Breakup Storiesகளில் கருத்தொற்றுமை இல்லாமல் போனது, வீட்டில் ஒத்துக்கொள்ளாதது ன்னு பல காரணங்கள் இருந்தாலும் இந்த "ஏமாத்திட்டு போயிட்டாள்" காரணம் பெரும்பாலும் பகிரப்படுகிறது, ஓர் ஆணாக இந்த காரணம் தான் பெரும்பாலும் நான் கேள்விப்படுறேன் & நினைவில் நிக்குறமாதிரி சொல்றாங்க

1/n
ஒரு relationshipல எல்லா தேவைகளும் நிறைவேறும்போது(ம்) வேறொரு உறவைத் தேடுவார்களா?

அப்படி தேடுறதோ / அல்லது வர்ற proposalகளை ஒத்துக்கொண்டு, ஒரே நபர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு commitment கொடுக்கிற தன்மை பாலினம் சார்ந்ததா ?

2/n
புராணங்கள், இதிகாசங்கள், கதைகள், செவிவழி செய்திகள் தொடங்கி இப்போ சமூக ஊடகங்கள் வரைக்கும்
"பெண்களைத் திருப்தி படுத்த இயலாது, ஏமாற்றுவது அவர்களுக்கு கைவந்த கலை,
ஏமாற்றுவது பெண்களின் பிறவி குணம்,
நம்பத்தகுந்தவர்கள் அல்ல,
பெண்கள் சில்லறைகள்" ன்னு சொல்லப்பட்டே வருகிறது,

3/n
இந்த மாதிரி ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு commitment கொடுப்பது, காதலை வேறு பொருளாதார பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக்கிறது ங்கிற மாதிரி நிகழ்வுகளை நேரடியா எத்தனை பாத்துருக்கீங்க?

அதில் ஆண்கள் பண்ணது எத்தனை?
பெண்கள் எத்தனை?

நீங்க சந்தித்த ஆண் / பெண்களில் எத்தனை சதவீதம்?

4/n
சிலரை வைத்துக்கொண்டு பரப்பப்படும் செய்திகளைக்கொண்டு பெண்கள் சில்லறைகள் ன்னு ஒரு தவறான முன்முடிவுக்கு வந்தா, அதை கேட்டே வளர்பவர்கள் கூட பெண்கள் மீதே நம்பிக்கையற்று, relationshipகுள்ளேயே போகாம தவிர்க்குறாங்க,
போனா கூட தேவையற்ற சந்தேகங்களோடே போராடுறாங்க,

5/n
ஆண்களின் Insecurities.

சரக்குங்கிற ஒரு சாக்கு வச்சிக்கிட்டு பொலம்பும் போது தெரியும்;
தேவதை மம்பாங்க; அப்புறம் 2 ரவுண்டு போனப்புறம் தேவடியா ம்பாங்க.

இப்போ வர்ற படங்கள பாத்தாலே தெரியும் நெறய ஜோக்ஸ் இத சுத்திதான் இருக்கும்.

6/n
இந்த முன்முடிவு பிரச்சாரங்கள் ஆண்களின் வாழ்க்கையைப் பாதிக்குது; அந்த ஆண்களைச் சுற்றி வாழும் பெண்களை பாதிக்குது, சமூகத்தை பாதிக்குது

7/n
அறிவு வளர்ந்தப்புறம் முந்தின தலைமுறை ஆளுங்க எதெதல்லாம் நம்புறாங்க, அவங்க பண்ற சில்லறைத்தனம் ல்லாம் பாக்கும் போது அவங்க நமக்கு கத்துக்கொடுத்த எல்லாத்தையும் மீளாய்வு பண்ண தோணுது; மறக்கணும்னு தோணுது

8/n.
கேட்பதெல்லாம் ஆண்களின் குரல், கருத்துகள் ங்கிறதால அப்படி ஒரு தரப்பு கதைகள் / தீர்ப்புகள் மட்டும் தான் தெரியுது;

பெண்கள் தரப்பை கேக்கும்போது தான் சரியா உணரமுடியும். ல்ல?

9/n
ஆண்களின் versions சாகசமாவோ சாதாரணமாவோ கேட்கப்படும் சூழலில்,

பெண்களின் கதைகளைக் கேட்கிறோமா?
without any judgement?
You can follow @NeoDravidian.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: