என்னங்கடா பெரிய love??

அப்பா அம்மா அண்ணன் தங்கச்சி நண்பன் இவங்களைவிடவா love பெரிசு ??

Love பெருசு அல்ல.

அது என்னில் பாதி.

சின்னவயதில் ஏதாவது பிரச்சனை என்றால் தந்தையையும்,
கவலை என்றால் தாயையும் தேடி செல்லும் மனம்.
ஒரு கட்டத்தில்,
" வயசான காலத்தில் அவங்களை கஷ்டபட வைக்கவேண்டாமென மனம் நினைக்கும்"
கவலைகளை தன்னுள் புதைத்து, மனம் அப்போது ஒரு தனிமையை உணரும்...
சகோதரியை தேடிச் செல்லும்போது,
" நான் அவர்ட்ட பேசிட்டு சொல்றேன்" என்பாள்.
கைமாறிப்போன உறவாள், மனம் ஒரு மீண்டும் தனிமையை உணரும்.
நண்பனை தேடிச்செல்லும்போது,
" மச்சான் வீட்ல ஒரு function. நான் பிறகு call பண்றேன்" என்பான்.
பொதுவுடைமையை நினைத்து, மனம் ஒரு தனிமையை உணரும்...
சகோதரனை தேடிச்செல்லும்போது,
" பாவம் அவனுக்கே ஆயிரம் பிரச்சனைகள்.
இதில் நாம வேறயா" என மனம் திரும்பும்போது ஒரு தனிமையை உணரும்.
அப்போது மனம்கவலைகளுக்கு தீர்வைவிட, ஆறுதலைத்தான் தேடும்.
பிரச்சனைகளுக்கு தைரியம் தரும் தந்தையாக,
கவலைகளுக்கு ஆறுதல்தரும் தாயாக,
நான் இருக்கேன் எனும் நண்பனாக,
எனக்கு மட்டுமே சொந்தமான,
எனக்கு மட்டுமே உரிமையான,
எனக்கே எனக்கு உரித்தான,
என்னை மட்டுமே நேசிக்கும் ஒருகாதலை,
மனம் தேடுகிறது
காதல் ஒருவருக்கு #வலிகளின்_நிவாரணியாக இருக்க வேண்டுமே தவிர, #வலிகளின்_காரணி யாக இருக்க கூடாது..
You can follow @mfawmis.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: