#நான்_கிணற்றில்_விழுந்த_விதம் 😁

வீட்ல பொண்ணு போட்டோ காட்டி பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க..

அடுத்த வாரம் ஞாயிறு மாலை பெண் பார்க்க சென்றோம்.. பெற்றோர், அண்ணன் அண்ணி, தங்கை மற்றும் நான்..

போற வழியெல்லாம் நான் 👇
பெண் வீட்டிற்கு போய் வழக்கமான நலம் விசாரிப்புக்கு பின் பெண்ணை கண்ல காட்னாங்க.. ஒரு முறை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டோம்..

மை மைண்ட் வாய்ஸ்.. “என்னங்கடா போட்டோல ஒரு பொண்ண காட்டிட்டு நேர்ல வேற பொண்ண காட்றீங்க?”

பி.கு: அது காலேஜ் படிக்குறப்போ எடுத்த போட்டோன்னு பிறகு சொன்னாங்க..
வீடு திரும்பும்போது அம்மா “எங்க எல்லோருக்கும் பொண்ணு புடிச்சிருக்கு, உனக்கு எப்படின்னாங்க?”

நம்மலவிட பொண்ணு கலரா இருக்கு எப்படியும் வேண்டாம்னு சொல்லப்போதுன்ற எண்ணம்தான் இருந்தது.. எல்லோருக்கும் பிடிச்சதால நானும் சரின்னுட்டேன்..
மறுநாள் பெண் வீட்டிலிருந்து போன் பண்ணி வர்ற ஞாயிறு மாப்பிள்ளை வீட்டுற்கு வரவேண்டிய ஃபார்மாலிட்டிய வச்சிடலாம்னாங்க..

அதை கேட்டதும் மீ 👇
பெண் வீட்டிலிருந்து ஒரு கூட்டமே அடுத்த ஞாயிறு அன்று வந்தாங்க.. வழக்கமான உரையாடல்களுடன் விடைபெற்று சென்றார்கள்..

இரண்டு நாள் கழித்து என் மொபைல்க்கு பெண்ணின் அப்பா போன் செய்து வரும் ஞாயிறு வீட்டுக்கு வரமுடியுமா பொண்ணு உங்ககிட்ட பேசனுமாம் என்றார்..

அதை கேட்டவுடன் மீ 👇
சார் (நான்தான்) weekdays-ல ரொம்ப பிஸியா இருப்பார்.. அதனால வர்ற ஞாயிறு அன்று சாயங்காலம் வர்றேன் என்றேன்.. அவரும் சரின்னார்..

வீட்ல எல்லோரும் எனக்கு அட்வைஸ்.. அடேய் எடக்குமடக்க பேசி நல்ல சம்பந்தத்தை கெடுத்துறாத.. பாத்து பேசுன்னு..

எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டிட்டு வந்தேன்..
பெண் வீட்டிற்குள் நுழைஞ்சா பொண்ணோட அப்பா மற்றும் அவரின் நண்பர்கள் ஒரு 6 பேர் உட்காந்திருந்தாங்க..

ஒரு கம்பெனி இண்டர்வியூ ரூமுக்குள்ள போன அதே ஃபீலிங்.. 😂😂

கிட்டதட்ட ஒரு மணி நேரம்.. மாத்தி மாத்தி கேள்வி.. என்னை பத்தி, என் வேலை பத்தி நடு நடுல பொதுவான விசயம்னு..
என் மைண்ட் வாய்ஸ்:

என்னடா இது பொண்ணு கிட்ட பேச வர சொல்லி பெருசுங்க கிட்ட பேச வச்சிட்டாங்க.. ட்ரிக்ஸ்ஸா நம்மல ஏமாத்திட்டாங்களா?
அதுக்கப்புறம் பொண்ணோட அப்பா “இங்க வாம்மா”ன்னு சொல்ல.. ஒரு பொண்ணு வந்துச்சு..

அட என்னடா இது அன்னைக்கு பாத்த மாதிரி இல்லையே இந்த பொண்ணுன்னு மைண்ட்ல நினச்சேன்..
அப்புறம் பொண்ணோட அப்பாவே, மாடிக்கு கூட்டிட்னு போம்மா.. உன் ப்ரண்ட்ட இவர்ட பேச சொல்லு.. இங்க வந்தா நாங்க இருக்கிறதால சரியா பேசமாட்டான்னார்..

ஓ.. அப்போ இது நாம பேச வந்த பொண்ணில்லையான்ற மாதிரி ரியாக்‌ஷன்..
முதல் மாடிக்கு போனேன்.. அங்க hall-ல பொண்ணு இருந்தாங்க.. 2-3 மூன்று நிமிசம் அமைதி.. சரி இது வேலைக்காகாதுன்னு நானே பேச ஆரம்பிச்சேன் என்னைப் பற்றி என் குடும்பம் பற்றி.. மற்றும் பல. கிட்டதட்ட ஒரு மணி நேரம்.. நான் மட்டும் தான் பேசுறேன்.. பொண்ணு கேட்டுட்டு மட்டும்தான் இருந்தாங்க 😂😂😂
அப்புறம் தான் நானே ரியலைஸ் பண்ணேன் நான் ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கேன்னு.. நிறுத்திட்டு.. நீங்க ஒன்னும் பேசலையேன்னு சொன்னேன்..

அவங்க மைண்ட் வாய்ஸ் “அடேய் நீ பேச்ச நிறுத்தினா தானடா நான் பேச முடியும்..”
சிம்பிளா 3 கன்டிசன் போட்டாங்க.. Post graduation செய்யனும், அதன் பிறகு வேலை பாக்கனும், மூன்றாவது சொல்லவியலாது (பெர்சனல்)..

இதுக்கு உங்களுக்கு சம்மதம்னா எனக்கு சம்மதம்னாங்க..

எனக்கு ஓகேன்னு சொல்லிட்டேன்..
பொண்ணோட ப்ரைண்ட போய் பொண்ணோட தம்பிய கூட்டி வந்தாங்க.. அவன் என்ன 2nd floor (மொட்ட மாடிக்கு) கூட்டி போனான்..

மீ - என்னடா floor-க்கு ஒரு இன்டர்வியூ வக்கிரீங்க.. டூ மச்டா இதெல்லாம்..
அவன் என்கிட்ட ஓய்வு நேரத்துல என்ன செய்வீங்க, நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா, outing எங்கெல்லாம் போவீங்க போன்ற கேள்விகளை கேக்குறான்..

சரக்கு, தம்மடிப்பு போன்ற பழக்கம் இருக்குன்னு இன்டேரக்டா டெஸ்ட் பண்றாராம்..

நம்மகிட்டயேவா?
பேசிட்டு இருக்கும்போதே வீட்ல இருந்து போன் வந்திடுச்சு.. என்னடா போய் 3 மணி நேரம் இன்னும் திரும்ப வரல எங்கிருக்கன்னாங்க..

பொண்ணு வீட்ல இருக்கேன்னு சொன்னேன்..

வீட்ல எல்லோரோட ரியாக்‌ஷன் 👇
போனை வச்சிட்டு திரும்பினா.. பொண்ணோட தம்பி இன்னொருத்தர அறிமுகப்படுத்துறான்.. இவர் மாடில ஒரு போர்ஷன்ல வாடைக்கு இருக்கும் அங்கிள்.. போன முறை நீங்க வந்தப்போ இல்ல.. இப்போ பாக்கனும்னார்னு..

அப்புறம் அவர்ட ஒரு 15 நிமிசம் பேசினேன்..

பேசும்போது மை ரியாக்‌ஷன் 👇
அப்புறம் அப்பா கூப்பிறார்னு பொண்ணோட தம்பி கூப்பிட, நான், அந்த அங்கிள் கீழ போனோம்..

காப்பி கொடுத்தாங்க.. குடிச்சிட்டு, எல்லோரிடமும் சொல்லிட்டு கிளம்பிட்டேன்..
வீட்டு வந்ததும் எல்லோரும் அவ்ளோ நேரம் என்னடா பேசினேன்னாங்க..

மீ 👇

உண்மைய சொன்னேன்..
இரண்டு நாள் கழித்து பெண் வீட்டிலிருந்து போன் செய்து 3 வாரம் கழித்து நல்ல நாள் இருக்கு, உங்களுக்கு சம்மதம்னா அன்றே நிச்சயம் செய்துக்களாம்னாங்க..

வீட்ல எல்லோருக்கும் ஆச்சர்யம் கலந்த சந்தோசம்.. நான் எடக்கு மடக்கா பேசிருப்பனோன்னு பயந்ததால..

அம்மா ரியாக்‌ஷன் 👇
நிச்சயம் முடிந்து 3 மாதம் கழித்து திருமணம் நடந்தது..

10 வருமாச்சு.. 😀

இந்த பெண் பார்க்கும் படலம் என்றும் இளமையுடன் மனதில் இருக்கு..

#முற்றும் 🙏
You can follow @pachchakkili.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: