தலைவர் பட ரிலீஸ் கொண்டாட்டங்கள்!!!

எங்க ஊரோட ஃபேமஸ் தியேட்டர் எங்க வீட்டுக்கு மிக அருகில் என்பதாலும் நான் பள்ளி செல்லும் வழி அது என்பதாலும் அடிக்கடி சும்மாவாச்சும் தியேட்டரை போய் பார்த்து வருவது உண்டு.

பள்ளி நாட்களில் வெளிவந்த பாட்ஷா முதல் பாபா வரையிலான தலைவர் படங்களின் (1/9)
முதல் நாள் கொண்டாடங்களை இங்கு கண்டுகளித்திருக்கிறேன்.

தலைவர் பட ரிலீஸ் கொண்டாட்டங்கள் ஒரு விழாவிற்கு இணையானதாகவே இருக்கும். ஒரு திருவிழா மனநிலையில் தலைவர் ரசிகர்கள் தியேட்டரை வலம் வந்து கொண்டிருப்பர். ரசிகர் மன்றத்தினர் ஒரு கெத்துடன் இங்கும் அங்கும் சுற்றிக் (2/9)
கொண்டிருப்பர். அவர்கள் பின்னால் டிக்கெட்டிற்கு முண்டியடித்து கொண்டு ஒரு கூட்டம் என ஒரே குதுகல காட்சிகள்.

டிக்கெட் கவுன்டருக்கு அருகில் பார்த்தோமானால் படத்தை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் தாய்மார்கள் கூட்டம். பெண்களுக்கு என்று தனி கியு இருக்கும் (3/9)
அதில் கூட்டமும் குறைவுதான். சற்று உற்று நோக்கினால் சில அண்ணன்கள் அந்த பெண்கள் கூட்டத்தின் அருகிலேயே நின்று கொண்டிருப்பார்கள்.

டிக்கெட் கொடுக்கும் போது "அக்கா அக்கா எனக்கு ரெண்டு டிக்கெட் எடுத்து குடுங்க" னு கெஞ்சி டிக்கெட் உஷார் செய்துவிடுவது இவர்கள் வாடிக்கை. (4/9)
பக்கத்து வீட்டு செல்வம் அண்ணன் இதில் கில்லாடி. அவரோடு சென்றால் எவ்வளவு கூட்டமிருந்தாலும் டிக்கெட் கிடைச்சிடும்.

தலைவர் ரசிகர்கள் தலைவரை ரசிக்கும் விதத்தை பார்க்கும் ஒருவர் நிச்சயம் தலைவரை முதலில் உற்று நோக்கி பின் தன்னால் ரசிக்கத் துவங்கி விடுவார்.

சிறுவயதில் செல்வம் (5/9)
அண்ணனுடன் தலைவர் படத்திற்கு போகும் போது அவர் தலைவர் ரசிப்பதை நான் அவ்வளவு ரசிப்பேன்.

எனக்கு தெரிந்ததெல்லாம், இந்த மனிதர் திரையில் தோன்றினால் ஒரு உற்சாக வெள்ளம் பிறக்கிறது. நம்மையறியாமல் அவருடன் ஒன்றிவிடுகிறோம். அது நம்மை துள்ளல் மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. கவலையை (6/9)
மறந்து குழந்தையாகிறோம். தாயின் மடி குழந்தையின் மகிழ்ச்சி நம்மை ஆட்கொள்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது இது ஒவ்வொரு முறையும் நடக்கிறது. பத்து முறை பார்த்தாலும் அத்தனை முறையும் இம்மனநிலையில் நாம் லயித்திருப்போம்.

தலைவர் ஒரு one-time wonder ஆக இல்லாமல் அவரின் காலத்தை வென்ற (7/9)
வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் திரையில் அவர் தரும் அளவற்ற உற்சாகம் மற்றும் ஆனந்த மனநிலை. அது ஒரு நேர்மறை எண்ணத்தை விதைக்கிறது. அந்த எண்ணம் ஒரு positive energyஐ உருவாக்கி நம்மை உற்சாகத்துடன் செயல்பட வைக்கிறது.

அந்த எனர்ஜியை அனுபவிக்க குழந்தை முதல் முதியவர்கள் வரை (8/9)
விரும்புகிறார்கள். அவரை ரசிக்கிறார்கள். காலப்போக்கில் அவர் நம்மோடு ஒன்றிணைந்து விடுகிறார்.

தலைவர் படங்கள் ஒரு நிகழ்வு அல்ல அது ஒரு அனுபவம். நம் வாழ்வின் இனிமையான பக்கங்களில் ஒன்று. (9/9)

#தலைவர்
You can follow @parthispeaks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: