இறைதேடலில் பல வருடங்களுக்கு பின் அரிய பொக்கிஷமாக கிடைத்த வேதாத்திரி மகரிஷி பெண்ணின் பெருமையை கூரும்பொழுது

“பெண் வயிற்றி லுருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்,”

என்கிறார்.

#WisdomofGuru
உலக சமாதானம் என்ற நூலில் ஒரு இடத்தில் வேதாத்ரி மகரிஷி விளக்கம் கொடுக்கும் போது,

“பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறென்ன
பெருமை இதை விட எடுத்துச் சொல்லுதற்கு?

++
பெண்ணினத்தின் இயல்பு பெற்ற மக்கள் தம்மை,
பிறர் வளர்க்க அனுமதியார், மனமும் ஒவ்வார்,
பெண்ணினத்தின் விடுதலைக்கு இந்தத் தியாகம்,
பேருலக அமைதிக்கும் அவசியம் ஆம்,”

என்று எழுதியுள்ளார்.  வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துக் கூறுவதற்கு?

++
வேறு ஒரு பெருமையும் நீங்கள் பேச வேண்டியதில்லை; எல்லாருமே பெண்களால் அளிக்கப்பட்ட, பெறப்பட்ட பிள்ளைகள்தான் என்பதை உணர்ந்தாலே போதும். சம உரிமை மாத்திரம் அல்ல, இன்னும் பிரத்தியட்சமாக சில உரிமைகள் கூட அவர்களுக்குக் கொடுத்து நாம் வாழ வைக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
++
போன காலம் எல்லாம் போகட்டும், இனி வருங்காலத்திலேயாயினும் முதலில் அவரவர்கள் வீட்டிலே தொடங்க வேண்டும்.

கருத்தரித்த நாள் முதற்கொண்டு ஒன்பது மாதம் பத்து நாள் வரையில் ஒரு தாய்க்கு என்ன துன்பம் இருக்கும்? என்று யாராலும் எண்ணிப் பார்த்ததால் ...

++
அதை விடத் துன்பம் உலகத்தில் மனிதனுக்கு இருக்க முடியாது.

எல்லையற்ற பெருவெளியாகி மெய்ப்பொருள், தன்னில் உள்ளமைந்துள்ள ஆற்றலால் நுண்ணியக்க மூலக்கூறாகிய ஆகாசமெனும் சக்தியாகி, சிவம் சக்தி இரண்டின் கூட்டுச் சேர்க்கையில், விகிதாச்சார அமைப்புக்கேற்ப

++
அணு முதல் அண்டகோடிகளாக விளங்குவதைச் சிந்தனையாற்றல் பெற்ற அனைவரும் அறிவோம்.

'பேரியக்க மண்டலமெனும்' பிரபஞ்சத்தின் ஆக்கம், நிகழ்வு, முடிவு எனும் மூன்றும் அணுக்கள் கூடுதல், இயங்குதல், பிரிதல் எனும் நிகழ்ச்சிகளேயாகும்.

++
எனினும், உயிரினங்கள், தோற்றங்கள், காப்பு இவற்றைப் பெண்மையினிடத்தே அருட்பேராற்றல் அமைத்திருக்கும், ஒப்புவித்திருக்கும் பேருண்மையை உணரும்போது எல்லோரும் பெண்ணினத்தின் பெருமையை உணர்ந்து போற்ற வேண்டியுள்ளது."

++
”இது மாத்திரமல்ல, சிறப்புணர்ந்த பெண்மதிப்பு’ என வேதாத்திரியத்தின் ஒரு அம்சமாகவும்,

‘மனைவி நல வேட்பு நாள் (Wife Appreciation Day‘ உலகமெங்கும் ஆங்கில மாதம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி கொண்டாடவைத்து பெண்ணின் பெருமைகளை எல்லோருக்கும் குறிப்பாக ஆண்களுக்கு உணர்த்தியவர் நம் மகரிஷி அவர்கள்.
காணொளி பதிவு

English:
Tamil:


Kannada:
Shared in guidance from elders where they say when thoughts of War and enmity comes counter with stronger thoughts of ♥️&🕊.

Disclaimer: If this earnest attempt to Thank the Almighty's creation (who in the form of Shakti is All-Pervasive)has offended anyone kindly forgive. 🙏🏼
You can follow @mveejay.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: