ஒரு நாடு. அந்த நாட்டில் திருடர் கூட்டம் ஒன்று இருந்தது. கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தது. திருடர்களை உயிரோடு பிடிக்க அரசர் பல முயற்சிகளை எடுத்தார். பலனில்லை. மக்கள் படும் அவதி அரசனை கோபமடையச் செய்தது.

1
'திருடர்களை கொன்று பிணத்தை கொண்டு வருபவர்களுக்கு லட்சம் பொற்காசுகள்', என்று ஒரு அறிவிப்பை அரசர் வெளியிட்டார்.

2
அன்றிலிருந்து மக்கள் நேரடியாக திருடர்களை தேடும் பணியை தொடங்கினர். சில திருடர்களும் பிடிபட்டனர். மக்கள் அவர்களை கொன்று பிணத்தை அரண்மனையில் ஒப்படைத்தனர். சன்மானத்தை பெற்றுக் கொண்டனர்.

3
விஷயம் திருடர் கூட்டத்தை அடைந்தது. மக்களிடமிருந்து தப்பிக்க வழி தெரியாமல் திருடர்கள் காட்டில் சென்று மறைந்து கொண்டனர்.

காட்டில் ஒரு மந்திரவாதி இருந்தார். அவருக்கு அரசனை பிடிக்காது. அரசனுக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அவர்களுக்கு உதவுவார்.

4
இந்த நிலையில் மக்கள் கூட்டமாக திருடர்களை தேடி காட்டுக்குள் நுழைந்தார்கள். பயந்துபோன திருடர்கள் மந்திரவாதியிடம் ஓடினர். 'தங்களை காப்பாற்றும்படி' கெஞ்சினர்.

5
அவர் சில மந்திரங்களை உச்சரித்தார். அவ்வளவுதான்! திருடர்கள் அனைவரும் சிங்கங்களாக மாறினர். காட்டில் அங்குமிங்கும் ஓடினர்.!!

திருடர்களை தேடி வந்த மக்கள் சிங்கக் கூட்டத்தை கண்டு பயந்து ஓடினார்கள். 'திருடர்களை தேடும் பணிக்கு சிங்கங்கள் இடையூறாக இருப்பதாக', அரசனிடம் முறையிட்டனர்.

6
'சிங்கங்களை கொன்று அதன் உடலை கொண்டு வருபவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும்', என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார் அரசர்.

சிங்கங்களை கொல்வதற்காக காட்டிற்குள் மக்கள் படையெடுத்தனர். சிங்கங்கள் மீண்டும் மந்திரவாதியிடம் ஓடின.

7
அவர்  மீண்டும் சில மந்திரங்களை உச்சரித்தார். இம்முறை சிங்கங்கள், யானைகளாக உருமாறின.

திடீரென்று யானைக் கூட்டம் வருவதைப் பார்த்த மக்கள் பயந்து போனார்கள். அரசனிடம் சென்று முறையிட்டனர்.

8
'திருடர்களை பிடிக்க தடையாக இருக்கும் யானைகளை கொல்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும்', என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அரசர்.

9
மக்கள் மீண்டும் காட்டிற்கு விரைந்தனர். இம்முறை அவர்களின் இலக்கு யானைகள். பயந்து போன யானைகள் மந்திரவாதியை சந்தித்தன.  மீண்டும் மந்திரங்களை உச்சரித்தார்.

10
இம்முறை யானைகள் அருவருக்கத் தக்க புழுக்களாக மாறின.

'திருடர்களே! கவலை வேண்டாம். புழுக்களை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். சிறிது காலம் புழுக்களாக இருங்கள். பிரச்னை ஓய்ந்த பின்னர் உங்கள் மீண்டும் திருடர்களாக மாற்றிவிடுகிறேன்', என்று சொன்னார் மந்திரவாதி .

11
புழுக்களாக உருமாறிய திருடர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், பிரச்னை வேறு ஒரு உருவில் முளைத்தது. மந்திரவாதி பேசியதை ஒரு ஒற்றன் கேட்டுக் கொண்டிருந்தான். அரசனிடம் சென்று நடந்ததை சொன்னான்.

சிறிது நேரம் யோசித்தார் அரசர். பக்கத்தில் அமர்ந்திருந்த மந்திரியின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.

12
சற்று நேரத்தில் ஒரு வீரன் காட்டுக்குள் சென்றான். மரத்தடியில் அமர்ந்திருந்த மந்திரவாதியின்  தலையை வெட்டினான். அரண்மனைக்கு திரும்பி சாதுவின் தலையை அரசனிடம் கொடுத்தான்.!!!

13
பக்கத்தில் இருந்த மந்திரி அரசனிடம் பேசினார்.

'அரசே! திருடர்களுக்கு உதவும் மந்திரவாதியின்  தலையை துண்டிக்கச் சொன்னீர்கள். ஆனால், புழுக்கள் உருவில் இருக்கும் திருடர்களை ஏன் தண்டிக்கவில்லை?' என்று கேட்டார் மந்திரி.

14
'நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தாதவர்களை ஏன் கொல்ல வேண்டும்? மந்திரவாதியின் மரணத்திற்கு பிறகு திருடர்கள், திருடர்கள் அல்ல. வெறும் புழுக்கள். இனி அவர்கள் நினைத்தாலும் யாருக்கும் தீங்கிழைக்க முடியாது. எந்த சக்தியும் இல்லாத கேவலமான புழுக்களாக மீதமுள்ள நாட்களை கழிக்கப் போகிறார்கள்.

15
இதுதான் அவர்களுக்கு காலம் அளித்த தண்டனை', என்றார் அரசர்.

16
இந்தக் கதையில் வரும் சூழல் நம் நாட்டில் உள்ளது.

பிரதமர் மோடியின் முயற்சியை தவறாக சித்தரிக்க பல அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் முயல்கின்றதை இன்னும் நிறுத்தவில்லை   500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு முழுப் பலனைத் தராது என்று இன்னும பல ஊடகங்கள் சொல்லி கொண்டிருக்கின்றன.

17
'எங்கள் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லுங்கள்', என்று பல தலைவர்கள் பிரதமரை வலியுறுத்துகின்றனர்.!

18
பிரதமர் அவர்களே! இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. பதிலளிக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆனால், மக்களை திசை திருப்பும் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

19
கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் அரசியல்வாதிகளே! ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். உங்களை மக்கள் கவனித்துக்கொண்டுள்ளனர் !

வித்தியாசத்தை மக்கள் உணர்ந்துள்ளார்கள். நீங்களும் வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ளும் காலம் விரைவில் வரும்.

20
கதையில் திருடர்கள் உருமாறினார்கள். அதைப் போல தங்கங்களாகவும், பினாமி சொத்துக்களாகவும் மாறியிருக்கும் கருப்பு பணத்தின் உருமாற்றத்தை அரசு கண்டுபிடிக்கும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று நம்புவோம்.

21
கமிஷனுக்கு ஆசைப்பட்டு அரசுக்கு எதிராக பலர் செயல்பட்டிருக்கிறார்கள். கதையில் வரும் மந்திரவாதியைப் போல பல கருப்பு அதிகாரிகள் கருப்பு பண முதலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்கள்.

22
அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். கருப்பு அதிகாரிகளின் கொட்டத்தை அடக்கினால், கருப்பு பண முதலைகள், எதற்கும் உதவாத புழுக்களாக மாறுவது நிச்சயம். 

நம்பிக்கையோடு காத்திருப்போம்.

🇮🇳🙏
You can follow @Raamraaj3.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: