நீலகிரில வாழுற பாதிக்கும் மேற்பட்ட ஆட்கள் படுகர் இன மக்கள்தான் ...அவங்களைப்பத்தி எனக்கு தெரிஞ்சத த்ரெட் போட போறேன்..விருப்பம் இருக்குறவங்க படிக்கலாம் 😊
படுகா ஒரு மொழி . கன்னடம் மாதிரியான சாயல் ..ஆனா எழுத்துரு கிடையாது..கொஞ்ச காலமாத்தான் எழுத்துரு கண்டுப்டிச்சுருக்காங்க நடைமுறைக்கு வரல ..பேசுறது படுகுனாலும் படிப்பு தமிழ் வழிதான் இருக்கும்..
நீலகிரில கிட்டத்தட்ட பாதி பேரு படுகாஸ் தான்..இவங்க கலாச்சாரம் வித்தியாசமானது ..பண்டிகை கல்யாணம் எல்லாமே அதிகமான சாஸ்திரங்கள் வேறுபட்டிருக்கும்.. 😊
பண்டிகை விசேஷம்னா பலகாரங்கள் ஸ்பெஷல் ..குறிப்பா துப்பதிட்டு ..ஸ்விட் பூரி மாதிரி இருக்கும்
ஹெத்தையம்மன் பண்டிகை பொதுவான பண்டிகைஎல்லோரும் வெள்ளை வேட்டி வெள்ளை டிரஸ் போட்டு , வெள்ளை வேட்டி சுத்துன மரத்தடி கல்லுதான் சாமியா கும்பிடுவோம் ...மூதாதையர் பாட்டி ஒருத்தங்க சாமியானதா வரலாறு ..ஒரு குச்சி , குடை , கல்லுல வேஷ்டி சுத்துன கோவில் இதான் எல்லா ஊருலையும் பொதுவானது..
கோத்தகிரி பக்கம் பேரகனி ஊர் ஹெத்தையம்மன் பண்டிகைதான் ரொம்ப பேமஸ்..அந்த கோவிலுக்கு சின்ன வயசுலையே ஒரு பையன பூசாரியா போட்ருவாங்கலாம்..அந்த பையன் தனியா கோவில்ல தங்கி பொண்ணுங்கள பாக்காம சாமி கவனிக்கணும்.. பண்டிகை அன்னிக்கு அம்மன்குடை, குச்சியோட பூசாரி பையன் வந்து சாஸ்திரம் பண்ணுவாங்க
ஓரளவு வளந்ததும் மறுபடி வேற பூசாரி எடுத்துக்குவாங்க ..படிப்பு இல்லாம வளர்ரதால கோவிலுக்கு வர பணமெல்லாம் அந்த பையனுக்குனு கேள்விப்பட்டிருக்கேன் ..சரியா தெரில...
கல்யாணம் : படுகா பையனோ பொண்ணோ அவங்க இனத்துலதான் கட்டி வைப்பாங்க...ஜாதகம் பாக்குறது கிடையாது..வரதட்சனை கேக்கமாட்டாங்க..பொண்ணு வீட்ல என்ன குடுக்குறாங்களோ அதான்
கல்யாணத்துக்கு முதல்நாள் பொண்ணு வீட்ல சொந்தபந்தங்கள், சாஸ்திரங்கள் முடிச்சு
பையன் வீட்லிருந்து 3 பேரு வந்துருப்பாங்க அவங்க பூ வச்சு சாஸ்திரம் பண்ணுவாங்க ...மறுநாள் காலைல ஊரு சனமெல்லாம் சேர்ந்து போய் பையன் வீட்ல கல்யாணம் முடிச்சுட்டு வருவாங்க
கல்யாணத்துக்கு சீரா பாத்திரங்கள் கூட அரிசி , சர்க்கரை , ராகிலாம் மூட்டை கணக்குல தராது பழக்கம் இருக்கு ...3,5,9 அப்டினு அவங்க வசதிக்கு தகுந்த மாதிரி பண்ணிப்பாங்க ..(சர்க்கரைலாம் வச்சா நீர்த்துபோய்டும்னு மாப்பிள்ளை வீட்ல கடைக்கு வித்துருவாங்க)
கல்யாணம் பேசி வச்சப்புறம் பொண்ணு வீட்லையும் மாப்பிள்ளை வீட்லையும் நல்ல நாள் பாத்து பொதுவான இடத்துல உப்பு வாங்கிப்பாங்க ..உங்க பொண்ண குடுங்கன்னு ஒரு சடங்கு மாதிரி ..

சாஸ்திரங்கள் அதிகமா இருக்கும் கல்யாணத்துல
முதல் நாள் பொண்ணு அவங்க ஊருல இருக்குற எல்லோர் வீட்டுக்கும் போய் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும் .. மறுநாளும் இது நடக்கும் ...

கல்யாணத்துக்கு மட்டுமில்ல பொதுவா பெரியவங்க புருஷன்கிட்ட ஆசிர்வாதம் வாங்குற பழக்கம் இருக்கு ..
கல்யாண சாஸ்திரத்துல தண்ணி எடுத்துட்டு போறது (கூட சில பெண்கள் வருவாங்க சாஸ்திரம் ) , வீடு கூட்றது , பாத்திரம் கழுவுறது கூட சடங்கிருக்கு..
ஒரு பொண்ணு மாசமா இருந்தா வளைகாப்பு மாதிரிலாம் function தனியா வைக்க மாட்டாங்க .. சொந்தக்காரங்க வீட்டுக்கு பலகாரம் செஞ்சு கொண்டு வரதில்லாம, ஊருல
100 வீடு இருந்தா அத்தனை பேரும் ஒவ்வொரு நாள் சொல்லி வச்சு வீட்டுக்கு சாப்ட கூப்டுவாங்க .
காலை நைட்னு அவங்க பேரு எழுதி வச்சு அவங்க வீட்டுக்கு விருந்துக்கு போற பழக்கம்தான் இப்போவும் ..முன்னமே சொல்லி வச்சு அன்னிக்கு வந்து கூட்டிட்டும் போய் விருந்து சாப்ட வைப்பாங்க..
மாசமா இருக்குற பொண்ணுங்க 5 மாசத்துக்கப்புறம் அவங்க வீட்ல சாப்டுறதே ரேர்தான்..
ஒற்றுமை அதிகம் ..ஒரு பண்டிகைனா எல்லோரும் எல்லோர் விட்டுக்கும் போறது ..அதுலயும் அந்த ஊருல பொறந்த பொண்ணுங்க அன்னிக்கு எல்லோர் வீட்டுக்கும் போவாங்க ..சாயந்திரம் ஒரு இடத்துல அவங்க கலாச்சார படி டான்ஸ் நடக்கும் யாரு வேணா ஆடுவாங்க ..பாக்கவே அவ்ளோ அழகா இருக்கும்
சாமை அரிசி எல்லா நல்லது கெட்டதுலயும் பயன்படுத்துற வழக்கம் இருக்கு ..கல்யாணம் , இழப்பு எல்லா சாஸ்திரத்துலையும் இந்த அரிசி வச்சுதான் பண்ணுவாங்க ..மாசமா இருக்குற பொண்ணுங்களுக்கு நெய் கரைச்சு சாமை அரிசி சாப்பாடு வச்சு தரது வழக்கமாயிருக்கு ...
ஒருத்தங்க இறந்துட்டா ஊரெல்லாம் சொல்லி அத்தனை நெறைய சாஸ்திரம் பண்ணி , இறந்தவங்க கட்டில் சுத்தி அன்னிக்கும் ஆட்டம் பாட்டுனு கடைசியா ஒருவகை பாட்டு வச்சு அழுது அனுப்பி வைக்குற பழக்கம் இருக்கு ..அவங்க ஆன்மா நல்லபடி போய் சேரணும்னு பாவங்கள் எல்லாம் தீரணும்னு நெறைய சாஸ்திரம் பண்ணுவாங்க
படிப்பு வேலைன்னு வெளில வந்து இப்போ கொஞ்சம் மாறியிருக்காங்க.இருந்தாலும் கலாச்சாரம் காப்பாத்தப்படுது ..

படுகா பாட்டு , வீடியோ சாங்ஸ்லாம் நெட்ல நெறைய இருக்கு 😍 ..interest இருக்குறவங்க கேட்டு பாருங்க ..உங்களுக்கும் பிடிக்கலாம்..

பொறுமையா படிச்சதுக்கு நன்றி 😊😊😊
You can follow @thanga_magal.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: