I read about astrophysics a lot because of the sheer love for it ❤️ படிச்சத கொஞ்சம் எல்லாருக்கும் சொல்லலாம்னு இந்த #thread. நம்ம வானத்துல தினமும் பாக்குற ஒரு விஷயம் தான் நட்சத்திரம். அது எப்படி உருவாகுதுன்னு பாக்கலாம் 😍
நட்சத்திரத்தோட வாழ்க்கைய அதோட சைஸ வச்சு மூனு விதமா பிரிக்கலாம். ரொம்ப குழப்பிக்க எல்லாம் வேண்டாம், மூனே விதம் தான், குட்டி ஸ்டார், மீடியம் ஸ்டார், பெரிய ஸ்டார் அவ்ளோதான். ஒரு குட்டி & மீடியம் ஸ்டார்ல என்னல்லாம் நடக்குதுன்னு இன்னிக்கி பாக்கலாம். பெரிய ஸ்டார் இன்னொரு நாள் 🎶
பெரிய ஸ்டாரோட life cycleல தான் black holes உருவாகுது. அத அப்றமா பாப்போம்

✨Stars, star dustல இருந்து உருவாகுதுன்னு சிம்ப்ளா சொல்லலாம். அதென்ன ஸ்டார் டஸ்ட்? நம்ம ஸ்கூல் டைம்ல படிச்ச ஹைட்ரசன் molecules ரொம்ப குறைவான வெப்பத்துல அங்கங்க மேகங்கள் மாதிரி மிதந்துகிட்டு இருக்கும்.
நிறைய ஸ்டார்டஸ்ட் ஒரு எடத்துல இருந்தா பெரிய ஸ்டார் உருவாகும். கொஞ்சம் இருந்தா சின்ன ஸ்டார்!

இதோட முதல் ஸ்டேஜ் protostar formation. கொஞ்சம் செல்கள் சேந்து ஒரு கரு உருவாகுற மாதிரி கொஞ்சம் மெட்டீரியல்ஸ் சேந்து இதுவும் குட்டி கரு உருவாகும் 😍
இப்படி கொஞ்சம் கொஞ்சமா துகள்கள் ஒன்னோட ஒன்னு ஒட்ட ஆரம்பிக்கும். இதையெல்லாம் ஒட்ட வைக்கிறது யாரு? கடவுளா? இல்ல! ஈர்ப்பு விசைன்னு நம்ம சொல்ற gravity. அது கொஞ்சம் கொஞ்சமா போர வர particles எல்லாத்தயும் ஒன்னாக்கிட்டே வரும்.
இப்படி மெட்டீரியல் கருவ சுத்தி கூட கூட நடுவுல வெப்பமும் அழுத்தமும் கூடிக்கிட்டே போகும். ஒரு ஸ்டேஜ்ல nuclear fusion நடந்து 2 hydrogen atom ஒன்னாகி ஒரு helium atom form ஆகும். இது ஒரு செயின் ரியாக்சன். நிக்காம நடந்துகிட்டே இருக்கும். இப்போ protostar ஸ்ட்டாரா மாறிடுச்சு 😍❤
நம்ம சூரியன் கூட இப்படி தான் உருவாகி அதுல இருக்க hydrogen & helium இன்னும் அத நமக்கு ஒளி குடுக்க வச்சுகிட்டு இருக்கு 🔆 இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டுன்னு கேக்கலாம்!

இதுக்கும் ஒரு முடிவு இருக்கு.
ஸ்டாரோட நடு செண்டர்ல இத்தன நாள் அத எரிய வச்ச helium & hydrogen தீந்து போயிரும். அப்போ என்னாகும் உள்ள குளிர ஆரம்பிக்கும் வெளிய சூடாகும். உள் பகுதி சுருங்கும் வெளிப்பகுதி விரிய ஆரம்பிக்கும். அப்படி ஆகும் போது நல்லா செக்க செவேல்னு ஆகிடும். இந்த ஸ்டேஜ்க்கு பேரு red giant
அதுல இருக்க hydrogen and helium combine ஆகி heavy elements form ஆகும். இந்த ஸ்டேஜ்ல ஒரு ஸ்டார் அதோட ஒரிஜினல் சைஸ விட 100மடங்கு பெரிசாகும். நம்ம சூரியனுக்கு அது நடந்தா அது மார்ஸ் வரைக்கும் விரியும். அதுக்கு இன்னொரு 5 பில்லியன் வருஷமாகும் 😄
சூரியன் மாதிரி மீடியம் சைஸ் ஸ்டார்னா அது வெடிச்சு சிதறி planetary nebula உருவாகும். இத God's eyeனு சொல்லுவாங்க. அவ்ளோ அழகா இருக்கும் ❤
You can follow @Puyalu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: