16-ஜுலை-2016 - ல் எழுதியது

மணிரத்னம் - A Elite கை கூலி

இன்றைக்கு பல இளைஞர்களின் Role Model ஆக சித்தரிக்கப் படும் இவருக்கும் காஷ்மீரில் இன்று நடக்கும் இராணுவ அராஜகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது .....!

எப்படி, வாருங்கள் பார்ப்போம்.

Thread....👇🏻

#Kashmiris
1991 பிப்ரவரி 11 - வடக்கு காஷ்மீரின் 'குப்வாரா ' மாவட்டம் போஷ்பாரா - Kunan கிராமங்கள்.

"Mob Militants " என்ற ஆபரேசனுக்காக மேற்கண்ட இரு ஊர்களை இராணுவம் சுற்றி வளைக்கிறது!

இரவு ஆனதும் ஆண்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சிறை வைக்கிறது இராணுவம்!

#Kashmir
#Kashmiris
👇🏻
அதன் பின் ஒவ்வொரு வீடாக இருக்கும் பெண்களை இராணுவ முகாமுக்கு இழுத்து செல்கிறது இந்திய இராணுவம்!
கதறல், கூக்குரல் எதையும் பொருட்படுத்தவில்லை!
உட் பக்கம் தாழ் போட பட்ட வீட்டு கதவுகள் துப்பாக்கிகளின் பின் புறத்தால் உடைத்து திறக்கப் பட்டது!

👇🏻

#Kashmiris
#Kashmir
கிடைத்த பெண்கள் அனைவரும் இந்திய இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.

அங்கே இருக்கும் ஆண்களுக்கோ நடப்பதே புரியவில்லை!

மறுநாள் சீரழிக்கப் பட்ட பெண்கள் குப்பையை போல ஊருக்குள் வீசி விட்டு சென்றது இந்திய இராணுவம்!

#Rape
#abused

👇🏻
மொத்தமாக பாதிக்கப்பட்டதாக வெளியில் தெரிந்தது 31 பேர் தெரியாது பலர்.!

இச் சம்பவம் நாடு முழுதும் பரவவே சில நாட்கள் பிடித்தது!
இராணுவத்தின் உண்மை முகம் வெளிவரத் துவங்கியது!!!

அப்போது தான் பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை உள்ளே விட ஆரம்பித்திருந்தது இந்தியா!

#FDI
இந் நிலையில் இச் சம்பவம் பெரிய சிக்கலை இராணுவத்திற்க்கு கொடுக்கும் என அஞ்சியது இந்தியம்!

கைய பிசைந்து நின்ற நிலையில்,

அடுத்து அடுத்து நடந்தது தான் Behind the Screen அயோக்கியத்தனங்கள்!

அதற்க்கு சரியாக கை கொடுத்தார் மணி ரத்னம்.

#ManiRathnam
#ROJA
#Kashmiris
காஷ்மீர் போராளிகள் எல்லாம் தீவிரவாதிகளாகவே இருப்பார்கள் என்றும், ஈவு இரக்கம் அற்றவர்கள் என்ற ரேஞ்சில் தேச பற்றை ஊற்றி பிசைஞ்சி ஓர் தட்டு நிறைய நமக்கு கொடுக்கப் பட்ட அல்வா தான் 'ரோஜா'!

இதில் அந்த படத்தில்

'தமிழா தமிழா நாளை உன் நாடே ன்னு பாட்டு "

#Kashmiris
#Roja

👇🏻
எரியும் இந்திய கொடியை உருண்டு பொரண்டு" தன் உடலால் அணைப்பது போன்ற எழுச்சி மிகு காட்சி எல்லாம் உண்டு!

இதில் தான் பலருக்கு இந்திய நாட்டு பற்று பீறிட்டு வெளிவந்தது! நான் உட்பட!

படம் வெளியான நான்கு மாதங்களில் மேலும் சில நான்கைந்து மொழிகளில் மொழி மாற்றம் செய்தது இந்திய அரசு!

👇🏻
அதே வருடம் ஆகஸ்ட்டு 15ல் வேக வேகமாக Door Dharshan ல் ஒளிபரப்பு செய்தனர்.

நான்கைந்து மொழிகளில் அடுத்து வந்த ஞாயிறுபோதும் மாதம் இரு முறையாவது ஒளிபரப்பு ஆகியிருக்கும் படம்.

---- ம் ம் என்ன பாஸ், அந்த தமிழா தமிழா பாட்டா???

👇🏻

#TV
#DoorDharshan
#Roja
#August15
ஹ ஹா ஹ ஹா, அட போங்க பாஸ் அவிங்களே மொள்ள மாரித்தனம் பண்ணானுக இதுல Logic பாக்குறீங்களே!!!

இப்படி, மாதாமாதம் ஒளிபரப்பு ஆனதில் பத்தில் 7 பேருக்கு காஷ்மீர் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் தானாகவே ஓர் வெறுப்பையும், தீவிரவாதிகள் பிம்பத்தையும் விதைத்தது இந்திய அரசு!

#Kashmiris
👇🏻
இதற்க்கு பின்னர் - கிட்ட தட்ட 30% FDI ஐ பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை அழைத்து வந்தனர்.
அதற்க்கு சொல்லப் பட்ட காரணம் தீவிரவாதிகளிடமிருந்தும் பாக். கிடம் இருந்தும் நம்மை காக்க!

அப்பறம் என்ன!!!
புது புதுசா விமானம், ஜெட் எல்லாம் வந்தது!

#Kashmiris
👇🏻
அதன் பின் சிறு சிறு கலவரங்கள், மத சண்டைகள் இவை அனைத்தும் சர்வதேச சந்தையை மட்டும் மகிழ்வுறச் செய்தது!

மக்களுக்கோ பயத்தை மட்டுமே ஊட்டி வந்தனர்.

1992 - டிசம்பர் - பாபர் மசூதி இடிப்பு இதற்க்கு பெரிய அளவில் எதிர்ப்பு மாற்று சமூகத்திடம் இருந்து வராததே ரோஜா படத்தின்

👇🏻
#BabarMosque
நோக்கத்தினை கிட்ட தட்ட நிறைவேற்றியிருந்தது!

இப்போது நடக்கும் விடுதலை போராட்டத்தை பற்றி "அல்லு சில்லு " எல்லாம் ஒரு புண்ணாக்கும் தெரியாமல் காஷ்மீரிகள் தீவிரவாதிகள் என்று முடிவுக்கு வர இப் படம் ஓர் வகையில் விதை!

👇🏻
மணிரத்னம் செய்த துரோகம் காஷ்மீகளுக்கு மட்டும் அல்ல! நமக்கும் தான்,

2002 ம் ஆண்டு -
சில நாட்களில் மிக வேகமாக எடுத்து வெளியிடப் பட்ட படம் 'கன்னத்தில் முத்தமிட்டால் "

அதில் 'விடுதலை புலிகள் ' இயக்கத்தினை தவறாக சித்தரித்து "குழந்தை போராளிகளை " பயன் படுத்துவதாக காட்டி இருப்பார்!
👇🏻
இதில் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளுங்கள், 2000 - 01 தொடக்கத்தில் தான் குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டோரை போர் களத்தில் நிறுத்துவது தவறு என ஐ.நா தீர்மானம் கொண்டு வருகிறது! அடுத்த ஒரே வருடத்தில் இத் திரைப்படம் வெளி வருகிறது!

#LTTE
#UN
👇🏻
சில அறிவுஜீவி நொண்ணைகள் புலிகளின் ஆரம்ப கட்ட காலத்தில் 85,90 களில் இளம் வயதினர் பயிற்சி மேற்கொண்ட படங்களை வைத்துக் கொண்டு 'குழந்தை போராளிகளை ' நீங்க பயன் படுத்திய ஆதாரத்தை பாருங்க ' என நம்மிடம் மணிக் கணக்கில் பேசுபவருக்கு, 2001 க்கு பிறகு தான் இச்சட்ட விதிமுறை வந்தது தெரியாது!
👇🏻
ஒருமுறை பாரதி ராஜ தேசிய தலைவரை சந்திக்க சென்ற போது, இது குறித்து கடுமையா சொல்லி அனுப்பியிருந்தார் தலைவர். எங்கள் கட்டமைப்பு பற்றி அவருக்கு என்ன தெரியும்???
எங்கள் போராட்டத்தை எப்படி அவர் கொச்சை படுத்தலாம் என்று!

#LTTE

👇🏻
அதை பாரதி ராஜாவும் 2006 - ஜூலை மாத ஆனந்த விகடனில் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார். இப்போது வரை மணி ரத்னம் எனும் ஓர் 'உயர் தர கருத்து திணிப்பு கை கூலியிடம் " இருந்து இதுவரை எந்த பதிலும் இதற்க்கு இல்லை!

#LTTE
👇🏻
இது மட்டுமா????

உயிரே படத்தில் இஸ்லாமியர்கள் கிட்ட தட்ட எல்லோருமே தீவிரவாதிகள் என்ற ரேஞ்சுக்கு தான் சித்தரிப்பு இருக்கும்!

உண்மையில் ஊரில் நடக்கும் பல மத கலவரத்துக்கும் இவரின் கீழ்த்தரமான சிந்தனைகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை பலர் கவனிக்க தவறி விட்டோம்!

#Kashmiris
<End>
You can follow @pkcomrade.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: