🚩 பகவத் கீதா 🚩
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய பரமாத்மானே நம:🙏

🚩யோக3ஸந்ந்யஸ்தகர்மணம்
ஜ்ஞாநஸஞ்சி3ந்நஸமச'யம் |
ஆத்மவந்தம் ந
கர்மாணி நிப3த்4நந்தி த4நஞ்ஜய||4-41

🚩 அர்ஜுனா!
யோகத்தினால்
கர்மங்களை துறந்தவனும்,
ஞானத்தினால்
ஸந்தேஹங்களை அறுத்தவனும்,
மனத்தை வசப்படுத்தியவனும் ஆனவனை
கர்மங்கள்
பந்தத்தில் ஆழ்த்துவதில்லை. 4-41

🌈🔷 பகவான் கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனை
தனஞ்ஜய என்று அழைக்கிறார்.
தனஞ்ஜயன் என்ற சொல்லுக்கு
பலவித தனங்களை
வென்றவன் என்று பொருள்.

“கர்மாணி ந
நிப3த்4நந்தி”-
இங்கு கர்மாணி
என்பது எல்லாவித கர்மங்களையும் குறிப்பிடும்.
அவை லௌகிகமாக இருக்கலாம்,
வைதிகமாக
தர்மமாக இருக்கலாம்,
அதர்மமாக இருக்கலாம்,
முன்பு செய்யப்பட்டவைகளாக இருக்கலாம்,
இப்பொழுது செய்யப்பட்டவைகளாக இருக்கலாம்
அனைத்து கர்மங்களும் அவனை பந்தத்தில் ஆழ்த்துவது
இல்லை.
🌈🔷 எவனை
பந்தத்தில் ஆழ்த்துவது
இல்லை ?
அவனுக்கு பகவான் கிருஷ்ணர் இங்கு
🌷“யோக3-ஸந்ந்யஸ்த-கர்ம”-
யோகத்தினால்
கர்மங்களை துறந்தவன்.
🌷“ஜ்ஞாந-ஸஞ்சி3ந்ந-ஸமச'ய”-
ஞானத்தினால் ஸந்தேஹங்களை துறந்தவன்.
🌷“ஆத்மவாந்”-
மனதை வசப்படுத்தியவன்
என்று மூன்று
விசேஷங்களை கூறுகிறார்.

🙏 ஓம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து🙏🙏
You can follow @Aditishiv1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: