சச்சின் பேட்டிங்கின் போது எதிரணியினர் கோபமூட்டி ஆட்டத்தை சிதைக்க முயற்ச்சிப்பார்கள்.அது போல @rajinikanth கும் அரசியல் கட்சியினர் செய்கிறார்கள். எந்த பந்தை அடிக்கனும்,அடிக்காம விடனும்னு சச்சினுக்கு தெரியும்.
அதுபோல ரஜினிக்கும் தெரியும்.
எதற்கு பதில் சொல்லனும், சொல்லக்கூடாதுன்னு.
அதுபோல ரஜினிக்கும் தெரியும்.
எதற்கு பதில் சொல்லனும், சொல்லக்கூடாதுன்னு.
சச்சினுக்கு பரவாயில்லை களத்துக்கு வந்த பின் எதிர்ப்பாங்க... ஆனா ரஜினிக்கு... டீம் செலக்சன்ல இருந்தே பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.... களத்துக்கு வரும் முன்பே நம்மை வெறுப்பேத்தி, நல்லது செய்யனும்னு வரும் நம் கவனத்தை திசைதிருப்பி பழிவாங்கும் அரசியலுக்குள் தள்ளும் முயற்சி. இதை கடக்கனும்.
ரஜினி நல்லது செய்யனும்னு வர்ரார். இப்ப ரசிகர்களை வெறுப்பேத்தி, சண்டை போட வச்சு, ரசிகர்களுக்காக ரஜினி எதாவது பேசி, குறிப்பிட்ட கட்சிக்காரங்க கூட சண்டை போடுறதிலயே நம்ம கவனம் போய்டும். பின்ன எல்லாரும் மாதிரி தான் இவங்கனு சொல்லிடுவாங்க.
இன்னும் கட்சி அலுவலகம், கொடி கம்பம் , பேனர்,போஸ்டர்னு வைக்கும்போது பல பிரச்சனைகள் வரலாம். கட்சி பதவி கொடுப்பதிலும் குழப்பங்கள் வரலாம். ஆனால் எந்த இடத்திலும், எந்த விதத்திலும் சாதி,மத பின்புலத்தை வைத்து பாகுபாடு, சண்டை,வாதங்கள்,கோஷ்டிகள் வராமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.
மக்கள் சேவை தான் முக்கியம். அதிகாரத்தை பிடிப்பது மட்டுமே நோக்கமல்ல என்பதை எல்லாரும் புரிஞ்சிக்கனும். எங்க ஆள போடு, அவன போடாத, என்பது போல சாதி மத பாகுபாடுகள் எண்ணத்தில் கூட இருக்ககூடாது. அதை பேசுபவர்களுக்கு விளக்கி புரியவைத்தல் நல்லது. ரஜினிக்கு தான் ஓட்டு, சாதி மதத்துக்கக அல்ல.
எல்லா கட்சிமாதிரி தான் நாங்க இருப்போம், பெரும்பான்மை சிறுபான்மை,பணம்,புகழ், சாதி மதம்,சீனியர்,ஜூனியர், படிச்சவன், படிக்காதவன்னு பாகுபாடு பார்த்து பிரச்சனை வந்தா அதை சமாளிக்கிறதுலயே ரஜினி மற்றும் மேல்மட்ட நிர்வாகிகள் நேரத்தை வீணாக்கிட கூடாது. இதெல்லாம் புரியனும்னுதான் 2 வருச Gap.
ரஜினி தூய்மையானவர், வெளிப்படையானவர், நல்லவர்னு மக்கள் நம்புவதை போலவே அவர் கட்சியையும் நம்புவார்கள். மக்கள் நம்பிக்கையை நம் செயல்கள், நடத்தைகள் குலைத்துவிடாமல் பாத்துக்கனும். முக்கியமாக மத்த கட்சி போல மாஸ்,கெத்து காட்டுறேன்னு சொல்லி மக்களுக்கு எந்த இடையூறும் செய்யகூடாது.
மக்களுக்கு நல்லது செய்யனும்னு யார் வந்தாலும் சரி. அவன் தனியா பன்றான். எல்லாரையும் கூப்பிடாம போய்ட்டான், போன்ற பேச்சுகள், சூழ்நிலைகள் வராமல் ஆரம்பத்துலயே நமக்குள் புரிதல் வருவது முக்கியம். இதே கவனத்தில் ஒற்றுமையுடன் சுயநலமின்றி தலைவர் சொல்வதை செய்தால் போதும்
வரலாறு படைக்கலாம்.
வரலாறு படைக்கலாம்.