மன்மோகனும், மோடியும் :

#Thread

மன்மோகன் சிங்குக்கு இணையாக இந்திய ஊடகத்தால் கேலிசெய்யப்பட்ட ஒரு பிரதமர் வேறு யாரும் கிடையாது. ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் ஆட்சியிலிருந்த போது இரண்டுவகையான தாக்குதல்களை ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் தொடுத்தது.
ஒன்று திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் போன்றோருக்கு அமைச்சராவதற்கு எந்தத்தகுதியும் இல்லை என்கிற பொய் பரப்புரை.
வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய ரயில்வேயை லாபகரமானதாக ஓடச்செய்த லல்லு பிரசாத், தகவல் தொழில்நுட்ப இயக்கத்தையும் சந்தையையும் புரட்டிப்போட்டு, சாமானியரை அதிகாரம் பெறவைத்த ஆ.ராசா போன்ற யாருக்கும் 'அமைச்சராக தகுதியில்லை' என கூச்சமில்லாமல் மனுத்துவம் பேசியது ஆர்.எஸ்.எஸ் பரிவாரம்.
2ஜி விவாகாரத்தில் ஊடக அடியாட்கள் 'எந்தத் தகுதியும் இல்லாத... ஒரு சாதாரண வழக்கறிஞருக்கு எப்படி இவ்வளவு முக்கியமான துறையை ஒதுக்க முடியும்?' என கூவினார்கள்.
இன்னொருபுறம் இந்தியாவின் மிகச்சிறந்த நிதியமைச்சரான ப.சிதம்பரம், ராஜிய வல்லுனரான சல்மான் குர்ஷித், மிகவேகமாக இந்திய ராணுவத்தை நவீனப்படுத்திய ஏ.கே.அந்தோனி உள்ளிட்ட அனைவரின் அறிவையும், அனுபவத்தையும், உழைப்பையும் பிம்பக்கேலி செய்தார்கள்.
மிகப்பெரிய வெறுப்புக்குரியதாக அவர்களின் அறிவையும், ஆற்றலையும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் ஊடக அடியாட்கள் மூலம் கட்டமைத்தது.
சோகக்கொடுமை என்னவென்றால், உலகின் தலைசிறந்த தாராளவாத பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் மிகக்கேவலமான முறையில் சீண்டப்பட்டுக் கொண்டே இருந்தார்.
அவரின் பொறுமை, அமைதி, நிதானம், சகிப்புத்தன்மை போன்ற தலைமைத்துவத்தின் மேன்மையான ஆகிருதிகளை 'கையாலாகத்தனம், லாயக்கற்றவர், வெறும் பொம்மை' என மீண்டும் மீண்டும் கூவச்செய்த பொதுவெளியில் அவரின் இயக்கத்தை குலைத்தார்கள்.
சல்மான் குர்ஷித் தனது 2ஜி குறித்த புத்தகத்தில் சொல்வதுபோல 'வெளியில் நிம்மதியாக நடமாட முடியாத அளவுக்கு நிம்மதியின்மைக்கு' ஆளாக்கினார்கள்.
பார்ப்பனிய ஜரூரியான ஜெயலலிதா ஏதோ குஸ்தி சண்டைக்கு, தொடைக்கு மேல் இடுப்புக் கச்சையை உருட்டிக் கொண்டு அழைப்பது போல தமிழ்நாட்டிலிருந்து மன்மோகனுக்கு வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருந்தார்.
தன்முனைப்பைக் காட்டும் அசிங்கமான பிம்பத்தோற்றத்துக்காக, மன்மோகன் சிங்க்குக்கு தைரியமில்லை, வீரமில்லை என்கிற பொருள்பட தமிழ்நாடு முதலமைச்சர் லெட்டர் பேடை பயன்படுத்தி அதிகாரத் திமிறில் கடிதம் எழுதினார்.
நிலைமை எவ்வளவு மோசமானது என்றால், பிரதமர் அலுவலகத்திலிருந்து 'தயவுசெய்து இப்படி தரங்கெட்ட கடிதங்களை எழுதாதீர்கள்' என ஜெயலலிதாவைக் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு பரிதாபகரமானதாக இருந்தது.
2014 தேர்தல் உச்சக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது, 2014 ஜனவரியில் மன்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நீங்கள் 'weak' பிரதமர் என பாஜக, மோடி பிரச்சாரம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு :
'..அகமதாபாத் வீதிகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்வதுதான் வலிமையான பிரதமருக்கு அளவுகோல் என்றால், அப்படிப்பட்ட வலிமையான பிரதமர் இந்தியாவுக்குத் தேவையில்லை' என நெற்றிபொட்டில் அடித்தார்
அந்த பேட்டியில் தான், 'History will be kinder to me than contemporary media' என்கிற மகத்தான வாசகத்தை அவர் பிரயோகித்தார். ஆனால், அந்த வாசகத்தை அன்றைக்கு அத்தனை பத்திரிக்கைகளும் கேலி செய்தன. கிண்டலான, நக்கலான தலையங்கங்களை எழுதின.
2014 தேர்தல் முடிந்த ஓராண்டில் 2015ல் பீகாரில் தேர்தல் நடந்தது. ஓராண்டுக்குள்ளாகவே மாட்டுக்கறி சர்ச்சையால் வட இந்தியா குலுங்கியது. பீகார் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் போதே, மன்மோகன் சிங் எப்படி தவறாக புரிந்துகொள்ளப்பட்டார் என்பது தொடர்பான கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
'அய்யா எங்களை செருப்பால அடிங்கய்யா' என்கிற கவுண்டமணியின் மீம்ஸ்கள் 2015 தொட்டே வரத்தொடங்கிவிட்டன.
இதோ, மோடி ஆட்சி முடிந்திருக்கிறது.
இந்தியாவின் எந்தவீதியும் அகமதாபாத் போன்ற தசைக்குவியலில், ரத்த ஆறில் நனையக்கூடும் என்கிற அச்சம் இருக்கிறது. 4 ஆண்டுகள் என்பது வரலாறுக்கு ஒரு கணக்கே கிடையாது. வரலாற்றின் கடலுக்கு முன்பு 4 ஆண்டுகள் என்பது ஒரு துளி போன்றது. ஆனால், மன்மோகன் சிங் சொன்னது பலித்திருக்கிறது !
சுதந்திர இந்தியாவில் மன்மோகன் வகித்த பாத்திரம் மிக மிக மிக வித்யாசமானது; காலத்தால் திணிக்கப்பட்டது.
ஒரு சிக்கலான கூட்டணி ஆட்சியை வைத்துக்கொண்டு, மிக சிக்கலான கட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் தான் இன்றைக்கு இந்தியா பிழைத்திருக்கிறது. ஒன்று பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு - வி.பி.சிங். தந்தது.
இன்னொன்று தாராளமயமாக்கம் கொண்டுவரப்பட்ட முதல் 15 ஆண்டுகள், அதைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களால் இந்தியா திணறிக்கொண்டிருந்தபோது 'தாராளமயமாக்கத்தை மையப்படுத்தாமல் - விரிவுபடுத்தும் நோக்கத்தோடு' மன்மோகன் சிங் தந்த ஆட்சி.
மோடி அரசாங்கம், இவ்வளவு மோசமான பெருமுதலாளி லாப அரசாங்கம் நடத்தியும், தொடர்ச்சியாக அமைப்புசாரா, சிறு,குறு தொழில்கள் மீது தாக்குதல் நடத்தியும் இந்தியா நீடித்துக் கொண்டே இருக்கிறது என்றால் மன்மோகன் கையில் எடுத்த 'பரவலாக்கப்பட்ட தாராளமயமாக்கம்' என்கிற நடைமுறையின் உயிர்ப்புதான் காரணம்
அவர் நேருவைப் போன்ற வரலாற்று நாயகர் கிடையாது; சாஸ்திரி, மொரார்ஜி, சரண் சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவுக்கு கிடைத்த பார்ப்பனிய ஆதரவு அவருக்கு கிடையாது. இந்திராவைப் போன்ற துர்கை அல்ல அவர். ராஜிவைப் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றி அவருக்கு கிட்டவில்லை.
தேவ கௌடா, ஐ.கே.குஜ்ரால் போல கடைந்தெடுத்த அரசியல் நுட்பக்காரர் அல்ல அவர். வாஜ்பாய் போன்ற நுட்பமான இந்துத்துவ உற்பத்தியும் அல்ல.
ஆனால், நேரு காணவிரும்பிய இந்தியாவின் அசலான வடிவங்களை சாத்தியப்படுத்த டர்பன் தலையும், விறுவிறு நடையும், அதிர்ந்துகூட பேசாத மொழியும் கொண்ட மன்மோகனால் தான் முடிந்தது.
தாராளமயமாக்கத்துக்கே உரிய மோசமான உள்ளீடுகள் மன்மோகன் ஆட்சியில் இருந்ததும் உண்மை. வளரும் முதலாளித்துவ ஜனநாயகத்தில் அந்த சலனங்களும், இம்சைகளும் தவிர்க்க முடியாதவை என்றே நாம் மதிப்பிடவேண்டும். ஆனால், அதையெல்லாம் தாண்டிய உள்ளார்ந்த சமூக நேயமும், கரிசணையும் மன்மோகனுக்கு இருந்தது.
இன்றைக்கு மீண்டும் ஒரு கூட்டணி ஆட்சியை நோக்கி இந்தியா நகர்கையில் இரண்டு வலிமையான மனிதர்களை அது உள்வாங்க வேண்டியிருக்கிறது. ஒன்று வி.பி.சிங், இன்னொருவர் மன்மோகன்.
You can follow @VGananathan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: