நேற்றைக்கு ஹேராம் பார்த்தேன், மீண்டும் மீண்டும் என்னை உலுக்குபவை கடைசி 30 நிமிடங்களே, கமல் ஷாரூக்கிடம் கூறுவார், 'நீ இந்நாட்டின் வந்தேறி', ஷாருக் சொல்லுவார் 'உன் ராமனும் சைபர் கணவாய் வழியாக வந்தவரே' என்கிறார்களே. இப்படியாக கடுமையாக போய் கொண்டிருக்கும் விவாதம்.
அப்போது இந்துத்துவ தீவிரவாதிகள் ஷாருக்கை தேடிக் கொண்டு வருவார்கள் கமல் காப்பாற்ற முயற்சிப்பார் அப்போது ஷாருக் சொல்லுவார் அப்படியானால் நீ என்னை காப்பாற்ற விரும்புகிறாய், So Gandhi is right we can live as brothers, Gandhiji is the only insanity of this nation என்பார்
பின் இறந்து போவார் அது கமலுக்கு மாபெரும் திறப்பாக அமையும்.அப்படி என்ன செய்தார் காந்தி என்று பார்ப்போம்
அடிப்படையில் காந்தியின் மிகப்பெரிய போர் மனிதகுலத்தில் நிறைந்திருக்கும் வெறுப்புக்கு எதிரானது.அவர் கூறுவதில் எனக்கு மிகவும் பிடித்தது ,Nobody can hurt you without your permission
மேலும் அவர் கூறுகிறார், where there is a love there is a life என்று.
இதை அப்படியே தலைவருக்கும் பொருந்தும்.எனக்கு காந்தியின் கடைசி காட்சிகளில் தலைவரே ஞாபகத்துக்கு வந்தார். அதுவும் அரசியலில் கூறிய ஒரு வார்த்தை, 'எனது எதிரி கமலோ, ஸ்டாலினோ அல்ல வறுமை,ஊழல் போன்ற மக்கள் பிரச்சனைகளே'.
மேலும் அதை பின்பற்றறுகிறார்.
2 வருடங்களில் சில முறைகள் மட்டுமே கண்டனம் கொடுத்துள்ளார்.ஒன்று எச்.ராஜாவுக்கு எதிராக,பெரியார் சிலை உடைத்த போது,நாம் தமிழர் வன்முறையில் ஈடுபட்ட போது, எடப்பாடியார் கலைஞர் இறுதி இடம் கொடுக்க மறுத்த போது,சிலர் சுய லாபத்துக்காக வன்முறைக்கு தூண்டிய போது.
எல்லாவற்றிலும் பொதுவானது வெறுப்பு.எனக்கு எந்த தனிமனிதனோ,மதமோ,இனமோ,சாதியோ எதிரியில்லை என்று தெளிவாக இருக்கிறார்.
நாம் தலைவருக்கு செய்ய வேண்டியதென்பது இத்தகைய பண்பை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே.
நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோமா?
திராவிடர்களும், இந்துத்துவர்களும், தமிழ் தேசியர்களும் பேசும் அதே வெறுப்பு மொழி தான் நாமும் பேசுகிறோம்.
தலைவரை அவர்கள் திட்டும் போது சுள்ளென்று மண்டைக்கு ஏறும்.அந்த கோபத்தை இரண்டு நிமிடம் ஒத்தி வைத்தால் ஒரு தெளிவு பிறக்கும். பொறுமையாக மரியாதையாக அவர்களிடம் எடுத்துக் கூறலாம்.
அனைத்து மனிதர்களுக்கும் ஆன்மாவில் ஒரு நல்லறம் ஒளிந்திருக்கும் அதை தொட்டு பேசலாம்.அனைத்து ரசிகர்களும் குறைந்த பட்சம் 50 பேரிடம் இத்தகைய பண்பை கொண்டு சேர்ப்பதென்பதே நாம் தலைவருக்கு செய்யும் தொண்டு.
கர்த்தரிடம் மிக நெருக்கமாக இருந்த பேதுரு ஒருமுறை கர்த்தரிடம் தனது விஸ்வாசத்தை பறைசாற்றுவார் கர்த்தர் அவரிடம் நீ சேவல் கூவும் முன் மூன்று முறை என்னை மறுதலிப்பாய் என்பார் அவ்வாறே நிகழும். அதை போலில்லாமல் தலைவரிடம் நெருக்கமாக இருப்பவர்கள் மேலும் பொறுப்புணர்வுடன் செயல் பட வேண்டும்.
அவர்களும் வெறுப்பு,வசை எள்ளல் மொழியிலேயே பேசினால் தலைவர் கூறியே அவர்கள் அவ்வாறு செயல்படுவதாக பொது மக்கள் நினைப்பர்
நமது நிலையான மகிழ்ச்சி நமது வெற்றியில் தான் உள்ளது பிறரது தோல்வியில் அல்ல.தலைவர் இதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் அவரது ரசிகர்களாகிய நாமும் அதை செயல்படுத்துவமாக
ஏனேனில் அதுவே நம்மை பிறரிடம் இருந்து பிரித்து காட்டி தலைவரின் மேன்மையை புரிய வைக்கும்.
இது அனைவரும் சேர்ந்திழுக்கும் தேர் .இதில் சிலநேரங்களில் சிலர் தங்களால் தான் தேர் நகர்கிறது என்று நினைப்பர் அது இயல்பானதே அதை தவறென்று சுட்டி காட்டுவதும் இயல்பே.
ஆனால் உண்மையில் உள்ளமர்ந்திருக்கும் தெய்வம் மனது வைக்காமல் தேர் ஒரு அங்குலமும் நகராது என்பதை நம் அனைவரது ஆழ்மனமும் உணர்ந்திருக்கும்
You can follow @hunmid12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: