#Thread

34 வருடங்களுங்கு வந்த படம்.. என்னை பொறுத்தமட்டில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று.. #ஆண்_பாவம் #TamilCultClassicMovie

திரைக்கதை, நடிப்பு, நகைச்சுவை, பாடல்கள், குறிப்பாக பிண்ணனி இசை என்று அனைத்துமே சிறப்பாக அமைந்த படம்..
படத்தின் ஆரம்பமே அமர்க்களமான மண்ணின் இசை மணத்தோடு.. நாட்டார் தெய்வ வழிபாடுடன்..

படத்தின் ஆரம்பத்தில் தொடங்கிய இந்த துள்ளல் படம் முடிகின்ற வரை தொடரும்..

#பறையிசை
சாமி கும்பட்ட உடனே பஞ்சாயத்து சீன்.. ஏதோ சீரியசா இருக்கும்னு பாத்தா.. 😂😂😂

// கெலருன குப்பைய கெலறாம புதுசா ஏதாவது கெலரு //

// ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க என் புருசன கேட்டு சொல்றேன் //
பாட்டியராஜன் தான் பாக்யராஜின் சீடன் என்று நிருபித்த காட்சி.. 😜🙈🙈
#VK_ராமசாமி அறிமுக காட்சி..

தவில் நாகசுரத்துடன்.. எழுந்து ஆட தோன்றும் இசை..

VKR அவருடைய dialogue delivery 😍😍

// கோயில கட்னேன் நீங்க யாரும் சாமி கும்பிட வர்ல

பள்ளிக்கூடம் கட்னேன் நீங்க யாரும் படிக்க வர்ல

கொளத்த வெட்னேன் நீங்க யாரும் குளிக்கவே வர்ல// 😂😂😂
#கொல்லங்குடி_கருப்பாயி

பாட்டி வேடத்திற்கான அருமையான தேர்வு.. அவர் பாடிய சின்ன சின்ன கிராமிய பாடல்கள் படத்தின் திரைக்கதை ஒட்டியே அமைந்திருக்கும்..

😍😍😍
பிரபலமான #முட்டிடுச்சா காமெடி சீன் 😍😍😍

இப்படியும் எளிமையாக நகைச்சவை சீன் எடுக்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு.. 👌👌
ஏன்டா ராமசாமி.. பொண்ணு கருப்பு தோலா செவப்பு தோலா?

ம்ம்.. புலித்தோலு.. கழுத கட்டுன்னா கட்டவேண்து தான.. 🤣🤣🤣🤣
#EvergreenIconicBGM

இதற்கு முன்பு ஒரு காட்சியில் இந்த பிண்ணனி இசை வந்திருந்தாலும் இந்த காட்சியிலிருந்து தான் தனித்து தெரிய ஆரம்பிக்கும்..

வீணையில் பிண்ணனி இசை சீதா நடந்து முடிக்கும்வரை, பின்னர் உடனடியாக புல்லாங்குழல் அந்த மறக்கமுடியாத தேனொழுகும் பிண்ணனி இசையை இசைக்கும் 😍😍😍
//செக்கு மாடு கேட்டுச்சுனா சினை மாடு தலையாட்டலாமா// 😜

இடையில் வீணையில் ஆரம்பித்து, குழலில் தொடர்ந்து, வயலினாக மாறி மறுபடி குழலில் இசை..

சீதாவின் முடிவு என்ன என்று தெரியும் வரை தபேலா, சம்மதம் தெரிவித்தவுடன் வீணையும் பின்னர் நாகசுரமும் அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையை பிரதிபலிக்கும்
#AnotherIconicComedy

//எங்கம்மாவ நீ கட்டிக்கும்போது உங்கம்மாவ நான் கட்டிக்கக்கூடாதா?//

😂😂😂🤣🤣🤣
படத்தின் theme music மறுபடி இந்த காட்சியில்..

இதில் நகைச்சுவையை காட்ட இடையில் பாட்டியை காட்டும்போது கூடுதலாக ஓசை..

மேரும் பாட்டியின் பாடிய மிகச்சிறந்த பாடல் இந்த காட்சியில்.. 😍😍😍

#KumbalangiNights புள்ளரங்குமா பாடல் கேளுங்க 😀😀
சீயக்காய்தூள்னு நினச்சு சீதா மிளகாய் தூள் கரைக்க தொடங்கியவுடன் ஆரம்பிக்கும் பிண்ணனி இசை.. 👌👌

பேச்சு இல்லாமலே காட்சியின் நகைக்சுவையை வெளிப்படுத்தும்.. 🤘
மறுபடி theme music..

இந்தமுறை வீணைக்கு பதிலாக நாகசுரத்தில் ஆரம்பித்து குழலில் theme music வாசித்து பின்னர் அதே theme music முதல் முறை வீணையில் முழுதும் வாசிக்கப்படும்.. 😍😍
பாண்டியனை பார்க்க மகிழ்ச்சியோடு சீதா வரும்போது குழலிசையும், அங்கில்லாமல் தூரத்தில் அவன் சென்றுகொண்டிருப்பதை பார்த்தவுடன் theme music-ஐ வயலினில் சற்று சோகமாகவும்..

காட்சியில் உள்ளவர்களின் உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்தது.. 😍😍
மற்றுமொரு சிறந்த நகைச்சுவை காட்சி..

பாண்டியராஜனின் body language.. ultimate 😍😍😂😂😂
காட்சி ஆரம்பம் முதல் தேங்காய் உடைக்க ஆரம்பிக்கும் வரை வரும் குழலிசை 😍

இருவரின் சந்தோசத்தை நாகசுரம் வெளிப்படுத்த, அடுத்த காட்சியில் கிடைக்கும் அதிர்ச்சியை மிருதங்கம் கூட்டிட, theme music சோகமாக மனதை பிழியும்.. 😞😞
பையனுக்கு காட்றதுக்கு பொண்ணோட போட்டோ இந்தாங்க..

அதெல்லாம் வேணாங்க.. நம்ம வீட்ல தேதி காட்ற காலண்டர் இருக்கு, அதுல மகாலட்சுமி போட்டோ இருக்கு, பொண்ணு இப்படித்தான் இருக்கும்னு பையன்கிட்ட சொல்லிடுறேன் போங்க..

பூர்ணம் விஸ்வநாதனின் உள்ளக்களிப்பை வீணை பிண்ணனி இசையாக வெளிப்படுத்தும் 👌
படத்தின் முதல் tragedy scene.. வீணை காட்சியின் இறுக்கத்தை காட்ட, பின் அதனுடன் சேர்ந்த வயலின் மனதை கணக்க வைக்கும்..

ரேவதிக்கு இனி பேச்சு வராது என்றவுடன் வயலின் கதறி நம்மை கலங்க வைக்கும்.. 😞😞😞😞
எங்க வீட்லயும் நிறைய சாமி இருக்கு, என்னைக்காவது ஒரு சாமியாவது பேசியிருக்கா, அதுக்காக அத வெளியவா எறிஞ்சிட்டோம்.. நீயும் எங்க வீட்டுக்கு வர்ற சாமி மாதிரி தான்.. 👌👌👌

இப்படி ஒரு சீரியசான சீன்ல நகைச்சுவை வேற.. VKR பாட்டியை கிணத்துல குதிச்சு பாக்க சொல்றது 😂😂
குழலில் மனதை வருடம் மெல்லிய சோக இசையில் ஆரம்பித்து இறுதியில் வயலினில் theme music வந்து சோகத்தை பன்மடங்காக வெளிப்படுத்தும்.. 👌👌
மற்றுமொரு சிறந்த பிண்ணனியசை.. நகைச்சுவை காட்சிக்கு..

கணவர் பெயரை பாடலால் பாட்டி சொல்வது.. 👌👌👌
காட்சியின் பதட்டத்தை ட்ரம்ஸ் கொடுக்க, அதை வயலின் தொடர, பாண்டியன் சீதா இறந்த செய்தி வந்தவுடன் நாகசுரம் காட்சியின் இறுக்கத்தை பல மாங்காக அதிகரிக்கும்.. 👏👏
படத்தின் ஆரம்பம் போல முடிவும் #பறையிசை 😍😍

பறையில் ஆரம்பித்து, இடையிடையே trumpet ஊத, பின்னர் ரேவது கை கொடுத்தவுடன் காதல் கசக்குதய்யா பாடல் குழலில் ஊத அதற்கு பறையிசை பிண்ணனி இசையாக படம் முடிவடையும்..

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்.. 💪💪💪
#பாண்டியராஐன் #இளையராஜா மற்றும் இதில் சிறப்பாக நடித்த அனைத்து நடிகர்களும் நன்றி 🙏🙏🙏

#முற்றும்

பி.கு: ஜனகராஜ் காமெடி சிறப்பாக இருக்கும்.. காட்சியமைப்பு மற்றும் இசை பற்றி எழுதியதால் அதை பற்றி எதுவும் சொல்லல.. மன்னிச்சூ 🙏
You can follow @pachchakkili.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: