில்_திட்டம் (10/06/2009)
ஜப்பான் நாட்டு வங்கியிடம் நிதியுதவி பெற முயற்சிகள் மேற்கொண்டு அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் "சென்னை மெட்ரோ ரயில் திட்டம்" துவங்கப்பட்டது

இதை கிடப்பில் போட்டு மோனோ ரயில் கொண்டு வர ஜெயலலிதா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது
#கட்டபொம்மன்_நினைவு_கோட்டை (18/08/1974)
பாஞ்சாலங்குறிச்சியில் "வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டையை"
உருவாக்கியவர் #கலைஞர்

இந்த கோட்டையில் கட்டபொம்மனின் வீர வரலாறு ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது. பழைய கோட்டையும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்படுகிறது
#KalaignarThread
#பேருந்துகளில்_திருக்குறள் (1970)
போக்குவரத்தை அரசுடைமையாக்கி பட்டித்தொட்டியெல்லாம் அரசு பேருந்தை கொண்டு சேர்த்தார், கூடவே திருக்குறளையும்.

அரசுப் பேருந்துகளில் #திருக்குறள் இடம்பெற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தவர் #கலைஞர்
கிராம கோவில் #பூசாரிகள்_நலவாரியம்
உருவாக்கியவர் #கலைஞர்

#பயன்கள்:

பூசாரியின் மனைவி/மகள் மகப்பேறு உதவி - 6000

பூசாரியின் குழந்தை கல்விக்கு 1000 - 6000 வரை

பூசாரி அல்லது அவர் குழந்தை திருமணத்திற்கு நிதியுதவி

இயற்கை எய்திய பூசாரியின் ஈமச்சடங்கிற்கு 2000 முதல் 15,000 வரை
#பாவேந்தர் #செம்மொழித் #தமிழாய்வு #நூலகம்

சென்னை தலைமைச் செயலகத்தில் "பாவேந்தர் செம்மொழித் 
தமிழாய்வு நூலகம்" நிறுவியவர் #கலைஞர்

செம்மொழி ஆய்வுக்காக பழம்பெரும் தமிழ் நூல்களையும், அரிய ஓலைச் சுவடிகளையும் சேகரித்து நூலகத்தில் பொதுப் பயன்பாட்டுக்கு வைத்தார்.
நாத்திக கலைஞர் கட்டிய ஒரே கோவில் - #தமிழ்த்தாய்_கோவில் (1975)

உலகிலேயே தாய்மொழிக்காக கோவில் எழுப்பிய ஒரே தலைவர் #கலைஞர்

ஏப்ரல் 23, 1975 - காரைக்குடியில் தமிழ்த்தாய் கோவிலுக்கான கால்கோள் விழா நடத்தினார்.

ஏப்ரல் 16, 1993 அன்று கலைஞரால் #தமிழ்த்தாய் கோவில் திறந்து வைக்கப்பட்டது.
#புதிய_தலைமைச்_செயலகம் (13/03/2011)
*இந்தியாவின் மிகப்பெரிய அரசு கட்டிடம். தங்க சான்றிதழ் பெற்ற கட்டிடம்
* உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டிடம்
*பகல் நேரங்களில் இயற்கை சூரிய ஒளி விளக்கில் இயங்கும். அனைத்து மின் உபகரணமும் தேவைக்கேற்ப தானாகவே இயங்கும்
*பூங்கா, நூலகம் உள்ளடக்கியது
#கண்ணகி_சிலை (02/01/1968)

பேரறிஞர் அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின்போது #கலைஞர் தலைமையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களால் #கண்ணகி சிலை திறக்கப்பட்டது.

2001ல் ஜெயலலிதா கண்ணகி சிலையை அகற்றினார். 3/06/2006 அன்று கலைஞர் அவர்களால் மீண்டும் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது.
#காமராஜர்_மணிமண்டபம், கன்னியாகுமரி
(02/10/2000)

குமரிமுனையில் பெருந்தலைவர் #காமராஜர் அஸ்தி இருக்குமிடத்தில் மணி மண்டபம் அமைத்தவர் #கலைஞர்

#KalaignarThread
#சென்னை_காமராஜர்_சாலை (1997)

இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையான சென்னை #மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நீண்ட சாலைக்கு பெருந்தலைவர் #காமராஜர் பெயர் சூட்டியவர் #கலைஞர். #KalaignarThread
காமராஜர் பிறந்தநாள் #கல்வி_வளர்ச்சி_நாள்
(15/07/2008)
"கல்விக் கண் திறந்த கர்ம வீரர்" என்று போற்றப்படும் பெருந்தலைவர் #காமராஜர் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாளாக" அறிவித்து பள்ளிகளில் விழா எடுத்துக் கொண்டாட ஆணை பிறப்பித்தவர் #கலைஞர். #KalaignarThread
#நெசவாளர்_இலவச_மின்சாரம்

கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரமும், சிறு விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கி நலிந்த நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் #கலைஞர்
#தியாக_சீலர்_கக்கன்_மணி_மண்டபம்
(13/02/2001)

தியாக சீலர் கக்கனுக்கு அவர் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் "மணி மண்டபம்" அமைத்து பெருமை சேர்த்தவர் #கலைஞர்

#KalaignarThread #கக்கன்
#தியாக_சீலர்_கக்கன்_சிலை

தமிழகத்தில் தியாக சீலர் கக்கனுக்கு முதல் சிலை நிறுவியவர் #கலைஞர். (31/08/1997)

#KalaignarThread #கக்கன்
#மருதுபாண்டியர்_நினைவு_மண்டபம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடிய #மருதுபாண்டியர்களுக்கு நினைவு மண்டபம் அமைத்தவர் #கலைஞர்

#KalaignarThread #மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்_போக்குவரத்து_கழகம்

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு "மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகம்" எனப் பெயர் சூட்டியவர் #கலைஞர்.

அக்டோபர் 2004ல் மருது பாண்டியர்கள் அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.
#KalaignarThread
#மருதுபாண்டியர்_சிலை
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் 10 அடி உயர பீடத்தில் மருது பாண்டியர்களுக்கு நினைவு சிலை அமைத்தவர் #கலைஞர். (27/10/2007)
#விழுப்புரம்_அரசு_மருத்துவக்_கல்லூரி
(07/03/2010)

#விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள "அரசு மருத்துவக் கல்லூரி" 07/03/2010 அன்று #கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

#KalaignarThread @KPonmudiMLA
#தர்மபுரி_அரசு_மருத்துவக்_கல்லூரி

"தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி" கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டு, அன்றைய துணை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. (19/01/2010)

#KalaignarThread @DMKDharmapuri_
#எம்ஜிஆர்_திரைப்பட_நகர் (1996)

சென்னை திரைப்பட நகருக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டியவர் #கலைஞர்.

#MGR_FILM_CITY
#தமிழ்ச்செம்மொழி (2004)

அன்னைத் தமிழுக்கு மணிமகுடம் சூட்டும் வகையில் இந்திய மொழிகளிலேயே அதிகாரப்பூர்வமாக
முதல் " #செம்மொழி" என்ற அங்கீகாரம் தமிழுக்கு பெற்றுத் தந்தவர் #கலைஞர்

கலைஞரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 12.10.2004 அன்று தமிழைச் செம்மொழி என அறிவித்து ஆணை பிறப்பித்தது
#தமிழ்_பயிற்று_மொழி

1969-70ம் ஆண்டில் இளம் அறிவியல் வகுப்பில் தமிழை பயிற்று மொழியாக்கி ஆணை பிறப்பித்தார் #கலைஞர், தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையும் வழங்கினார்.
#தமிழும்_கலைஞரும்
#மெட்ரிக்_பள்ளிகளில்_தமிழ்
1996ம் ஆண்டு, மெட்ரிக் பள்ளிகளில் தமிழைப் பாடமொழியாக்கி ஆணை பிறப்பித்தவர் #கலைஞர்.

2006ம் ஆண்டு அனைத்துப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகக் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றினார்.
#தமிழில்_பொறியியல்_கல்வி

இந்தியாவிலேயே முதன்முறையாக கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் தமிழ் வழியாகக் கல்வி கற்க வகை செய்து ஆணையிட்டவர் கலைஞர்.
அனைத்து கல்லூரிகளும் choice based credit system எனப்படும் விருப்பம் சார்ந்த தகுதிப் புள்ளி முறையை அறிமுகப்படுத்தியவர் #கலைஞர் (2009)

பட்டப்படிப்பில் தமிழை ஒரு பிரிவு பாடமாக கட்டாயம் படித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் தமிழை படிக்காமல் பட்டம் பெறமுடியாத நிலையை உருவாக்கியவர் கலைஞர்
#அரசுப்_பணியில்_தமிழுக்கு_ஒதுக்கீடு

30/09/2010 அன்று அரசுப் பணிகளுக்கு தேவையான அடிப்படைக் கல்வித் தகுதியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கி ஆணை பிறப்பித்தவர் #கலைஞர்.
#நாமக்கல்_கவிஞர்_மாளிகை

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் பத்து மாடிக் கட்டிடடம் எழுப்பி தேசியக் கவிஞர் நாமக்கல்லார் பெயரைச்சூட்டி, அவர் எழுதிய உணர்ச்சி வரிகளான "தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா" என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்தவர் கலைஞர்.
#தோழர்_ஜீவானந்தம்_மணிமண்டபம்
(18/04/1998)

நாகர்கோயிலில் பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் அவர்களுக்கு மணிமண்டபம் எழுப்பியவர் #கலைஞர்

இங்கு அவரது உருவச்சிலையும், வாழ்க்கையைச் சித்தரிக்கும் நிழற்படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
#ஒசூர்_பேருந்து_நிலையம் (2010)

ஒசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பேரூராட்சித் தலைவருமான கே. அப்பாவு பிள்ளை அவர்களின் பெயரில் "கே.அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம்" என்று பெயர் சூட்டப்பட்டு ஜூலை 18, 2010ல் அன்றைய துணை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
#அனைத்து_சாதியினரும்_அர்ச்சகர்

Dec 1970, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டமியற்றியவர் #கலைஞர். சிலர் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றனர்

2006ல் மீண்டும் சட்டம் இயற்றினார். ஆகம பாடம் கற்பிக்கப்பட்டு 207 பேர் தேர்ச்சி பெற்றனர். மதுரையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
#குப்பநத்தம்_அணை (1989)

#திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் சோலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள குப்பநத்தம் அணை #கலைஞர் ஆட்சியில் கட்டிமுடிக்கப்பட்டது.
#KalaignarThread #Dams
#இருக்கன்குடி_அணை

#விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 24 அடி உயரம் கொண்ட இருக்கன்குடி அணை #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

#KalaignarThread #Dams
#சாஸ்தா_கோவில்_அணை

#ராஜபாளையம் அடுத்த #தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அருகே அமைந்துள்ள சாஸ்தா கோயில் அணை #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
#KalaignarThread #Dams
#தமிழ்_பெண்_போராளிகள்

பெண்ணுரிமைக்காக தனது வாழ்க்கையை செலவிட்டவர் மூவலூர் #இராமாமிர்தம் அம்மையார்

ஏழைப் பெண்கள் #திருமண #உதவித்திட்டம் கொண்டுவந்து அதற்கு "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம்" என பெயர் சூட்டியவர் #கலைஞர் (1989). #thread

#WomensDay #பெண்கள்தினம்
ஆசியாவின் முதல் பெண் மருத்துவர்,
பெண்கள் நலச் சட்டங்களுக்காகப் பெரும் பணியாற்றியவர் #முத்துலட்சுமிரெட்டி

கர்ப்பிணிப் பெண்கள் நலன் காக்கும் திட்டம் உருவாக்கி அதற்கு "டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு #உதவித்திட்டம்" எனப் பெயர் சூட்டியவர் #கலைஞர் (1989) #பெண்கள்தினம்
திராவிட இயக்கத்தை வழிநடத்திய பெண் தலைவர். பெண்ணுரிமை, சமூகநீதிக்காக போராடியவர், மிசா சிறை சென்றவர் #மணியம்மையார். அவரது பெயரில் "ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்" #கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது (1989)

நிதியுதவி : 25000 / 50000 + தங்கம்.
விதவைகளுக்கு புதுவாழ்வளிக்க அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் அவர்கள் மறுமணத்தை ஊக்குவிக்க #கலைஞர் உருவாக்கிய திட்டம்தான் "டாக்டர் #தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்" (1973)

நிதியுதவி: 25000/50000 + தங்கம்

#KalaignarThread #பெண்கள்தினம்
சாதி கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான ஜாதி, இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழிக்க #கலைஞர் உருவாக்கிய திட்டம்தான் "டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு #கலப்புத் #திருமண #நிதியுதவித் #திட்டம்"

நிதியுதவி: 25000/50000 + தங்கம்
#பெண்கள்தினம்
பள்ளிகளில், அரசு விழாக்களில் #தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் துவங்க சட்டம் இயற்றியவர் #கலைஞர்

“நீராரும் கடலுடுத்த" எனத் தொடங்கும் இந்த பாடல் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிமுகமான தினம் இன்று (மார்ச் 11, 1970)
#KalaignarThread
#தமிழ் #மாநிலசுயாட்சி
#ராஜாஜி_நினைவாலயம் (03/05/1975)

'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு' என்ற அண்ணா வழியில் மூதறிஞர் ராஜாஜிக்கு சென்னை கிண்டியில் நினைவு இல்லம் அமைத்தவர் #கலைஞர்

ராஜாஜி #ராமபக்தர் என்பதால் நினைவில்லத்தின் வடிவமைப்பு அதையொட்டி இருக்குமாறு அமைத்து கொடுத்தார் #Kalaignarthread
#தமிழ் வளர்ச்சிக்காக "தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழர் பண்பாட்டுத் துறைக்கு" என்று தனி அமைச்சகத்தை உருவாக்கியவர் #கலைஞர் ( 13/05/1996 ).

#KalaignarThread #தமிழ்_வளர்ச்சி
#பதிவெண்_பலகைகளில்_தமிழ்

வாகனங்களில் உள்ள பதிவெண் பலகைகளில் ஆங்கிலத்திற்கு மாற்றாக தமிழில் எழுதிக் கொள்ளலாம் என ஆணை பிறப்பித்தவர் #கலைஞர்

#KalaignarThread #தமிழ்_வளர்ச்சி
#உயர்கல்வித்துறை (1997)

1997ல் உயர்கல்விக்கென தனித் துறையை உருவாக்கியவர் #கலைஞர்

#கல்வி மறுக்கப்பட்டு காடு கழனியில் சுற்றி திரிந்தவனை கல்வி சாலைக்குள் கொண்டு வந்தவர் #காமராஜர். அப்படி கல்வி பயில வந்தவனை கைப்பிடித்து உயர் கல்விவரை அழைத்து வந்து கற்றறிவாளனாக மாற்றியவர் #கலைஞர்
#பெருந்துறை_சிப்காட்_தொழிற்பேட்டை

ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை "பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை" #கலைஞர் அவர்களால் 01/07/2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. (பரப்பளவு - 2,710 ஏக்கர், மதிப்பீடு - ரூ. 4,000 கோடி)

#Kalaignarthread #தொழில்_வளர்ச்சி
#ரெனால்ட்ஸ்_உற்பத்தி_தொழிற்சாலை

இருகாட்டுக்கோட்டையில் "Rednolds Ballpen Components" உற்பத்தி தொழிற்சாலை 30 கோடி ரூபாய் முதலீட்டில் மார்ச் மாதம் 2000ஆம் ஆண்டு #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.

#KalaignarThread #தொழில்_வளர்ச்சி
#Mitsubisi_Lancer_தொழிற்சாலை

திருவள்ளுரில் 320 கோடி முதலீட்டில் "மிட்சுபிசி லேன்சர்" கார் உற்பத்தி தொழிற்சாலை #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது (1998)

ஆண்டுக்கு 1 லட்சம் கார் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் 800 பேர் நேரடியாகவும், 6400 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர்.
#ஹுண்டாய்_மோட்டார்_தொழிற்சாலை

திருப்பெரும்புதூரில் "ஹுண்டாய் மோட்டர் தொழிற்சாலை" #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.

இதன் 2ம் கட்ட #தொழிற்சாலை 4,000 கோடி முதலீட்டில் 2-2-2008ல் கலைஞர் திறந்து வைத்தார். இதில் 11,000 பேர் #வேலைவாய்ப்பு பெற்றனர்.

#Kalaignarthread #தொழில்_வளர்ச்சி
#மோட்ரோலா_தொழிற்சாலை (2008)

திருபெரும்புதூரில் 172 கோடி முதலீட்டில் " #மோட்ரோலா மொபைல் உற்பத்தி #தொழிற்சாலை" #கலைஞர் அவர்களால் 27/04/2008 அன்று துவங்கி வைக்கப்பட்டது.

ஆண்டுக்கு 1.2 கோடி மொபைல்கள் உற்பத்தி செய்யப்பட்ட இந்த தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றனர்
#நைக்_காலணி_தொழிற்சாலை
(14/09/2006)
செய்யாறு பகுதியில் 'குரோத் லிங்" நிறுவனத்தின் நைக் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை 300 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்க 14/09/2006 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 15000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.
#108_ஆம்புலன்ஸ்_சேவை

108 ஆம்புலன்ஸ் சேவைக்காக ஐதராபாத்தை சேர்ந்த #EMRI தொண்டு நிறுவனத்துடன் மே 2008ல் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது

முதல் கட்டமாக 187 ஆம்புலன்ஸ்கள் 17.87 கோடி செலவில் தமிழக அரசால் வாங்கப்பட்டது

108 ஆம்புலன்ஸ் சேவையை 15/09/2008 அன்று #கலைஞர் துவங்கி வைத்தார்.
#கிராமங்கள்தோறும்_மின்சாரம்

இந்தியாவில் மின்சாரம் இல்லா கிராமங்கள் இன்றும் உள்ளன. ஆனால் 1970ல் கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் மொத்த கிராமங்களான 57,000 கிராமங்களில் 42,000 கிராமங்களில் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டது. 1973ல் 99% நிறைவேற்றப்பட்டது
#Kalaignar_Thread #electricity
#கோவை_அவினாசி_மேம்பாலம் (1970)

1970இல் கலைஞரால் திட்டமிடப்பட்டு திறக்கப்பட்ட கோவை - அவினாசி ரோடு மேம்பாலத்தின் வயது 50.

இன்று வரை நெருக்கடி இல்லாத வகையில் பல வேறு இறங்கு சாலைகள், சப்வேக்கள் கொண்டு தொலைநோக்கு பார்வையில் 50 வருடங்கள் முன்பே கட்டப்பட்டுள்ளது.
#டாக்டர்_அம்பேத்கார்_கலைக்_கல்லூரி (1972)

சென்னை வியாசர்பாடியில் அரசினர் கலைக் கல்லூரி ஒன்றை உருவாக்கி முதன்முதலில் டாக்டர் அம்பேத்கார் பெயர் சூட்டியவர் #கலைஞர்.

கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: 01/08/1972
கோவையின் குடிநீர் ஆதாரம் #சிறுவாணி_குடிநீர்_திட்டம் (1973)

சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டு வர கேரள அரசுடன் அன்றைய முதல்வர் #கலைஞர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக சிறுவாணியில் ஒரு செக் டேம் கட்டப்பட்டு அதன் மூலம் கோவைக்கு சிறுவாணி குடிநீர் கொண்டுவரப்பட்டது.
#தேசிய_சித்தமருத்துவ_நிறுவனம்

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அமையவிருந்த இடத்தை "தேசிய சித்த மருத்துவ நிறுவனம்" அமைக்க இடம் ஒதுக்கித் தந்து தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் #கலைஞர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (23/02/1972)

இந்தியாவிலேயே முதன்முதலாக நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி நெல், அரிசி போன்ற பொருட்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து இருப்புவைத்து, #ரேஷன் கடைகளில் விநியோகித்து மக்களுக்கு தடையின்றி உணவு பொருட்கள் கிடைக்கச் செய்தவர் #கலைஞர்
மே 1 - #உழைப்பாளர்தினம்

1969இல் இந்தியாவிலேயே முதன் முதலாக உழைப்பாளர் தினத்தை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தவர் #கலைஞர்.

1990இல் அன்றைய பிரதமர் "வி.பி.சிங்"கிடம் இதை கோரிக்கையாக வைத்து இந்தியா முழுவதும் நிறைவேற்ற வைத்தார்.
#உழைப்பாளர்தினம் #MayDay2020
#மே_தின_நினைவுத்_தூண்
உழைப்பாளர்களை போற்றும் வகையில் மே தின நினைவுத்தூண் கட்டப்பட்டு 01/05/1990 அன்று கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

நினைவுத் தூண் சுற்றி உள்ள பகுதியை மறுசீரமைத்து மே தின பூங்கா உருவாக்கப்பட்டு 17/09/2006 அன்று தயாநிதிமாறன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது
#மாநிலக்கொடி(1970)
இந்தியாவிலேயே முதன்முதலாக மாநிலத்திற்கென்று தனிக்கொடி உருவாக்கியவர் #கலைஞர்

25/08/1970 -பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்து மாநிலத்திற்கான தனிக்கொடி கோரிக்கை வைத்தார்

27/08/1970 -டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மாநிலக் கொடி மாதிரியை வெளியிட்டார்
#திருவாரூர்_அரசு_மருத்துவக்கல்லூரி
(2010)
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டு 27/07/2010 அன்று திறந்து வைக்கப்பட்டது.
#KalaignarThread
#தூத்துக்குடி_அரசு_மருத்துவக்கல்லூரி
(2000)
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டு 16/08/2000 முதல் செயல்படத் துவங்கியது.
#KalaignarThread #MedicalColleges
#அரசு_கேபிள்டிவி_நிறுவனம் (2008)

குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை வழங்கிட "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை உருவாக்கியவர் #கலைஞர்

15/07/2008 அன்று இந்த சேவையை துவங்கி வைத்தார்.
#TACTV #TNArasuCableTV
#செம்பரம்பாக்கம்_குடிநீர்_சுத்தீகரிப்பு_திட்டம் (2007)

#சென்னை குடிநீர் பஞ்சத்தை போக்கிடும் வகையில் செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் சுத்தீகரிப்பு திட்டத்தை 19/07/2007 அன்று திறந்து வைத்தார் #கலைஞர்.

#KalaignarThread #MetroWater
#Flextronics_Industrial_Park (2006)
ஶ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள Flextronics Industrial Park #கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

04/11/2006 அன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இதை திறந்து வைத்தார்.
#KalaignarThread #Industries
#சோத்துப்பாறை_அணை (2001)

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் இரண்டாவது உயரமான அணை சோத்துப்பாறை அணை கலைஞர் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது.

நீளம் - 345 மீட்டர்
உயரம் - 57 மீட்டர்
பரப்பு - 38.40 சதுர கி.மீ
முழுக் கொள்ளவு - 100 மில்லியன் கன அடி.
#KalaignarThread #Dams
#குடிநீர்_வடிகால்_வாரியம் (1971)

இந்தியாவிலேயே முதன்முதலாக மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக "தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்" என்ற அமைப்பை 14-04-1971 அன்றே உருவாக்கியவர் #கலைஞர்
#kalaignarThread #WaterBoard
#கிருஷ்ணா_நதி_குடிநீர்திட்டம் (2007)

புட்டபர்த்தி சாய்பாபாவிடம் ரூ.200 கோடி நிதியுதவி பெற்று கண்டலேறு கால்வாயை சீர்படுத்தி சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்கச் செய்தவர் #கலைஞர்

#KalaignarThread #WaterProjects
#Anna_International_Terminal, Chennai (1990)

சமூகநீதி காவலர் வி.பி சிங் பிரதமராக இருந்தபோது #கலைஞர் வைத்த கோரிக்கையை ஏற்று #சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் #அண்ணா பெயர் சூட்டப்பட்டது.
#KalaignarThread #ChennaiAirport
#உலகளாவிய_தானூர்த்தி_மீளாய்வு_மையம் (2006)
சென்னை ஒரகடத்தில் அமைந்துள்ள "Global Automotive Research Center" #கலைஞர் அவர்களின் முயற்சியால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
04/11/2006 அன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
#KalaignarThread
#மேட்டூர்_மின்உற்பத்தி_திட்டம் (2008)

600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் மின் உற்பத்தி திட்டம் 25-6-2008 அன்று #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.
#KalaignarThread #Electricity
#வல்லூர்_மின்_உற்பத்தி_திட்டம் (2007)

வல்லூர் 1ஆம் அலகு(500 MW)
வல்லூர் 2ஆம் அலகு (500 MW)
வல்லூர் 3ஆம் அலகு (500 MW)
ஆக மொத்தம் 1500 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட வல்லூர் மின் உற்பத்தி திட்டம் 13-8-2007 அன்று #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது

#KalaignarThread #Electricity
#வடசென்னை_மின்_உற்பத்தி_திட்டம் (2008)

வ.சென்னை 1ஆம் அலகு (600 MW)
வ.சென்னை 2ஆம் அலகு (600 MW)
ஆக மொத்தம் 1200 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட வடசென்னை மின் உற்பத்தி திட்டம் 18-02-2008 அன்று #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது

#KalaignarThread #Electricity
#தூத்துக்குடி_மின்_உற்பத்தி_திட்டம் (2009)

தூத்துக்குடி அலகு 1, 2 (1000 MW)
1000 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட தூத்துக்குடி மின் உற்பத்தி திட்டம் 28-01-2009 அன்று #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது

#KalaignarThread #Electricity
#Central_University_of_Tamilnadu (2009)

திருவாரூரில் அமைந்துள்ள "தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்" கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டு, 30/09/2009 அன்று திறந்து வைக்கப்பட்டது.
#KalaignarThread #University
#பொது_நுழைவுத்_தேர்வு_ரத்து (2007)

கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு தேவையற்ற சுமையாகவும், செலவு மிக்கதாகவும் இருந்த தொழிற்கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை 05/03/2007 அன்று ரத்து செய்து சட்டம் பிறப்பித்தவர் #கலைஞர்
#kalaignarthread #EntranceExam
#University_College_of_Engineering, திண்டிவனம் (2008)

திண்டிவனத்தில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி  #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டு 01/09/2008 அன்று திறந்து வைக்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #விழுப்புரம் (2008)

விழுப்புரத்தில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி  #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டு 01/09/2008 அன்று திறந்து வைக்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #பண்ருட்டி (2008)

பண்ருட்டியில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி  #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #திருக்குவளை (2008)

திருக்குவளையில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி  #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #ராமநாதபுரம் (2008)

ராமநாதபுரத்தில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி  #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #அரியலூர் (2008)

அரியலூரில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி  #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #ஆரணி (2009)

ஆரணியில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி  #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #பட்டுக்கோட்டை (2009)

பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி 15/09/2009 அன்று #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #திண்டுக்கல் (2009)

திண்டுக்கல்லில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #தூத்துக்குடி (2009)

தூத்துக்குடியில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #நாகர்கோயில் (2009)

நாகர்கோயிலில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
#University_College_of_Engineering, #காஞ்சிபுரம் (2010)

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

#KalaignarThread #EngineeringCollege
அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு இருக்கிறது, ஆனால் #காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு இல்லையே என்ற குறை இருந்து வந்தது. இதை உணர்ந்து 25/07/2010 அன்று காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கை ஏற்றி வைத்தவர் #கலைஞர்
#KalaignarThread
#மக்கள்_நலப்பணியாளர்கள் (1989)

1989ம் ஆண்டு #கலைஞர் ஆட்சியில் 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்தார். 1996ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் மீண்டும் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். #kalaignarthread
#சாலைப்_பணியாளர்கள் (1996)

1996ம் ஆண்டு #கலைஞர் ஆட்சியில் 10,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவர்களை டிஸ்மிஸ் செய்து வீட்டிற்கு அனுப்பினார்.
#kalaignarthread
#மதுரை_ஜவுளி_பூங்கா (2010)

மதுரை வாடிப்பட்டியில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள "மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா" #கலைஞர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.
திறக்கப்பட்ட நாள் : 18/12/2010
#kalaignarthread #Textiles
#கரூர்_ஜவுளி_பூங்கா (2011)

கரூரில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள " கரூர் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா" #கலைஞர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.

திறக்கப்பட்ட நாள் : 26/02/2011
#kalaignarthread #Textiles
#தொல்காப்பிய_பூங்கா

சென்னை அடையாறில் 358 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ‘தொல்காப்பிய பூங்கா’ #கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது

172 வகை மூலிகைகள் கொண்ட 1.37 லட்சம் செடிகள், 27 வகை மீன்கள், 91 வகை பறவைகள் கொண்ட இந்த பூங்காவை 22.01.2011 அன்று கலைஞர் திறந்து வைத்தார்.
#நெல்_கொள்முதல்_நிலையம்

விவசாயிகள் விளைபொருட்களை பல்வேறு திட்டங்களுக்காக அரசே நேரடியாக கொள்முதல் செய்துகொள்ள
1996 - 2001ம் ஆண்டில் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக முழுவதிலும் அமைத்தவர் #கலைஞர்.
#kalaignarthread #Farmers
#பாசனநீர்_பாதை_கட்டணம்_ரத்து (2000)

விவசாயிகள் பாசன நீரை எடுத்துச் செல்ல பாதைக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. 2000ம் ஆண்டு முதல் அரசு நிலங்களில் பதிக்கும் விவசாயக் குழாய்களுக்காக விதிக்கப்பட்ட பாதைக் கட்டணத்தை ரத்து செய்தார் #கலைஞர்
#kalaignarthread #Farmers
#ஆதிதிராவிட_விவசாயி_கடன்_ரத்து

2006-2010-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட தனது ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் #தாட்கோ நிறுவனம் மூலம் 2000-ம் ஆண்டு வரை பெற்ற கடன் தொகை வட்டி உட்பட 5 கோடியே 25 லட்சம் முழுவதுமாக தள்ளுபடி செய்தார் #கலைஞர்
#kalaignarthread #farmers
#பயிர்க்கடன்_வட்டி_ரத்து

2006ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன் விவசாயிகள் பயிர்க் கடன் வட்டி 9 சதவீதமாக இருந்தது. அதை படிப்படியாக குறைத்ததோடு மட்டுமல்லாமல் 2009ல் முறையாக பயிர்க்கடன் செலுத்தும் விவசாயிகள் வட்டி முழுவதையும் ரத்து செய்தார்.
#kalaignarthread #farmers
#2ஏக்கர்_நிலம்_வழங்கும்_திட்டம்

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை பெரியார் பிறந்த தினத்தில் துவங்கி வைத்தார் #கலைஞர் (17/09/2006)

1லட்சத்து 57ஆயிரத்து 57 நிலமற்ற ஏழை விவசாய குடும்பங்களுக்கு 2,11,356 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது
#kalaignarthread
#நெல்_ராஜராஜன்1000 (28/09/2010)

தஞ்சையில் நடைபெற்ற பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு விழாவில் செம்மை நெல்லுக்கு "ராஜராஜன் 1000" என்று பெயர் சூட்டியவர் #கலைஞர்.
#15ஏக்கர்_நில_உச்சவரம்பு
#கலைஞர் முதல்வரானதும் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து அளவை 15ஏக்கராக மாற்றினார்

கையகப்படுத்தப்பட்ட 2,12,995 ஏக்கர் நிலத்தை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்தார்.
1970ல் மட்டும் 1,79,000 ஏக்கர் உபரி நிலத்தை 1,37,000 பேருக்கு பிரித்து கொடுத்தார்
#புதிரை_வண்ணார்_நலவாரியம்

ஆதிதிராவிடர் இனப் பட்டியலில் 60வது சாதியாக உள்ள புதிரை வண்ணார்கள் மிகவும் பின்தங்கியுள்ளதாக வி.சி.க வைத்த கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தவர் #கலைஞர்

( http://G.O.Ms.No .114, AD&TW (ADW-6) Dept, dt 15.10.2009)
#அன்னை_தெரசா_மகளிர்_வளாகம்

கருணையின் வடிவம் அன்னை தெரசாவைப் போற்றும் வகையில் அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியதுடன் வள்ளுவர் கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்திற்கு அவரது பெயர் சூட்டியவர் #கலைஞர் (1.11.2010)
#kalaignarthread
அரசு சார்பில் மானியத்துடன் கடன் வழங்கி அதன் மூலம் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு காண "சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்" #கலைஞர் ஆட்சியில் 01/07/1999 அன்று தொடங்கப்பட்டது.
#kalaignarthread #Minorities
#சிறுபான்மையினர்_நல_இயக்கம்

சிறுபான்மையினர் சமூக பொருளாதார கல்வி முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்திட "சிறுபான்மையினர் நல இயக்கம்" கலைஞர் ஆட்சியில் 01/08/2007 அன்று துவங்கப்பட்டது.
#சிறுபான்மையினர்_ஆணையம்

மதவழி மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் நலன்களைப் பேணி காத்திட, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட சட்டப்படியான அங்கீகாரத்துடன் "மாநில சிறுபான்மையினர் ஆணையம்" #கலைஞர் ஆட்சியில் 01/08/2010 அன்று உருவாக்கப்பட்டது.
#Kalaignarthread #Minorities
#தொழில்நுட்ப_பயிற்சி_திட்டம் (2007)

தகவல் தொழில்நுட்பம், ஆடை வடிவமைப்பு, காலணிகள் வடிவமைப்பு போன்றவற்றில் தொழில் திறன்களை மேம்படுத்த வேலையில்லாத சிறுபான்மை மாணவ/மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்க “தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி திட்டம்” #கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது
You can follow @nithya_shre.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: